6-ஆம் நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: uk:6 століття
சி r2.5.4) (Robot: Modifying uk:6 століття to uk:VI століття
வரிசை 118: வரிசை 118:
[[tk:6-njy asyr]]
[[tk:6-njy asyr]]
[[tr:6. yüzyıl]]
[[tr:6. yüzyıl]]
[[uk:6 століття]]
[[uk:VI століття]]
[[ur:چھٹی صدی]]
[[ur:چھٹی صدی]]
[[uz:VI asr]]
[[uz:VI asr]]

12:55, 17 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆயிரமாண்டுகள்: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்: 5-ஆம் நூற்றாண்டு - 6-ஆம் நூற்றாண்டு - 7-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: 500கள் 510கள் 520கள் 530கள் 540கள்
550கள் 560கள் 570கள் 580கள் 590கள்
கிபி 6ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் உலகப்படம்

ஆறாம் நூற்றாண்டு (6ம் நூற்றாண்டு, 6th century AD) என்ற காலப்பகுதி கிபி 501 தொடக்கம் கிபி 599 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. மேற்குலகில் இந்த நூற்றாண்டு தொன்மை நாகரிகத்தின் முடிவாகவும் மத்திய காலத்தின் ஆரம்பமாகவும் கருதப்படுகிறது.

முந்தைய நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், ஐரோப்பா பல சிறிய செருமானிய இராச்சியங்களாகப் பிரிந்து நிலத்துக்காகவும் செல்வத்துக்காகவும் தமக்கிடையே போட்டியிட்டன. இக்குழப்பத்தில் பிராங்குகள் உயர்நிலைக்கு வந்து இன்றைய பிரான்சு, மற்றும் செருமனியில் பெரும்பான்மையாகினர். இதற்கிடையில், கிழக்கு ரோமப் பேரரசு ஜஸ்டீனியன் என்ற பேரரசனின் கீழ் விரிவாக்கம் பெறத் தொடங்கியது. இப்பேரரசு வண்டல்களிடம் இருந்து வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியது. அத்துடன் இத்தாலியை முழுமையாகக் கைப்பற்றி முன்னர் மேற்கு ரோமப் பேரரசின் ஆட்சியில் இருந்த பகுதிகளைக் கைப்பற்ற முனைந்தது. ஜஸ்டீனியனின் இறப்பை அடுத்து தான் கைப்பற்றிய பகுதிகளை மீண்டும் இழந்தது.

தனது இரண்டாம் பொற்காலத்தில், சசானிது பேரரசு முதலாம் கோசுராவு மன்னனின் கீழ் தன் உச்ச நிலையை ஆறாம் நூற்றாண்டில் எட்டியது[1]. வடக்கு இந்தியாவில் குப்தப் பேரரசு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வீழ்ச்சி கண்டது. 150 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த சீனாவின் தெற்கு மற்றும் வடக்கு அரச வம்சங்கள் சுயி வம்சத்தின் கீழ் இந்த நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்டது. கொரிய முப்பேரரசு இந்நூற்றாண்டுக் காலத்தில் வளர்ச்சி கண்டது.

அமெரிக்காவில், கிபி 150 முதல் 450 வரை உச்ச நிலையில் இருந்த தியோத்திகுவாக்கன் அரசு ஆறாம் நூற்றாண்டில் அழிவை நோக்கி நகர்ந்தது. நடு அமெரிக்காவில் மாயா நாகரிகம் வளர்ச்சி கண்டது.

நிகழ்வுகள்

சீனாவில் 6ம் நூற்றாண்டு காலக் பௌத்த கற்சிலை.

மேற்கோள்கள்

  1. Roberts, J: "History of the World.". Penguin, 1994.
"https://ta.wikipedia.org/w/index.php?title=6-ஆம்_நூற்றாண்டு&oldid=1259976" இலிருந்து மீள்விக்கப்பட்டது