குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 6: வரிசை 6:
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.
முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.
அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.
== நீரேற்றம் ==
பொதுவாக குளம் மூன்று வகையில் நீரேற்றம் பெறுகிறது. அவை மழை நீர், ஆற்று நீர், மற்றும் நீரூற்று.


==மக்கள் குடியிருப்புக்கள்==
==மக்கள் குடியிருப்புக்கள்==

07:43, 22 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குளம்

குளம் (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.

தோன்றிய வரலாறு

  முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதை தடுக்க குட்டையாக உருவாக்கினர்.
அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர்.நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது.

நீரேற்றம்

 பொதுவாக குளம் மூன்று வகையில் நீரேற்றம் பெறுகிறது. அவை மழை நீர், ஆற்று நீர், மற்றும் நீரூற்று.

மக்கள் குடியிருப்புக்கள்

இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன. அநேகமாக குளத்தை சூழ பல கிராமங்கள் இருக்கும். அவ்வாறான சமயம் அக்கிராமங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், அந்த பிரதேசத்துக்கான பொது பெயராக குளத்தின் பெயராலாயே வழங்கப்படுகின்றது.

குளம் கட்டுமான முறைகள்

பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காக சற்று வலைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளம் நிரம்பி நீர் வெளியே பாய்வதற்கான வசதிகளும் குளத்தில் இருக்கும்.

வாய்க்கால்

குளத்தின் நீர் மக்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில், குளத்தை அண்மித்த கிராமங்களுக்கு, விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நீர் வினியோகம் குறிப்பிட்ட திணைக்களத்தினால் வாய்க்கால் ஊடாக வழங்கப்படும். குளத்து நீர் வாய்க்கால் ஊடாக பல மைல்கள் தூரம் வரை வழங்கப்படும்.

குளியல் மற்று ஏனைய பயன்பாடுகள்

விவசாயத் தேவைகளுக்கு மட்டுமன்றி, குளத்தை அண்மித்து வாழும் மக்கள், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் குளத்து நீரையே பயனபடுத்துவர். சிலர் குளத்தில் இருந்து பாய்ந்து செல்லும் வாய்க்கால் நீரை பயன்படுத்துவர்.

குடிநீர்

குளத்து நீரை மக்கள் அநேகமாக குடிநீராக பயன்படுத்துவதில்லை.

ஆபத்து

கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, அதன் அண்மிக்க கிராமங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகும். அவ்வாறானப் போது குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படும். குளம் உடைப்பெடுத்து பாரிய ஆபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க குறிப்பிட்ட நிர்வாகத்தினர் மக்களுக்கு அறிவித்து அப்பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறு அறிவித்தல் வழங்கப்படும். அதனையும் மீறி ஆபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்கள் பல உள்ளன.

மீன்பிடித்தொழில்

குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது.

இலங்கை குளங்கள்

இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பல குளங்களை கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்கு பகுதிகளிலேயே உள்ளன.

இந்திய குளங்கள்

தெப்பக்குளம்

நீரை தேக்கிவைக்கும் நீர்நிலைகளில் ஒன்றான கோயில்களில் உள்ள குளங்கள், மக்களின் விவசாயம் மற்றும் வாழ்வியல் தேவைகளுக்கு கட்டப்படும் பாரிய குளங்களின் வகையில் சேராது. அவை கோயில் தேவைகளுக்கு மட்டுமே கட்டப்பட்டிருக்கும் தெப்பக்குளங்கள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளம்&oldid=1330480" இலிருந்து மீள்விக்கப்பட்டது