முடியாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ky:Монархия
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: li:Monarchie
வரிசை 76: வரிசை 76:
[[lad:Monarkiya]]
[[lad:Monarkiya]]
[[lb:Monarchie]]
[[lb:Monarchie]]
[[li:Monarchie]]
[[lt:Monarchija]]
[[lt:Monarchija]]
[[lv:Monarhija]]
[[lv:Monarhija]]

20:57, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

  குறைநிலை அரசியல்சட்ட முடியாட்சி
  துணைத்தேசிய முடியாட்சி (பகுதிப் பட்டியல்)

முடியாட்சி என்பது, அரசின் ஒரு வடிவம் ஆகும். இதில், அதியுயர் அதிகாரம் முழுமையாகவோ அல்லது பெயரளவுக்கோ ஒரு தனிப்பட்டவரிடம் இருக்கும். இவரே அரசின் தலைவராவார். இப்பதவியை அவர் தனது வாழ்நாள் முழுவதும் அல்லது அதிலிருந்து விலகும் வரை வகிப்பார். அத்துடன் இவர் நாட்டு மக்களிலும் வேறான தனி உரிமைகளைக் கொண்டிருப்பார். இந்த அரசுத் தலைவர் மன்னர், அரசர் போன்ற பெயர்களால் அழைக்கப்படுவார்.

முடியாட்சி என்பதற்குத் தெளிவான வரைவிலக்கணம் கிடையாது. ஐக்கிய இராச்சியம், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள அரசியல்சட்ட முடியாட்சிகளில் அரசுத் தலைவருக்கு முழுமையான அதிகாரம் கிடையாது. இதனால், எல்லையற்ற அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருத்தல் என்பதை முடியாட்சியை வரையறுக்கும் ஒரு இயல்பாகக் கொள்ள முடியாது. தலைமுறை ஆட்சி ஒரு பொது இயல்பாக இருப்பினும், தேர்வு முடியாட்சிகளும் உள்ளன. எடுத்துக் காட்டாக வாட்டிகனின் அரசராகக் கருதப்படும் பாப்பரசரைக் கர்தினால்கள் தேர்வு செய்கின்றனர். சில நாடுகளில் தலைமுறை அரசுரிமை இருந்தாலும் அவை குடியரசாகக் கொள்ளப்படுகின்றன.

தற்சமயம் உலகில் 44 நாடுகள் முடியாட்சி முறையைக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் 16 நாடுகள் பொதுநலவாய நாடுகள் குழுவைச் சேர்ந்தவை. இவை ஐக்கிய இராச்சியத்தின் அரசர் அல்லது அரசியைத் தமது அரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளன.


முடியாட்சி முறைமையின் குறைகள்

முதன்மைக் கட்டுரை: முடியாட்சி முறைமையின் குறைகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=முடியாட்சி&oldid=1245539" இலிருந்து மீள்விக்கப்பட்டது