மூட்டுறை திரவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[File:Joint.png|300px|thumb|Right| [[மூட்டு]] மாதிரி]]
[[File:Joint.png|300px|thumb|Right| [[மூட்டு]] மாதிரி]]
[[File:Inflamatory_arthritis2010.JPG|300px|thumb|Right| மூட்டுறை திரவம்]]
'''மூட்டுறை திரவம்''' (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் [[நியூட்டன்]] வகையிலாப் பிசுப்பு [[திரவம்|திரவமாகும்]]. அசையும்போது நீர்ம மூட்டுக் [[குருத்தெலும்பு|குருத்தெலும்புகளுக்கிடையில்]] ஏற்படும் [[உராய்வு|உராய்வினைக்]] குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான [[பணி]]யாகும்.
'''மூட்டுறை திரவம்''' (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் [[நியூட்டன்]] வகையிலாப் பிசுப்பு [[திரவம்|திரவமாகும்]]. அசையும்போது நீர்ம மூட்டுக் [[குருத்தெலும்பு|குருத்தெலும்புகளுக்கிடையில்]] ஏற்படும் [[உராய்வு|உராய்வினைக்]] குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான [[பணி]]யாகும்.


வரிசை 30: வரிசை 31:
* அழற்சியல்லாலாதவை (தொகுதி I)
* அழற்சியல்லாலாதவை (தொகுதி I)


** முதுமை மூட்டழற்சி (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்
** [[முதுமை மூட்டழற்சி]] (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்
** பேரதிர்ச்சி (Trauma)
** பேரதிர்ச்சி (Trauma)
** வாதக் காய்ச்சல்
** வாதக் காய்ச்சல்
வரிசை 36: வரிசை 37:
** தோல் தடிப்பு (Scleroderma)
** தோல் தடிப்பு (Scleroderma)
** பல்தசையழற்சி (Polymyositis)
** பல்தசையழற்சி (Polymyositis)
** மண்டலிய செம்முருடு ([[சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்]]; Systemic lupus erythematosus)
** [[மண்டலிய செம்முருடு]] ([[சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்]]; Systemic lupus erythematosus)
** செந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)
** செந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)
** நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)
** நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)

08:54, 8 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மூட்டு மாதிரி
மூட்டுறை திரவம்

மூட்டுறை திரவம் (Synovial fluid) நீர்ம மூட்டு குழிகளில் காணப்படும் நியூட்டன் வகையிலாப் பிசுப்பு திரவமாகும். அசையும்போது நீர்ம மூட்டுக் குருத்தெலும்புகளுக்கிடையில் ஏற்படும் உராய்வினைக் குறைப்பதே மூட்டுறை திரவத்தின் முக்கியமான பணியாகும்.

வகைப்பாடு

மூட்டுறை திரவத்தை சாதாரணமானவை, அழற்சியல்லாலாதவை, அழற்சியானவை, சீழ் பிடிப்பவை, இரத்தக்கசிவானவை என்று வகைப்படுத்தலாம் :

பெரியவர்களின் முட்டி மூட்டுகளில் காணப்படும் மூட்டுறை திரவத்தின் வகைப்பாடு
இயல்பானது அழற்சியல்லாலாதவை அழற்சியானவை சீழ் பிடிப்பவை இரத்தக்கசிவானவை
கொள்ளளவு (மிலி) <3.5 >3.5 >3.5 >3.5 >3.5
கூழ்மநிலை அதிகம் அதிகம் குறைவு கலந்தது குறைவு
தெளிவு தெளிவானது தெளிவானது கலங்கியது மங்கலானது கலந்தது
நிறம் வண்ணமற்றது/வைக்கோல் நிறம் வைக்கோல் நிறம்/மஞ்சள் மஞ்சள் கலந்தது சிவப்பு
வெள்ளையணுக்கள்/ மிமீ3 <200 <2,000[1] 5,000[1]-75,000 >50,000[1] இரத்த அளவு
பல்கூறுகளாலான நியூட்ரோஃபில் (%) <25 <25[1] 50[1]-70[1] >70[1] இரத்த அளவு
கிராம் நிறமூட்டல் (Gram stain) எதிர்மை எதிர்மை எதிர்மை பொதுவாக ஏற்பு எதிர்மை

