ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4,079 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
'''ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள்''' (''reduction-oxidation'', சுருக்கமாக ''Redox'') என்பது ஒரு [[வேதிவினை|வேதிவினையின்]] ஒரு வகை ஆகும். ஒரு [[தனிமம்]] அல்லது [[சேர்மம்]], வேதிவினைக்கு உட்படும் போது அதன் [[எதிர்மின்னி|எலக்ட்ரான்]] எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.
== பெயர்க் காரணம் ==
=== ஆக்சிசனேற்றம் ===
ஆரம்ப காலத்தில், ஆக்சிசனுடன் ஒரு தனிமம் வினைபுரிந்து அதன் ஆக்சாடாக மாறுவதே ஆக்சிசனேற்றம் என்று அழைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, கார்பன் ஆக்சிசனுடன் வினைபுரிந்து, கார்பன்-டை-ஆக்சைடைத் தருகிறது. இதில் கார்பன் ஆக்சிசனேற்றம் அடைந்து, எலக்ட்ரான்களை ஆக்சிசனுக்கு வழங்குகிறது.
(எ-க): C + O<sub>2</sub> -> CO<sub>2</sub>
பின்னர் ஆக்சிசனை ஒத்த தனிமங்கள் இதே போன்ற வேதி வினையில் ஈடுபடுவதும், ஆக்சிசனேற்றம் என்றே அழைக்கப்பட்டது. அதன் பின்னர், இப்பெயர் மேலும் பொதுவாக்கப்பட்டு, தனிமம் எலக்ட்ரான்களை இழக்கும் எல்லா வேதிவினைகளுமே, 'ஆக்சிசனேற்ற வினைகள்' என்று அழைக்கப்பட்டன.<br />
=== ஒடுக்கம் ===
'ஒடுக்கம்' என்ற சொல் எடை குறைதலோடு தொடர்புடையது. அதாவது, முற்காலத்தில், உலேகத்தாதுக்களான, உலோகஆக்சாடுகளிலிருந்து, உலோகத்தை உருக்கிப் பிரிதிதெடுப்பர். இந்நிகழ்வின் போது, ஆக்சிசன் வெளியேறுவதால் எடை குறைகிறது. இதன் காரணமாக, ஆக்சிசன், [[சேர்மத்திலிருந்து]] பிரிந்து செல்லும் அனைத்து வினைகளும் 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன. பின்னர், ஆக்சிசன் வெளியேறும் போது, உலோகத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கண்டறிந்தார்கள். எனவே எலக்ட்ரான்களை அதிகரிக்கச் செய்யும் அனைத்து வினைகளும், 'ஒடுக்க வினைகள்' என்றழைக்கப்பட்டன.
===ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்===
தற்காலத்தில் ஆக்சிசனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையின் எலக்ட்ரான் பரிமாற்ற நிகழ்வுகளை மட்டுமே குறிக்கின்றன. சற்று உற்று நோக்கினால், மேற்சொன்ன அனைத்து வினைகளிலுமே, ஒரு தனிமம் எலக்ட்ரான்களை இழந்தால, மற்றொன்று எலக்ட்ரான்களைப் பெறுகிறது என்பது புலப்படும். எனவே ஒடுக்க வினைகள், ஆக்சிசனேற்ற வினைகள் இரண்டும் ஒரே பெயரால், 'ஒடுக்க-ஏற்ற வினைகள்' என்று அழைக்கப்படுகின்றன.
 
== ஆக்சிசனேற்றம் ==
* பொதுவாக [[ஆக்சிசன்]] ஒரு தனிமம் அல்லது சேர்மத்துடன் வினை புரியும் போது, அத்தனிமத்தின் எலக்ட்ரான்கள் ஆக்சிசனால் கவரப்படும். இதனால் அத்தனிமத்தைச் சுற்றி வரும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை குறையும்.
204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1264629" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி