சோ ஓயு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: jv:Cho Oyu
சி r2.6.8) (Robot: Modifying ko:초오유 to ko:초오유 산
வரிசை 46: வரிசை 46:
[[jv:Cho Oyu]]
[[jv:Cho Oyu]]
[[ka:ჩო-ოიუი]]
[[ka:ჩო-ოიუი]]
[[ko:초오유]]
[[ko:초오유]]
[[ku:Cho Oyu]]
[[ku:Cho Oyu]]
[[lt:Čo Oju]]
[[lt:Čo Oju]]

10:30, 9 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சோ ஓயு மலை
உயர்ந்த இடம்
உயரம்8,188 m (26,864 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு2,344 m (7,690 அடி) Edit on Wikidata
இடவியல் தனிமை29 km (18 mi) Edit on Wikidata
பட்டியல்கள்

சோ ஓயு (அல்லது கோவோவுயாக்; நேபாள மொழியில் चोयु சோயு, திபெத்திய மொழியில் jo bo dbu yag ஜொ போ த்பு ஓயு, சீன மொழியில் 卓奧有山 சௌ ஆஓயு ஷான்) மலையானது உலகிலேயே ஆறாவது உயரமான மலை ஆகும். இது இமய மலைத்தொடரில் உள்ளது. எவரெஸ்ட் மலைக்கு மேற்கே 20 கி.மீ தொலைவில் நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே உள்ளது. சோ ஓயு என்றால் திபெத்திய மொழியில் பசும்நீல அம்மன் என்று பொருள்படும்.

சோ ஓயு மலையை முதன்முதலாக ஏற 1952ல் எரிக் ஷிப்டொன் (Eric Shipton) தலைமியில் ஒரு முகாம் முயன்றது. ஆனால் 6,650 (21,820 அடி) உயரத்திற்கு மேலே அன்றைய நிலைமையில் ஏற முடியாதவாறு பனி முகடு ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் ஏறுவது கைவிடப்பட்டது. இன்றைய முறைப்படி இவ்வகை பனி முகடுகளைக் கடக்க கையிறேணிகள் பயன்படுத்தப்படுகின்றது. அக்டோபர் 19, 1954ல் முதன்முத்லாக ஹெர்பர்ட் டிச்சி (Herbert Tichy), யோசெப் யோஃலெர் (Joseph Jöchler) மற்றும் ஷெர்ப்பா பசாங் தவா லாமா (Pasang Dawa Lama) ஆகியவர்கள் தென்மேற்கு முகமாக ஏறி வெற்றி கண்டார்கள். இவர்கள் ஆஸ்ட்டிரியா நாட்டின் அணியினர் ஆவர். சோ ஓயு மலைதான் 8000 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள மலைகளில் ஐந்தாவதாக ஏறி வெற்றி கொண்ட மலை. இதற்கு முன்னர் மற்றவர்கள் அன்னபூர்னா மலையை ஜூன் 1950லும், எவரெஸ்ட் மலையை மே 1953லும், நங்கா பர்பத் மலையை ஜூலை 1953லும், கே-2 மலையை ஜூலை 1954லிலும் ஏறி வெற்றி கொண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோ_ஓயு_மலை&oldid=1274129" இலிருந்து மீள்விக்கப்பட்டது