பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Inuvil Ilanthari Koyil.JPG|thumb|250px|பஞ்சவன்னத் தூது நூலின் பாட்டுடைத் தலைவனான இளந்தாரி எனப்படும் கைலாயநாதனுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயில். இளந்தாரி ஏறி விண்ணுலகம் சென்றதாகக் கருதப்படும் புளிய மரத்தையும் படத்தில் காணலாம்.]]
'''பஞ்சவன்னத் தூது''' என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.<ref>கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். xv, இ. பாலசுந்தரத்தின் அணிந்துரை.</ref> இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்|சின்னத்தம்பிப் புலவர்]] ஆவார்.
'''பஞ்சவன்னத் தூது''' என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.<ref>கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். xv, இ. பாலசுந்தரத்தின் அணிந்துரை.</ref> இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்|சின்னத்தம்பிப் புலவர்]] ஆவார்.



19:09, 11 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பஞ்சவன்னத் தூது நூலின் பாட்டுடைத் தலைவனான இளந்தாரி எனப்படும் கைலாயநாதனுக்கு அமைக்கப்பட்டுள்ள கோயில். இளந்தாரி ஏறி விண்ணுலகம் சென்றதாகக் கருதப்படும் புளிய மரத்தையும் படத்தில் காணலாம்.

பஞ்சவன்னத் தூது என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், இணுவில் பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். கைலாயநாதனை "இளந்தாரி" என்றும் அழைப்பர். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு.[1] இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் ஆவார்.

பெயர்

ஒரு பொருளையே தூதாக அனுப்புவதாகக் கொண்டு அமைவதே பெரும்பாலான தூது இலக்கியங்களின் நடைமுறை. பஞ்சவன்னத் தூது நூலில், தலைவி தலைவனிடம் தூது செல்வதற்கு ஐந்து பொருட்களை அணுகுகிறாள். இதனாலேயே இந்நூலுக்குப் "பஞ்சவன்னத் தூது" என்னும் பெயர் ஏற்பட்டது.[2]

பாட்டுடைத் தலைவன்

பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன், தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவனும், இணுவில் பேரூரின் ஆட்சியாளனாக இருந்தவனுமான "காலிங்கராயன்" என்பவனின் மகன் என்கிறது இந்நூல். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை அண்டி இலங்கையின் வடபகுதி பாண்டியரின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இணுவிலுக்கான அவர்களின் பிரதிநிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். நல்லரசு புரிந்து வந்த அவன் ஒரு நாளில் தனது மாளிகைக்கு அயலில் இருந்த புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றானாம். அதைக் கண்ட அவனது குடிமக்கள் வருந்தித் துதித்தபோது. கைலாயநாதன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்து மீண்டான் என்பது கதை. மக்களும் அவனுக்குக் கோயில் அமைத்து இளந்தாரி என்னும் பெயரால் வழிபட்டு வந்தனர். இந்த வழிபாடு இப்போதும் இப் பகுதியில் நிலவிவருகின்றது.

நூல் அமைப்பு

பஞ்சவன்னத் தூது நூலில், வெவ்வேறு நீளங்களில் அமைந்த 44 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முதல் எட்டுப் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. இறுதியில் 11 பாடல்கள் இளந்தாரி துதியாகவும், தொடர்ந்து வரும் இரண்டு பாடல்கள் வாழ்த்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. 9 ஆம் பாடல் முதல் 31 ஆம் பாடல் வரையிலான 23 பாடல்களே தூது நூல் வகையுள் அடங்குவன.

குறிப்புகள்

  1. கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். xv, இ. பாலசுந்தரத்தின் அணிந்துரை.
  2. கந்தசுவாமி, க. இ. க., 1998. பக். iii, பதிப்புரை.

உசாத்துணைகள்

  • கந்தசுவாமி, க. இ. க. (பதிப்பாசிரியர்), இணுவை சின்னத்தம்பிப் புலவர் அருளிய பஞ்சவன்னத் தூது, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1998.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சவன்னத்_தூது&oldid=1256622" இலிருந்து மீள்விக்கப்பட்டது