மாற்றவியலா நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:حافظه فقط خواندنی
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: az:Daimi yaddaş qurğusu
வரிசை 12: வரிசை 12:


[[ar:ذاكرة القراءة فقط]]
[[ar:ذاكرة القراءة فقط]]
[[az:Daimi yaddaş qurğusu]]
[[bn:রম]]
[[bn:রম]]
[[bs:ROM]]
[[bs:ROM]]

13:26, 26 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ரோம் - மாற்றவியலா நினைவகம்

மாற்றவியலா நினைவகம் (Read-only memory அல்லது ரோம் , ROM) என்பது கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை தரவுச் சேமிப்பு வன்பொருளாகும். பொதுவாக இது ஓர் கணினிச் சில்லில் அமைக்கப்பட்டிருக்கும். நேரடி அணுகல் நினைவகம் போலன்றி இதில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள் மின்னாற்றல் இல்லாதநிலையிலும் மறைவதில்லை. எனவே இவை மாயமாகா நினைவகம் (Non Voltile Memory) எனவும் குறிப்பிடப்படுகிறது. இதில் எழுதப்பட்டுள்ள தரவுகளை கணினியின் வழமையான செயல்பாட்டின்போது மாற்றவோ அழிக்கவோ இயலாது. இந்தத் தன்மையால் கணினிகளின் பயோசு எனப்படும் அடிப்படை உள்ளீடு/வெளியீடு அமைப்புகளில் மாற்றவியலா நினைவகம் பயன்படுத்தப்படுகிறது. சில பயனாளர் இலத்திரனியல் கருவிகளில் நிலை மென்பொருளுக்கான நினைவகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் உள்ள தரவுகளை மாற்றுகின்ற தன்மையைப் பொறுத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன:

  • உள்மறை ரோம்: இந்த வகை நினைவகங்களில் உள்ள தரவுகள் தொழிற்சாலையிலேயே ஒரேமுறையாக எழுதப்படுகின்றன. இவற்றை எப்போதுமே மாற்றவியலாது. இதன் முதன்மையான பயன் இவற்றை தயாரிக்கும் செலவு மிகக் குறைவானதாகும்.
  • நிரல்படு ரோம் (PROM): ஒருமுறை நிரல்படுத்த முடியும். தொழிற்சாலையிலிருந்து எந்த "நிரலுமின்றி" விற்பனைக்கு வருகிறது. தற்போது இவற்றிற்கு மாற்றாக அழிபடு நிரல்படு ரோம்கள் வெளியாகியுள்ளன.
  • அழிபடு நிரல்படு ரோம் (EPROM): இவ்வகை ரோம்களில் தரவுகள் புற ஊதா ஒளியால் அழிக்கக்கூடியனவாக உள்ளன.
  • மின் அழிபடு நிரல்படு ரோம் (EEPROM): இவ்வகை ரோம்களில் மின் சைகைகள் மூலம் தரவுகள் அழிக்கப்படக் கூடும். இன்றைய நாட்களில் திடீர் நினைவகங்கள் பெரும்பாலும் பயன்படுத்தபடுகின்றன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாற்றவியலா_நினைவகம்&oldid=1284544" இலிருந்து மீள்விக்கப்பட்டது