வெண் குறுமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sh:Bijeli patuljak
வரிசை 74: வரிசை 74:
[[ru:Белый карлик]]
[[ru:Белый карлик]]
[[scn:Nana janca]]
[[scn:Nana janca]]
[[sh:Bijeli patuljak]]
[[simple:White dwarf]]
[[simple:White dwarf]]
[[sk:Biely trpaslík]]
[[sk:Biely trpaslík]]

15:26, 24 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சிரியசு விண்மீனுக்கருகில் சிறு புள்ளிபோல் தெரிவது சிரியசு-பி

மிக அதிக நிறையுடைய சில விண்மீன்கள் தவிர்த்து, அனைத்துபிற விண்மீன்களின் பரிமாண முடிவுப்புள்ளியைக் குறிக்கும் நிலை வெண் குறுமீன் (white dwarf star) ஆகும். பார்ப்பதற்கு மங்கலாகத் தோன்றும், அடர்வான, கோளையொத்த அளவு கொண்ட இது விண்மீனின் இறுதி நிலையாகும். சூரியனின் அணுக்கரு எரிபொருள் தீர்ந்தபின், எரிதலின் இறுதி கட்டத்தில் அது வெடித்து, (வியாழன், சனி ஆகிய) பெருங்கோள்களைப் போன்ற தோற்றமளிக்கும் வெளிவிடு விண்முகிலை உருவாக்கும். [1] அதனுள் உருவாகியுள்ள ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தமானது ஈர்ப்புவிசையினால் ஏற்படும் உள்நோக்கிய வீழ்தலைக் கட்டுப்படுத்தும். எந்த விண்மீன் வெண் குறுமீனாக உருமாற்றம் அடையும் என்பதைக் கணக்கிட உதவும் நிறையின் அளவு சந்திரசேகர் எல்லை என்று குறிக்கப்படுகின்றது. முதன்முதலில் (1862) காணப்பட்ட வெண் குறுமீன் சிரியசு என்ற விண்மீனின் துணைமீனான சிரியசு-பி ஆகும்.

சிறப்பியல்புகள்

  • சூரியனையொத்த நிறையுடைதாக இருப்பினும், இதன் அளவு பூமியை ஒத்ததாக இருப்பதால் அடர்த்தி மிகவும் அதிகமாகவிருக்கும் (1 x 109 kg/m3). பூமியின் அடர்த்தியை (5.4 x 103 kg/m3) ஒப்பிடுகையில் வெண் குறுமீன் 200,000 மடங்கு அடர்வு மிகுந்து இருக்கும் [2]; அதாவது, சீனிப்படிக அளவுள்ள (வெண் குறுமீனின்) ஒரு சிறு துண்டு நீர்யானையின் எடையுடையதாய் இருக்கும். [3]

வெண் குறுமீனின் வகைகள்

கலைச்சொற்கள்

  • பரிமாண முடிவுப்புள்ளி - evolutionary endpoint;
  • வெளிவிடு விண்முகில் - emission nebula ;
  • ஈர்ப்பெதிர்-நிலை எலக்ட்ரான் அழுத்தம் - degenerate-electron pressure;
  • சீனிப்படிகம் - sugar cube.

குறிப்புதவி

  1. நாசா [1]
  2. நாசா [2]
  3. டேவிட் டார்லிங் [3]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_குறுமீன்&oldid=1332144" இலிருந்து மீள்விக்கப்பட்டது