சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:சரசுவதி சிலை.jpg|thumb|right|சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியின் வாயிலில் உள்ள [[சரசுவதி]] சிலை ]]
[[படிமம்:சரசுவதி சிலை.jpg|thumb|right|சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியின் வாயிலில் உள்ள [[சரசுவதி]] சிலை ]]
'''சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி''' [[இலங்கை]]யில் [[மட்டக்களப்பு]] நகரில் அமைந்துள்ளது. இக்கல்லூரி [[1982]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[சுவாமி விபுலாநந்தர்|சுவாமி விபுலாநந்தரின்]] நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டது [[2001]] ஆம் ஆண்டில் இக்கல்லூரி [[கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்|கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின்]] ஓர் வளாகமாக்கப்பட்டது.
'''சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி''' [[இலங்கை]]யில் [[மட்டக்களப்பு]] [[நொச்சிமுனை]] பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி [[1982]] ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. [[சுவாமி விபுலாநந்தர்|சுவாமி விபுலாநந்தரின்]] நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டது [[2001]] ஆம் ஆண்டில் இக்கல்லூரி [[கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகம்|கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின்]] ஓர் வளாகமாக்கப்பட்டது.


==வரலாறு==
==வரலாறு==

01:22, 26 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:சரசுவதி சிலை.jpg
சுவாமி விபுலாநந்த இசை நடனக் கல்லூரியின் வாயிலில் உள்ள சரசுவதி சிலை

சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி இலங்கையில் மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் அமைந்துள்ளது. இக்கல்லூரி 1982 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுவாமி விபுலாநந்தரின் நினைவாக இப்பெயர் வழங்கப்பட்டது 2001 ஆம் ஆண்டில் இக்கல்லூரி கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது.

வரலாறு

1982 ஆம் ஆண்டு மார்ச் 25 இல் கட்டிடத்திற்கன ஆரம்பப்பணிகள் அமைச்சர் செ. இராசதுரையினால் கல்லடி உப்போடையில் உள்ள இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் தமிழக இசை விற்பன்னர்கள் ஆகிய சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரது கலைநிகழ்வுகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதே ஆண்டு மே 29 ஆம் நாள் இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஜீவனானந்தாஜி மஹராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கை இந்து சமயகலாசார அலுவல்கள் திணைக்களம் இதை நன்கு பராமரித்து வந்தாலும் கல்வித்திணைக்களம் தகுந்த வேதனம் வழங்காமையால் இப்பாடநெறியைப் பட்டாதாரிப் பாடநெறியாக்கவேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததால் 2001 ஆம் ஆண்டில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஓர் வளாகமாக்கப்பட்டது.

பட்டநெறிகள்

இக்கல்லூரியில் சுமார் 500 மாணவர்கள் வரை இளமானிப்பட்ட கற்கை நெறியினைத் தொடர்ந்து வருகின்றனர். இசை, நடனம்-நாடக அரங்கியற்றுறை, கட்புலக்கலைத்துறை எனும் மூன்று துறைகளைக் கொண்ட கல்வி நிர்வாகக் கட்டமைப்புடன் இக்கல்லூரி இயங்கி வருகிறது. நுண்கலைத்துறைகளுள் முதன்மை பெறும் இசைத் துறையில் தற்போது வாய்ப்பாட்டு,வீணை, வயலின், மிருதங்கம் போன்ற பட்டப்பாடநெறிகள் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 200 மாணவர்கள் வரை (இசையினைப் பிரதான பாடமாகவும் துணைப்பாடமாகவும் கொண்ட), இசைப்பேராசிரியர் எஸ். இராமநாதன் அவர்களால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கமைய விரிவுரையாளர்களால் செயன்முறை மற்றும் எழுத்துமுறை மூலம் இசை கற்பிக்கப்பட்டு வருகின்றது. வாய்ப்பாட்டிற்கு ஆறு(06) விரிவுரையாளர்களும் வீணைக் கற்கைநெறிக்கு இரு விரிவுரையாளர்களும் மிருதங்கப் பாடநெறிக்கு இரு விரிவுரையாளர்களும் வயலின் பாடநெறிக்கு மூன்று விரிவுரையாளர்களும் கற்பித்து வருகின்றனர்.