அரித்துவார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 29°58′N 78°10′E / 29.96°N 78.16°E / 29.96; 78.16
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: or:ହରିଦ୍ଵାର
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: sr:Haridwar
வரிசை 338: வரிசை 338:
[[ru:Харидвар]]
[[ru:Харидвар]]
[[sa:हरिद्वारम्]]
[[sa:हरिद्वारम्]]
[[sr:Haridwar]]
[[sv:Haridwar]]
[[sv:Haridwar]]
[[te:హరిద్వార్]]
[[te:హరిద్వార్]]

06:31, 15 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

Haridwar
—  city  —
Aerial view of Haridwar
Aerial view of Haridwar
Haridwar
இருப்பிடம்: Haridwar

, Uttarakhand

அமைவிடம் 29°58′N 78°10′E / 29.96°N 78.16°E / 29.96; 78.16
நாடு  இந்தியா
மாநிலம் Uttarakhand
மாவட்டம் Haridwar
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி Haridwar
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

2,360 சதுர கிலோமீட்டர்கள் (910 sq mi)

249.7 மீட்டர்கள் (819 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
இணையதளம் haridwar.nic.in


ஹரித்வார் என்பது (ஹிந்தியில் ஹர்த்வார் என உச்சரிக்கப்படுகிறது, ஹிந்தி: हरिद्वार भारत) pronunciation) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமும் நகராட்சி மன்றமும் ஆகும். ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ஹரியின் த்வாரம் அல்லது கடவுளின் வழி, அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது.[4][5] ஹரித்வார் இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

தனது ஆதாரமான கொவுமுக்கிலிருந்து 253 கி.மீ. (157 மைல்கள்), கடல் மட்டத்திலிருந்து 3,139 மீட்டர் (10,300 அடி) கங்கோத்ரி பனிமுகட்டின் முனை வரையில் பயணம் செய்த பின்னர் கங்கை நதியானது வட இந்தியாவின் ஹரித்வாரில்,[6] இந்திய-கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. இதுதான் கங்கை சமவெளிக்குள் இறங்கும் இடத்தில் அந்நகரத்திற்கு அதன் பழம் பெயரான கங்கத்வாரா (गंगाद्वार) என்பதனை அளித்தது.[7]

இந்து வேத சாசனங்களின்படி, ஹரித்வார் என்பது அமிர்தம் என்கிற அழியாத்தன்மைத் தருகிற திரவம் சமுத்திர மந்தனுக்குப் பிறகு தெய்வீகப் பறவையான கருடனால் எடுத்துச் செல்லப்படும் போது பெரிய குடுவை ஒன்றிலிருந்து சிந்திய நான்கு இடங்களில் ஒன்றாகும்.[5] உஜ்ஜயின், ஹரித்வார், நாசிக், அலஹாபாத் ஆகியவை இந்த நான்கு இடங்களாகும். இன்று, கும்பமேளா இந்த நான்கு இடங்களில் ஒன்றில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. மஹா கும்பமேளா பன்னிரெண்டாம் வருடத்தில் அலஹாபாத்தின் பிரயாக்கில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட உலகம் முழுவதும் இருந்தும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களும், பக்தர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு கூடுகின்றனர். இவர்கள் கங்கை நதியின் கரைகளில் சடங்குகளுடன் புனித நீராடுவர்.

அமிர்தம் விழுந்த இடம் ஹரித்வாரின் மிகப் புனிதமான மலைவழியான ஹர் கி பாவ்ரியில் (நேர்ச்சரியாக, "இறைவனின் காலடிகள்") பிரம்ம குந்த் எனக் கருதப்படுகிறது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் புனித யாத்ரீகர்கள் திருவிழாக்களின் போது திரள்வர் அல்லது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புனித முழுக்கு ஒன்றினைச் செய்துகொள்ள வருவர். இச்செயல் ஒருவர் தனது பாவங்களைக் களைந்து மோட்சத்தினை அடைவதற்கு இணையானதாகும்.

ஹரித்வார் மாவட்டம் 1988 ஆம் ஆண்டு 28 டிசம்பர் அன்று சஹரான்புர் கோட்ட ஆணையரகத்தின்[1] பகுதியாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று[8] உத்தரப்பிரதேச சட்ட மன்றமானது 'உத்தரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டம்' 1998' என்பதனை நிறைவேற்றியது. இறுதியாக இந்திய நாடாளுமன்றமும் இந்திய ஒருங்கிணைந்த சட்டம் - 'உத்தரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2000' என்பதனை நிறைவேற்றியது. ஆகையால் 2000 ஆம் ஆண்டு 9 நவம்பர் அன்று[9] ஹரித்வார் இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாகப் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தின் (அப்போதைய உத்தராஞ்சல்) ஒரு பகுதியானது.

