இரமண மகரிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: or:ରମଣ ମହର୍ଷି
Mm nmc (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 32: வரிசை 32:
1950ல்
1950ல்

" ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம். "
==ரமண ஆச்ரமம்==
==ரமண ஆச்ரமம்==
பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மஹரிஷி, 1922 ல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆச்ரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆச்ரமமாகும். இதன் பின்னர் மஹரிஷி சமாதியடையும் வரை அந்த ஆச்ரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

14:21, 1 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பகவான் ரமண மஹரிஷி
பகவான் ரமண மஹரிஷி
பிறப்புடிசம்பர் 30, 1879
திருச்சுழி, மதுரை, தமிழ்நாடு
இறப்புஏப்ரல் 14, 1950(1950-04-14) (அகவை 70)
திருவண்ணாமலை
பெற்றோர்அழகமாள் மற்றும் சுந்தரம் ஐயர்

ரமண மஹரிஷி (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, 'ரமண ஆசிரமம்', உலகப் புகழ் பெற்றதாகும். இன்றளவும், ஆன்ம முன்னேற்றம் பெற, உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பலர் அன்றாடம், ரமணாச்ரமத்தினை நாடி வந்த வண்ணம் உள்ளனர்.

இளமைக்காலம்

இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம்

ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ம் அகவையில் மானா மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இவ் ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விஷமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற ஸம்ஸ்க்ருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”ரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அது வரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

உபதேசங்கள்

ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950ல்

" ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம். "

ரமண ஆச்ரமம்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மஹரிஷி, 1922 ல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆச்ரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆச்ரமமாகும். இதன் பின்னர் மஹரிஷி சமாதியடையும் வரை அந்த ஆச்ரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

தமிழ்ப் படைப்புகள் பட்டியல்

  • உபதேச உந்தியார்
  • உள்ளது நாற்பது
  • உள்ளது நாற்பது அனுபந்தம்
  • ஏகான்ம பஞ்சகம்
  • ஆன்ம வித்தை
  • உபதேசத் தனிப்பாக்கள்
  • ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
  • ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
  • நான் யார்?
  • விவேகசூடாமணி அவதாரிகை
  • பகவத் கீதா ஸாரம்
  • குரு வாசகக் கோவை
  • ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
  • ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை

ரமண மகரிசியைப் பின்பற்றியவர்கள்

  • விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார்

வெளி இணைப்புகள்

Sri Ramana]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமண_மகரிசி&oldid=1248621" இலிருந்து மீள்விக்கப்பட்டது