யாழ் இலக்கிய வட்டம் - இலங்கை இலக்கியப் பேரவை விருதுகள், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''யாழ். இலக்கிய வட்டத்தின..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

01:34, 26 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

யாழ். இலக்கிய வட்டத்தின் 43ஆவது ஆண்டு நிறைவு விழாவும் இலங்கை இலக்கிய பேரவையின் 20062007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழாவும் 2009 மே மாதம்\ பதினேழாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கலாநிதி கே.குணராசா தலைமை தாங்கினார்.. நிகழ்வில் ஆசியுரைகளை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், அருட்தந்தை கலாநிதி சு.ஜெபநேசன் ஆகியோரும் வாழ்த்துரைகளை பேராசிரியர் அ.சண்முகதாஸ், ஆறு.திருமுருகன், திருமதி பத்தினியம்மா திலகநாயகம் போல் ஆகியோரும் வழங்க்கினார்கள்.. நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல நோக்குக்கூட்டுறவுச் சங்கத் தலைவர் பி.கிரிதரன் கலந்து கொண்டார். இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசளிப்புரையை பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்கினார்.

இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களாக பரிசுக்குரியதாக தெரிவு செய்யப்பட்ட நூல்களின் விபரங்கள் வருமாறு:

2006 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற நூல்கள்

  • :ஆய்வு - மலாயக் குடிபெயர்வும் யாழ்ப்பாணச் சமூகமும் - பேராசிரியர் எஸ்.சத்தியசீலன்
  • நாவல் – உதயக்கதிர்கள் - திக்குவல்லை கமால்
  • சிறுகதை - இளங்கோவின் கதைகள் - இளங்கோ
  • காவியம் - திருநபி நாயகம் - ஜின்னா ஷெரிப்புத்தீன்
  • சிறுவர் இலக்கியம் -உதவும் உள்ளங்கள் - கவிஞர் மண்டூர் தேசிகன்
  • சமயம் - இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம் - டாக்டர் எஸ்.சிவசண்முகராசா
  • பல்துறை - தமிழர் மருத்துவம் அன்றும் இன்றும்’ கலாநிதி பால.சிவகடாட்சம்
  • கவிதை - தகுதி நிலையில் எதுவும் கிடைக்கவில்ல
  • மொழிபெயர்ப்பு - தகுதியான நிலையில் எதுவும் கிடைக்கவில்லை.