குதிராம் போஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29: வரிசை 29:


[[பகுப்பு:இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் தூக்கிலிடப்பட்டவர்கள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைக்கு முன் தூக்கிலிடப்பட்டவர்கள்]]


[[bn:ক্ষুদিরাম বসু]]
[[bn:ক্ষুদিরাম বসু]]

01:19, 16 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குதிராம் போஸ்

குதிராம் போஸ் (Khudiram Bose , Bengali: ক্ষুদিরাম বসু ; 1889 – 1908) வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதில் புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 வயதில் தூக்குமேடை ஏறியவர்,

இளமை

1889- ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் நாள் வங்காளத்தின் மிதுனப்பூர் மாவட்டத்தில், ஹபிப்பூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை திரிலோகநாத் பாசு, தாயார் லட்சுமிப்ரியதேவி. சிறு வயதிலேயே நாட்டுப்பற்றுடன் வளர்ந்த குதிராம், தனது பதின்மூன்றாம் அகவையில் 1902 ல் அப்போதைய வங்கச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

சிறு வயதிலிருந்தே கீதையைப் படித்து அதன்படி நடக்க முயன்றார். ஆங்கிலேய ஆட்சியை முறியடிக்கத் தானும் ஏதாவது வழியில் உதவ வேண்டும் எனக் கருதினார். 1904 ல் மேதினிப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஆசிரியர் சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டதல் கிட்டியது. அங்கு அவருக்கு பல புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. தனது பதினாறாவது யுகந்தர்(ஜுகந்தர்) இயக்கத்தில் இணைந்து ஆங்கிலேய ஆட்சியை மறைமுகமாக எதிர்த்தார். மூன்றாண்டுகள் (இறக்கும் வரை) இவ்வியக்கத்தில் இருந்தார். [1]

வங்கப் பிரிவினை

1905-வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது.[2] தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908 ல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.

குண்டு வீச்சு

ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் முசாபர்பூரில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் சென்றனர். [3]1908, ஏப். 30 ம் தேதி, அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர். [4]ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.

தண்டனை

குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தேரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். [5]மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார். அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அதன்படி, 1908-ஆம் ஆண்டி ஆகஸ்ட் 11 ம் தேதி குதிராம் போசுக்கு, முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு 18 வயது. அவரது கையில் பகவத் கீதையுடன், வாய் " வந்தே மாதரம் என முழங்க அவர் உயிர் பிரிந்தது[6] [7]

உசாத்துணை

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிராம்_போஸ்&oldid=1324741" இலிருந்து மீள்விக்கப்பட்டது