ரயத்துவாரி நிலவரி முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி Sodabottle பயனரால் ரயாட்வாரி முறை, ரயாட்வாரி நிலவரி முறை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

17:02, 9 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ரயாட்வாரி நிலவரி முறை என்பது பிரித்தானிய இந்தியாவில் விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்ய்யும் இரு முறைகளில் ஒன்றாக இருந்தது. மற்றொன்று ஜமீன்ந்தாரி முறை.

ரயாட்வாரி முறையின் படி பிரித்தானிய அரசு நிலத்தை பயிரிடுபரிடம் நேரடியாக வரி வசூல் செய்தது. “ரயாட்” என்ற சொல்லுக்கு “உழவர்” என்று பொருள். பயிரிடுபவர்களிடம் வரி வசூல் செய்து அரசுக்கு செலுத்தும் இடைத்தரகர்கள் இம்முறையில் இருக்கவில்லை. மற்றொரு முறையான ஜமீந்தாரி முறையில் பயிரிடுபவர்களிடமிருந்து வரி வசூல் செய்த ஜமீன்தார்கள் அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியானதை அரசுக்கு செலுத்தினர். அரசுக்கும் பயிரிடுபவருக்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டனர். ரயாட்வாரி முறையில் பயிரிடுபவர் நிலத்தீர்வையை நேரடியாக அரசுக்கு செலுத்தினார். தனது நிலத்தை அவர் நினைத்தவாறு விற்கவோ, அன்பளிப்பாகக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ முடிந்தது. விதிக்கப்படும் தீர்வையை அவர் தவறாமல் செலுத்தி வரும் வரை சட்டப்படி அவரை அரசால் அவரது நிலத்திலிருந்து வெளியேற்ற இயலாது. மேலும் தான் பயிரிடும் நிலத்தின் அளவைக் நினைத்தபடி கூட்டவும் குறைக்கவும் உரிமை பெற்றிருந்தார். பஞ்ச காலங்களிலும், விளைச்சல் குறைவான காலங்களிலும் விளைச்சலுக்கு ஏற்ப நிலத்தீர்வை குறைத்துக் கொள்ளப்பட்டது.[1]

சென்னை மாகாணத்தின் ஆளுனராக 1820 இல் பொறுப்பேற்ற சர் தாமஸ் முன்ரோ ரயாட்வாரி முறையை அறிமுகப்படுத்தியதற்காக அறியப்படுகிறார்.[2] சென்னையை அடுத்து மும்பை மாகாணத்திலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரயத்துவாரி_நிலவரி_முறை&oldid=1296454" இலிருந்து மீள்விக்கப்பட்டது