இன்று இந்நகரம் அதன் மத ரீதியிலான முக்கியத்துவத்தையும் கடந்து, மாநில உட்கட்டமைப்பு & தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்தின் (SIDCUL) வேகமான வளர்ச்சியுடன் கூடிய மாநிலத்தின் முதன்மை தொழிற்துறை இலக்காகவும்[10], தொழிற்பேட்டையுடனும், அருகிலுள்ள பி.எச்.ஈ.எல் (பாரத மிகுமின் நிறுவனம்) தன்னாட்சி நகரமும் மற்றும் அதனுடன் இணைந்த துணைத் தொழிலகங்களோடும் உருவாகி வரும் நகரமாக உள்ளது.

வரலாற்றிலும் இன்றும் ஹரித்வார்

இளவரசர் பாகீரத் தனது 60,000 முன்னோர்களின் முக்திக்காக தவமிருக்கிறார்.
கங்கதாரா, சிவன் கங்கை நதியை இறக்குவதைப் பார்வதி, பாகீரதா மற்றும் காளைக் கடவுளான நந்தித் தேவர் ஆகியோர் காண்கின்றனர். சிர்கா 1740
ஹரித்வாரின் ஹர்-கி-பாவ்ரியின் மாலைப்பொழுதுப் பூஜைகள்
கங்கைக் கால்வாயின் முகப்பு சிர்கா1894-1898.
கங்கையின் எதிர்க் கரையிலிருந்து ஹரித்வார், 1866

இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கபுரியான ஹரித்வார், இந்தியாவின் பண்பாடு மற்றும் நாகரீகத்தை பலவண்ணக்காட்சியாக அளிக்கிறது. இது வேத சாசனங்களில் கபிலாஸ்தானம், கங்காத்வார்[11] மற்றும் மாயாபுரி[12] என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. இது சார் தாம்மின் (பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய உத்தரகண்டிலுள்ள நான்கு முக்கியப் புனிதத்தலங்கள்) நுழைவாயிலாக உள்ளது. எனவே இதனைச் சைவர்கள் (சிவ பெருமானைப் பின்பற்றுபவர்கள்) ஹர்த்வார் என்றும், வைணவர்கள் (விஷ்ணுவைப் பின்பற்றுபவர்கள்) ஹரித்வார் என்றும் அழைக்கின்றனர், இவை முறையே ஹர் என்பது சிவனையும் ஹரி என்பது விஷ்ணுவையும் குறிக்கின்றன.[11][13][14]

"O Yudhishthira, the spot where Ganga rusheth past, cleaving the foremost of mountains which is frequented by Gandharvas and Yakshas and Rakshasas and Apsaras, and inhabited by hunters, and Kinnaras, is called Gangadwara (Haridwar). O King, Sanatkumara regardeth that spot visited by Brahmarshis, as also the Tirtha Kanakhala (that is near to it), as sacred.
-- The Mahabharata, Vana Parva: Tirtha-yatra Parva: Section XC. [15]

மகாபாரதத்தின் வனபர்வத்தில் தௌமிய முனிவர் யுதிஷ்டிரரிடம் இந்திய தீர்த்தங்களைப் பற்றி கூறும்போது, கங்காத்வார் அதாவது ஹரித்வார் மற்றும் கான்கால் ஆகிய தீர்த்தங்கள் பற்றிக் குறிப்பிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன[16]. மேலும் அந்நூலானது அகத்திய முனிவர் அவரது மனைவி லோபமுத்ராவுடன் (விதர்பாவின் இளவரசி) இங்கு தவமிருந்ததாகவும் குறிப்பிடுகின்றது.[17]

கபில முனிவர் அங்கு ஒரு ஆசிரமத்தை கொண்டிருந்ததால், அது பழமையான பெயரான கபிலா அல்லது கபிலஸ்தானம் என்ற பாரம்பரியப் பெயரைப் பெற்றது.[13]

