இரண்டாம் யோசப்பு இசுமித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
வரிசை 41: வரிசை 41:


[[பகுப்பு:மொர்மனியம்]]
[[பகுப்பு:மொர்மனியம்]]
[[பகுப்பு:சமயத் தலைவர்கள்]]





08:02, 7 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

யோசஃப் இசுமித்து, இளையவர்
பிறப்பு(1805-12-23)திசம்பர் 23, 1805
சரண், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புசூன் 27, 1844(1844-06-27) (அகவை 38)
கார்த்தேஜ், இல்லினாய், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
அறியப்படுவதுபின்னாள் புனிதர் இயக்கம் நிறுவுனர்
கையொப்பம்

யோசப்பு இசுமித்து, இளையவர் (Joseph Smith, Jr., ஜோசஃப் ஸ்மித், ஜூனியர், திசம்பர் 23, 1805 – சூன் 27, 1844) அமெரிக்க சமயத் தலைவரும் பின்னாள் புனிதர் இயக்கம் அல்லது மொர்மனியம் என்ற சமயத்தின் நிறுவுனரும் ஆவார். தமது 24ஆம் அகவையில் மோர்மொன் நூல்|மோர்மொன் நூலை பதிப்பித்து அடுத்த பதினான்கு ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான சீடர்களைப் பெற்றார். பல நகரங்களையும் கோவில்களையும் நிறுவி தமது சமயத்தை நிலைநிறுத்தினார். பின்னாள் புனிதர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இவரை ஓர் இறைவாக்கினராகக் கருதுகின்றனர்.

மோர்மொன் நூல்

யோசஃப் இசுமித்தின் கூற்றுப்படி, அவர் 17 அகவையினராக இருக்கும் போது தான் மொரோனி எனப்படும் தேவதூதரை சந்தித்தார். [1]. மொரோனி இசுமித்திடம் தங்கத்தகடுகளில் எழுதப்பட்டுள்ள மிகவும் பழைமையான நூல் ஒன்றினைப் பற்றியும் அது ஓர் குன்றில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சில ஆண்டுகள் கழித்து இந்த தகடுகளைத் தான் பெற்றதாகக் கூறி அதன் உள்ளடக்கத்தை ஆங்கிலத்தில் இன்று மோர்மொன் நூல் எனப்படும் புனித நூலாக மொழிபெயர்த்தார். மார்ட்டின் ஹாரிசு என்பவருக்கு தான் அவரது தொப்பியிலிருந்து படிக்கும் வாசகங்களை எழுதுமாறு பணித்தார். தங்கத் தகடுகளுடன் முக்காலமுணரும் கற்களை அவரது தொப்பியில் இட்டுள்ளதாகவும் அதன் மகிமையால் எழுத்துக்கள் தொப்பியில் தோன்றி ஆங்கிலமாக மாறும் எனவும் கூறினார். ஹாரிசு இந்தப் பக்கங்களை எடுத்துச் சென்று தனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை எடுத்துரைத்தார். அவரது மனைவி நம்பாது அடுத்த நாளில் யோசப்பை சோதிக்குமாறு பணித்தார். ஹாரிசு அடுத்தநாள் சென்று தான் முந்தைய நாள் பக்கங்களை தொலைத்து விட்டதாகவும் வேண்டுமானால் திரும்பவும் நகலெடுக்க உதவுவதாகவும் கூறினார். யோசப்பு பொய் கூறுவதானால் இம்முறை நகலும் நேற்றைய படியும் வெவேறாக இருக்குமென்பது அவரது சோதனை. யோசப்பு தான் தனியாக வழிபட விரும்புவதாகக் கூறினார். பின்னர் ஹாரிசிடம் யோசப் கடவுள் மிகவும் கோபப்பட்டதாகவும் இனி தங்கத்தகடுகளிலிருந்து மொழிபெயர்க்க உதவ மாட்டேன் என்றதாகவும் கூறினார். ஆனால் வேறு தகடுகளைத் தருவதாகவும் அதனை யோசப் மட்டுமே காண முடியும் என்றும் கூறியதாகவும் அதன் உள்ளடக்கமும் அதே கதையைக் கொண்டிருக்கும்;ஆனால் வேறு மொழிநடையில் இருக்கும் என்றார். இதையொட்டியே மோர்மொன் நூல் எழுதப்பட்டது.

மோர்மொன் திருச்சபை

ஏப்ரல் 6, 1830 அன்று அவர் பின்னாள் புனிதர்களின் இயேசுக் கிறித்துத் திருச்சபையை நிறுவினார். இது பரவலாக மோர்மொன் திருச்சபை எனப்படுகிறது. யோசப் கடவுள் தன்னிடம் ஓர் இறைவாக்கினராக இருந்து தன்னிடம் கற்றவைகளை மக்களிடம் பரப்புமாறு கூறியதாக்க் கூறினார். பல மில்லியன் மக்கள் அவரது திருச்சபையில் இணைந்தனர். இந்தத் திருச்சபை இன்றும் இயங்கி வருகிறது.

யோசப் ஸ்மித் கூறிய கூற்றுக்களை சிலர் விரும்பவில்லை. மற்ற திருச்சபைகள் பகுதி உண்மையையே உரைப்பதாகக் கூறினார். மேலும் பல மனைவிகளை மணம் புரிவதை ஆதரித்தார். இதனால் இவர் மீது பலர் பகைமை பாராட்டினர்.

சான்றுகோள்கள்

  1. Jackson, Andrew The Mormon Faith of Mitt Romney: What Latter Day Saints Teach and Practice Kudu Publishing 2012 page 23

வெளியிணைப்புகள்