நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.2) (தானியங்கி இணைப்பு: hi:टेलिविज़न और रेडियो धारावाहिक
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது '''தொலைக்காட்சி நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து [[தொலைக்காட்சி நிகழ்ச்சி|ஒளிபரப்பப்படும்போது]] அது '''தொலைக்காட்சி நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.


==இந்தியாவில்==
==இந்தியாவில்==

13:43, 11 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஒரு கதை, திரைவடிவம் பெற்றுத் தொடர்கதை போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்போது அது தொலைக்காட்சி நாடகத் தொடர் (Soap Opera) என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் தொடர்கதைகளின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது இலக்கு அளவீட்டுப் புள்ளியை அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு, டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.

இந்தியாவில்

ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி போன்ற இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. ஹிந்தி மொழியில் ஜீ தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றது.

இலங்கையில்

சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, நேத்ரா தொலைக்காட்சி போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் தமிழில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. ரூபவாகினி, சிரச தொலைக்காட்சி போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகள் சிங்கள மொழியில் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.

தமிழ் மொழியில்

ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.
தமிழில் தொடராக வரும் கதை வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

குடும்பக் கதை

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சின்ன மருமகள், ராதா கல்யாணம், நானும் ஒரு பெண் போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

மர்மக் கதை

விடாது கறுப்பு எனும் தொடர் இவ்வகைக்குள் அடங்கும்.

கடவுள் நம்பிக்கைக் கதை

ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகம்மா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தேவி போன்ற தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

புராணக் கதை

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விஷ்ணு புராணம், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இராமாயணம் போன்ற நாடகத் தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

வரலாற்றுக் கதை

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை, வீர சிவாஜி போன்ற நாடகத் தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.

நகைச்சுவைக் கதை

மொழி மாற்றம் செய்யப்பட்டவை

ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. குறிப்பாக, ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஹிந்தி மொழியிலமைந்த தொடர்கள் பெரும்பாலும் அதன் சகோதரத் தொலைக்காட்சிகளான ஜீ தமிழ், ஜீ மராத்தி, ஜீ தெலுங்கு என்பனவற்றிலும் ஒளிபரப்பப்படும்.

விருதுகள்

இந்திய டெலி விருதுகள், இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள், ஜீ ரிஷ்தே விருதுகள், ஜீ தங்க விருதுகள், புதிய திறமை விருதுகள், எவ். ஐ. சி. சி. ஐ. விருது, தி குளோபல் இந்திய ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ், பிக் டெலிவிசன் விருதுகள், சன் குடும்பம் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகத்_தொடர்&oldid=1319727" இலிருந்து மீள்விக்கப்பட்டது