பண்டையகாலத்து அரசனான பாகீரதன், சூரியவம்ச அரசனான சாகரின் (இராமரின் மூதாதையர்) கொள்ளுப்பேரன் ஆவார்.[18] இவர் சத்ய யுகத்தில் கபில முனிவரின் சாபத்திலிருந்து தனது மூதாதையர்கள் 60,000 பேரை சாபவிமோசனமடையச் செய்வதற்காக தனது வருடக் கணக்கிலான தவத்தின் மூலமாக சொர்க்கத்திலிருந்து கங்கை நதியைக் கொண்டுவந்தார்.[19][20] இதுவே ஆழ்ந்தப் பற்றுடைய இந்துக்கள், இறந்து போன தங்கள் குடும்பத்தினர் மோட்சமடைவதற்காக அவர்களின் சாம்பலை (அஸ்தியை) இங்கு கொண்டு வந்து கரைப்பது ஒரு மரபாகவே தொடரப்படுகின்றது.[21] பகவான் விஷ்ணு தனது காலடிச் சுவடை ஹர்-கி-பாவ்ரி மேற்சுவற்றின் மீது அமைந்துள்ள கல்மீது பதித்துவிட்டுச் சென்ற இடத்தை, புனித கங்கை நதியானது எல்லா நேரமும் தொட்டு விட்டுச் செல்கிறது.

மௌரிய பேரரசின் (கி.மு.322-185) கீழ் வந்த ஹரித்வார், பின்னர் குஷான பேரரசின் கீழ் (சிர்கா. முதல்-மூன்றாம் நூற்றாண்டுகளில்) வந்தது. அகழ்வாய்வுப் பணிகளின் கால அளவியல் கண்டுபிடிப்புகளானவை, அங்கு சுடுமண் நாகரீகம் கி.மு. 1200 ஆம் ஆண்டிற்கும் கி.மு. 1700 ஆம் ஆண்டிற்கும் இடையில் நிலவியதாக நிரூபித்தது.[14] முதல் நவீன கால ஹரித்வாரின் எழுத்துப்பூர்வ ஆதாரம் இந்தியாவிற்கு கி.பி. 629[22] ஆம் ஆண்டில் விஜயம் செய்த சீனப் புனிதப் பயணியான ஹுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் காணப்படுகிறது. அரசர் ஹர்ஷவர்த்தனரின் (590-647) ஆட்சிக் காலத்தில் ஹரித்வாரை அவர் 'மோ-யு-லோ' என்று பதிவு செய்தார். மீதமுள்ள ஆதாரங்கள் நவீன நகரத்தின் சிறிது தெற்கேயுள்ள மாயாபூரில் இன்றும் உள்ளது. ஒரு கோட்டையும் மற்றும் மூன்று கோயில்களும் உடைந்துப் போன கல் சிற்பங்களுடன் அந்த இடிபாடுகளின் மத்தியில் உள்ளன.[13][23][24] மேலும் கங்கையின் நுழைவாயிலான 'கங்கத்வாரா' என்று அழைக்கப்படுகின்ற மோ-யு-லோவிற்கு வடக்கில் ஒரு கோயில் இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.[13]

இந்நகரம் துருக்கிய படையெடுப்பாளரான டிமுர் லாங் (1336-1405) என்பவரால் 1399 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று படை எடுக்கப்பட்டது.[25]

சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் (1469-1539) தனது ஹரித்வார் பயணத்தின் போது 'குஷன் காட்' டில் குளித்தார். அங்குதான் பிரபலமான 'செடிகளுக்கு நீருற்றுதல்' சம்பவம் நடந்தேறியது[26][27]. அவரது அந்தப் பயணம் இக்காலத்தில் குருத்வாரா (குருத்வாரா நானக்வாரா) என்று நினைவூட்டப்படுகிறது. இரு சீக்கிய ஜனம்சாக்கிகளின் படி, இவ்வருகையானது கி.பி 1504 ஆம் ஆண்டில் பைசாகி தினத்தன்று நடந்தது. பின்னர் அவர் கார்வாலின் கோட்த்வாராவிற்கு வருகை தந்தபோது வழியில் கன்க்காலிற்கும் வந்தார்.[28] பெரும்பாலான இந்துக்களின் மரபுவழி ஆய்வுப் பதிவுகளை ஹரித்வாரின் பாண்டாக்கள் வைத்திருப்பதற்காக அறியப்படுகின்றது. வாஹிஸ் என அறியப்படும் இந்த ஆவணங்கள் ஒவ்வொரு வருகையின் போதும் புதுப்பிக்கப்படுகிறது. அவை வட இந்தியாவின் பரவலான குடும்பக் கிளையமைப்புகளின் களஞ்சியமாகும்.[28]

