ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 29: வரிசை 29:


[[பகுப்பு:வேதி வினைகள்]]
[[பகுப்பு:வேதி வினைகள்]]
[[பகுப்பு:மண் வேதியியல்]]


[[ar:تفاعلات أكسدة-اختزال]]
[[ar:تفاعلات أكسدة-اختزال]]

21:10, 23 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்க வினைகள் (reduction-oxidation, சுருக்கமாக Redox) என்பது ஒரு வேதிவினையின் ஒரு வகை ஆகும். ஒரு தனிமம் அல்லது சேர்மம், வேதிவினைக்கு உட்படும் போது அதன் எலக்ட்ரான் எண்ணிக்கையில் மாறுதல் எற்பட்டால், அது இந்த வகையான வேதிவினையாகும்.

ஆக்சிசனேற்றம்

  • பொதுவாக ஆக்சிசன் ஒரு தனிமம் அல்லது சேர்மத்துடன் வினை புரியும் போது, அத்தனிமத்தின் எலக்ட்ரான்கள் ஆக்சிசனால் கவரப்படும். இதனால் அத்தனிமத்தைச் சுற்றி வரும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை குறையும்.
  • தனிமம் அல்லது சேர்மத்தின் எலக்ட்ரான் எண்ணிக்கையைக் குறைக்கும், அனைத்து வேதிவினைகளும் ஆக்சிசனேற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. (ஆக்சிசன் தனிமம் வினையில் பங்கு பெறாவிட்டாலும்)

ஒடுக்கம்

ஆக்சிசன் ஒரு தனிமம் அல்லது சேர்மத்தை விட்டு விலகும் போது, அத்தனிமம் அல்லது சேர்மத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு ஒரு தனிமம் அல்லது சேர்மம் வேதிவினையின் போது எலக்ட்ரான் ஏற்றத்திற்கு உள்ளாகும் நிகழ்வு, ஒடுக்க வேதிவினை என்று அழைக்கப்படுகிறது.

சோடியம் (Na) ஃப்ளூரினுடன் (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு அயனிப் பிணைப்பு வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழக்கிறது அல்லது ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெறுகிறது, அல்லது ஒடுக்கம் அடைகிறது.

ஒடுக்க-ஏற்ற வினைகள்

ஒடுக்க-ஏற்ற வேதிவினையின் போது ஒரு பொருள் ஆக்சிசனேற்றம் அடையும் மற்றொன்று ஒடுக்கமடையும். ஆகவே தனியாக ஆக்சிசனேற்ற வினையோ, அல்லது ஒடுக்க வினையோ நிகழாது. எல்லா வேதி வினைகளும் ஒடுக்க-ஏற்ற (redox) வினைகளே.

(எ.கா): Na + F -> Na+F-

இவ்வினையில் சோடியம்(Na) ஆக்சிசனேற்றமும், ஃப்ளூரின்(F) ஒடுக்கமும் அடைகின்றன.

ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள்

பிற தனிமங்களை ஒடுக்கக் கூடிய பொருள் ஒடுக்கி (reductant) என்றும், பிற தனிமங்களை ஆக்கிசனேற்றம் செய்யக் கூடியவை ஆக்சிசனேற்றி என்றும் அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட வினையில்சோடியம்(Na) ஒடுக்கியாக செயல்பட்டு, ஃப்ளூரினை(F) ஒடுக்கமடையச் செய்கிறது. அதேபோல் ஃப்ளூரின்(F) ஆக்சிசனேற்றியாகச் செயல்பட்டு, சோடியத்தை(F) ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒடுக்க-ஏற்ற_வேதிவினைகள்&oldid=1264253" இலிருந்து மீள்விக்கப்பட்டது