கீவ் சண்டை (1941): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 3: வரிசை 3:
| partof = [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையின்]]
| partof = [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையின்]]
| image = [[File:Eastern Front 1941-06 to 1941-09.png|300px|]]
| image = [[File:Eastern Front 1941-06 to 1941-09.png|300px|]]
| caption = ஜூன் 22-செப் 1, 1944 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம்
| caption = ஜூன் 22-செப் 1, 1941 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம்
| date = 23 ஆகஸ்ட் – 26 செப்டம்பர் 1941
| date = 23 ஆகஸ்ட் – 26 செப்டம்பர் 1941
| place = [[கீவ்]] நகருக்கு தெற்கிலும் கிழக்கிலும், [[சோவியத் ஒன்றியம்]]
| place = [[கீவ்]] நகருக்கு தெற்கிலும் கிழக்கிலும், [[சோவியத் ஒன்றியம்]]

04:15, 30 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

கீவ் சண்டை
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி

ஜூன் 22-செப் 1, 1941 காலகட்டத்தில் ஜெர்மானிய படை முன்னேற்ற வரைபடம்
நாள் 23 ஆகஸ்ட் – 26 செப்டம்பர் 1941
இடம் கீவ் நகருக்கு தெற்கிலும் கிழக்கிலும், சோவியத் ஒன்றியம்
ஜெர்மானிய வெற்றி
பிரிவினர்
 ஜெர்மனி  சோவியத் ஒன்றியம்
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி கெர்ட் வான் ரன்ஸ்டெட் சோவியத் ஒன்றியம் செமியான் புத்யானி
சோவியத் ஒன்றியம் மிக்கைல் கிர்ப்பானோஸ்
பலம்
500,000 627,000[1]
இழப்புகள்
தெரியவில்லை மொத்தம்: 700,544
மாண்டவர் / போர்க்கைதிகள்: 616,304
காயமடைந்தவர்: 84,240[1]

கீவ் சண்டை (Battle of Kiev) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் சோவியத் ஒன்றியம், நாசி ஜெர்மனி இடையே நடைபெற்ற ஒரு படை மோதல். ஆகஸ்ட் 23 - செப்டம்பர் 26, 2011 காலகட்டத்தில் நடைபெற்ற இச்சண்டை பர்பரோசா நடவடிக்கையின் பகுதியாகும். ஜெர்மனியப் படைகளுக்கு பெருவெற்றியாக முடிந்த இது, போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாகக் கருதப்படுகிறது. சோவியத் போர்வரலாற்றுத் தரவுகளில் இது கீவ் பாதுகாப்பு நடவடிக்கை (Kiev Defensive Operation. Киевская оборонительная операция) என்றழைக்கப்படுகிறது.

ஜூன் 22, 1941 அன்று சோவியத் தலைமை எதிர்பாராத வண்ணம், நாசி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தது. மூன்று ஆர்மி குரூப்புகளாக ஜெர்மானியப் படைகள் சோவியத் ஒன்றியத்துக்குள் முன்னேறின. இவற்றில் தெற்கு ஆர்மி குரூப் உக்ரைன் பகுதியைத் தாக்கியது. முதலிரு மாதங்கள் இதன் முன்னேறறம் மந்தமாக இருந்தது. ஆகஸ்ட் முதல்வாரம் ஆர்மி குரூப் நடுவிலிருந்து பல கவசப் படைப்பிரிவுகள் தெற்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டன. இதனால் மீண்டும் வேகமாக முன்னேறிய ஜெர்மானியப் படைகள் ஆகஸ்ட் பின்பகுதியில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறி விட்டன. இப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சோவியத் தென்மேற்குக் களம் படைப்பிரிவினை கீவ் நகர் அருகே சுற்றி வளைக்க ஜெர்மானியப் படைகள் முயன்றன. வடக்கிலிருந்து 2வது பான்சர்குரூப்பும், 2வது ஆர்மியும் தென்கிழக்கிலிருந்து தெற்கு ஆர்மி குரூப்பும் கிடுக்கியின் இரு கரங்களாக செயல்பட்டு சோவியத் படைகளை சுற்றி வளைத்தன. ஜெர்மானியப் படைவளையத்துக்குள் சுமார் ஏழு லட்சம் சோவியத் வீரர்கள் சிக்கிக் கொண்டனர். செப்டம்பர் மாதம் ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. கீவ் பகுதியில் சிக்கிக்கொண்ட சோவியத் படைகள் கடுமையாக எதிர்த்துப் போரிட்டாலும் 26 செப்டம்பரில் கீவ் நகரம் வீழ்ந்தது. எஞ்சிய சோவியத் படைகள் சரணடைந்தன. சோவியத் தரப்பில் ஆறு லட்சம் வீரர்கள் மாண்டனர் அல்லது போர்க்கைதிகளாயினர். உலகப் போர் வரலாற்றில் மாபெரும் சுற்றிவளைப்புச் சண்டையாக இது கருதப்படுகிறது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 Glantz (1995), p. 293

மேற்கோள்கள்

  • Clark, Alan (1965), Barbarossa, William Morrow and Company
  • Erickson, John (1975), The Road to Stalingrad
  • Glantz, David M. & House, Jonathan (1995), When Titans Clashed: How the Red Army Stopped Hitler, Lawrence, Kansas: University Press of Kansas, ISBN 0-7006-0899-0
  • Mellenthin, F.W. (1956), Panzer Battles, Konecky and Konecky
  • Stahel, David (2012), Kiev 1941: Hitler's Battle for Supremacy in the East, Cambridge University Press, ISBN 978-1107014596
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீவ்_சண்டை_(1941)&oldid=1288091" இலிருந்து மீள்விக்கப்பட்டது