மீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Unit of length|m=1|accuracy=4}}
{{Unit of length|m=1|accuracy=4}}
'''மீட்டர்''' என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] [[நீளம்|நீள]] அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு ''m'' ஆகும். தமிழ்க் குறியீடு '''மீ''' என்பதாகும். 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது {{frac|[[ஒளியின் வேகம்|299,792,458]]}} ஒரு [[நொடி]]யில் ''கடக்கும் தொலைவு'' ஒரு மீட்டர்.<ref name="Res1">17th General Conference on Weights and Measures (1983), Resolution 1.</ref>
'''மீட்டர்''' (''metre'' அல்லது ''meter'', '''மீற்றர்''') என்பது [[அனைத்துலக முறை அலகுகள்|அனைத்துலக முறை அலகுகளில்]] [[நீளம்|நீள]] அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு ''m'' ஆகும். தமிழ்க் குறியீடு '''மீ''' என்பதாகும். 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது {{frac|[[ஒளியின் வேகம்|299,792,458]]}} ஒரு [[நொடி]]யில் ''கடக்கும் தொலைவு'' ஒரு மீட்டர்.<ref name="Res1">17th General Conference on Weights and Measures (1983), Resolution 1.</ref>
இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 [[அங்குலம்|அங்குலங்களுக்கு]]ச் சமமாகும் (தோராயமாக 39.37 [[அங்குலம்|அங்குலங்கள்]])[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]
இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 [[அங்குலம்|அங்குலங்களுக்கு]]ச் சமமாகும் (தோராயமாக 39.37 [[அங்குலம்|அங்குலங்கள்]])[[படிமம்:Platinum-Iridium meter bar.jpg|thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான ''முதல்'' ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த [[பிளாட்டினம்]], [[இரிடியம்]] ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.]]



20:10, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

மீட்டர் (metre அல்லது meter, மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது 1299,792,458 ஒரு நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[1]

இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்)

1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான முதல் ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த பிளாட்டினம், இரிடியம் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல்.

மீட்டர் என்னும் பெயர்

நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார்.[2][3] 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (Misura Universale "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (metro cattolico) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} (métron katholikón) என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே (mètre) என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர்.இலங்கையில் மீற்றர் என்றும் பயன்படுத்துகின்றனர்.

SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள்

மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

அடுக்கு பெயர் குறியீடு அடுக்கு பெயர் குறியீடு
10−1 டெசிமீட்டர் (டெசிமீ) dm 101 டெக்காமீட்டர் (டெமீ) dam
10−2 சென்டிமீட்டர் (செமீ) (அ)
சதம மீட்டர்
cm 102 ஹெக்டோமீட்டர் (ஹெக்மீ) hm
10−3 மில்லிமீட்டர் (மிமீ) mm 103 கிலோமீட்டர் (கிமீ) km
10−6 மைக்ரோமீட்டர் (மைமீ) µm 106 மெகாமீட்டர் (மெமீ) Mm
10−9 நானோமீட்டர் (நாமீ) nm 109 கிகாமீட்டர் (கிகாமீ) Gm
10−12 பைக்கோமீட்டர் (பைமீ) pm 1012 டெர்ராமீட்டர் (டெர்மீ) Tm
10−15 ஃபெம்டோமீட்டர் (ஃபெர்மி) fm 1015 பேட்டாமீட்டர் (பேமீ) Pm
10−18 அட்டோமீட்டர் (அமீ) am 1018 எக்சாமீட்டர் (எக்மீ) Em
10−21 செப்டோமீட்டர் (செப்மீ) zm 1021 சேட்டாமீட்டர் (சேமீ) Zm
10−24 யொக்டோமீட்டர் (யோக்மீ) ym 1024 யொட்டாமீட்டர் (யோட்மீ) Ym

சான்றுகோள்கள்

  1. 17th General Conference on Weights and Measures (1983), Resolution 1.
  2. An Essay towards a Real Character and a Philosophical Language (Reproduction)
  3. An Essay towards a Real Character and a Philosophical Language (Transcription)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீட்டர்&oldid=1260309" இலிருந்து மீள்விக்கப்பட்டது