நோயியல்

நீர்ம மூட்டு
நீர்ம மூட்டு

பல்வேறு மூட்டுறை திரவ வகைகளும் குறிப்பிடத்தக்க நோயறிதல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன:[2][3]

  • அழற்சியல்லாலாதவை (தொகுதி I)
    • முதுமை மூட்டழற்சி (Osteoarthritis), மூட்டுஅழுகல் நோய்
    • பேரதிர்ச்சி (Trauma)
    • வாதக் காய்ச்சல்
    • நாள்பட்ட கீல்வாதம் (chronic gout) அல்லது போலியான கீல்வாதம் (pseudogout)
    • தோல் தடிப்பு (Scleroderma)
    • பல்தசையழற்சி (Polymyositis)
    • மண்டலிய செம்முருடு (சிஸ்டமிக் லூபஸ் எரிதிமாடோசஸ்; Systemic lupus erythematosus)
    • செந்தடிப்புக் கண்டு (Erythema nodosum)
    • நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய் (Neuropathic arthropathy) (சாத்தியமான இரத்தக்கசிவுடன்)
    • அரிவாள் சிவப்பணு இரத்தசோகை (Sickle-cell disease)
    • ஈமோகுரோம் நோய் (Hemochromatosis)
    • மாகரபாதம் (Acromegaly)
    • தசையில் மாவுப் பொருள் ஏற்றம் (Amyloidosis)
  • அழற்சியானவை (தொகுதி II)
    • முடக்குவாதம்
    • வினைவாதம் (Reactive arthritis)
    • சிரங்குவாதம் (Psoriatic arthritis)
    • கடும் வாதக் காய்ச்சல் (Acute rheumatic fever)
    • கடும் கீல்வாதம் அல்லது போலியான கீல்வாதம்
    • தோல் தடிப்பு
    • பல்தசையழற்சி
    • மண்டலிய செம்முருடு (SLE)
    • தம்ப முள்ளந்தண்டழல் (Ankylosing spondylitis)
    • வயிற்று அழற்சிநோய் வாதம் (Inflammatory bowel disease arthritis)
    • நோய்த் தொற்று (infection) [அதிநுண்ணுயிரி (வைரசு), பூஞ்சை, நுண்ணுயிரி (பாக்டீரியா)], உண்ணி பாக்டீரியா நோய் (Lyme disease)
    • கடும் படிக மூட்டுறை அழற்சி (Acute crystal synovitis)
  • சீழ் பிடிப்பவை (தொகுதி III)
    • சீழ் உருவாக்கும் பாக்டீரிய நோய்த்தொற்று (Pyogenic bacterial infection)
    • அழுகும் வாதம் அல்லது சீழ்வாதம் (Septic arthritis)
    • இரத்தக்கசிவு
    • பேரதிர்ச்சி
    • கட்டிகள்
    • இரத்த ஒழுக்கு நோய் அல்லது குருதி உறையாமை (Hemophilia) / குருதி திரள் பிறழ்வு (coagulopathy)
    • அரிநோய் (Scurvy) - உயிர்ச்சத்து சி பற்றாக்குறை நோய்
    • நரம்புநோயிய மூட்டு மெலிவு நோய்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Table 6-6 in: Elizabeth D Agabegi; Agabegi, Steven S. (2008). Step-Up to Medicine (Step-Up Series). Hagerstwon, MD: Lippincott Williams & Wilkins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-7153-6. 
  2. Lupus Anticoagulant
  3. American College of Rheumatology

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டுறை_திரவம்&oldid=1273484" இலிருந்து மீள்விக்கப்பட்டது