அய்-னி-அக்பரி என்ற நூலை அபுல் ஃபசல் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில் எழுதினார். இது இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான கங்கையின் மீதுள்ள ஹர்த்வார் என அறியப்பட்ட அந்நகரை மாயா (மாயாபுர்) எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அது நீளத்தில் பதினெட்டு கோக்களை (ஒவ்வொன்றும் தோராயமாக 2 கி.மீ) உள்ளதாகவும், சைத்ராவின் 10 வது நாளில் பெரும்திரளான யாத்ரீகர்கள் கூடுவார்கள் எனவும் குறிப்பிடுகிறது.[29] மேலும் மொகலாயப் பேரரசர் அக்பர் அவரது பயணங்களின் போதும், அரண்மனையிலிருந்த போதும் கங்கையின் நீரை பருகினார் எனவும், அதனை 'அழிவின்மையை வழங்கும் நீர்' எனவும் அழைத்தார் என்றும் குறிப்பிடுகின்றது. அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் முத்திரையிடப்பட்ட ஜாடிகளில் நீரை அனுப்புவதற்காக சோருன்னிலும், பின்னர் ஹரித்வாரிலிருந்தும் பிரத்தியேக நபர்கள் பணியமர்த்தப்பட்டனர்.[30]

முகலாயர் காலத்தில், ஹரித்வாரில் அக்பரின் செப்புக் காசுகளை அச்சு வார்க்கும் நாணயச் சாலை இருந்தது.[31][32][33][34] ஆம்பரின் அரசரான ராஜா மான் சிங் தற்போதைய ஹரித்வாரின் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார் எனவும், ஹர்-கி-பாவ்ரி மலைவழியைப் புனரமைத்தார் எனவும் கூறப்படுகிறது. அவரது மறைவிற்குப் பிறகு அவரின் சாம்பல் பிரம்ம குந்த்தில் மொகலாய பேரரசர் அக்பரின் மூலமாகவே கரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பேரரசர் ஜஹாங்கீர் (1596-1627) காலத்தில் இந்நகரத்திற்கு வருகைத் தந்த தாமஸ் கோர்யாட் என்ற ஓர் ஆங்கில பயணி, இதை 'ஹரித்வாரா' அதாவது சிவனின் தலைநகரம் எனக் குறிப்பிட்டார்.[13]

தற்போது இருக்கின்ற நகரங்களில் பழமையான ஒன்றாகவும், தொன்மையான இந்து வேத சாசனங்களிளும் குறிப்பிடப்பட்டுள்ள ஹரித்வார், புத்தர் காலத்திலிருந்து மிகச்சமீபத்திய பிரிட்டிஷ் வருகை வரையில் வாழ்க்கை முறைகளினாலும் காலங்களிலும் நீடித்துப் பின்னிக் கிடக்கின்றது. ஹரித்வார் தொன்மையான வளமான மத மற்றும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளது. இந்நகரம் இன்னும் பல பழைய மாளிகைகளையும் சீரிய சுவர்ச்சித்திரங்களையும் பெரும் புதிரான கல் வேலைப்பாடுகளையும் தாங்கியுள்ள மற்றும் பெரிய வீடுகளையும் கொண்டிருக்கிறது.

இங்கு கங்கை நதியின் மீது அமைந்திருக்கும் பெரிய இரு அணைகளில் ஒன்றான 'பீம்கோடா அணை' உள்ளது. இது 1840களில் 'உயர் கங்கை கால்வாய்' மூலம் சுற்றுப் புறத்திலுள்ள நிலங்களுக்கு கங்கையின் நீரினை திருப்பி பாசன வசதியளிப்பதற்காகக் கட்டப்பட்டது. இருப்பினும், இது கங்கையின் நீரோட்டத்தை கடுமையாக பாதித்தது. மேலும் கங்கையை ஒரு உள் நாட்டு நீர் வழியாக 18 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியால் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதையும், மேலும் டெஹ்ரி உயர்ந்த துறைமுக நகரமாக இருந்ததையும் பாழடித்தது. கங்கைக் கால்வாய் அமைப்பின் முக்கிய நீர்த் தேக்கப் பணி ஹரித்வாரிலுள்ளது.[6][35] 1837-38 வறட்சியினால் தூண்டப்பட்ட உயர் கங்கைக் கால்வாய் திட்டமானது 1842 ஆம் ஆண்டு ஏப்ரலில் துவங்கப்பட்டு,[36] 1854 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.[36] கால்வாயின் தனித்த சிறப்பம்சமான அரை-கிலோ-மீட்டர் நீளமுள்ள கால்வாய்ப் பாலமானது ரூர்கியிலுள்ள சோலானி நதியின் மீது அமைந்துள்ளது. உண்மையான நதியிலிருந்து 25 மீட்டர்கள் கால்வயை உயர்த்துகிறது.

ஹரித்வார் யுனைடெட் ப்ரொவின்ஸ்சின் ஒரு பகுதியாக, 1903

'ஹரித்வார் ஒன்றிய நகராட்சி' 1868 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது அப்போதைய கிராமங்களான மாயாபூர் மற்றும் கன்கால் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஹரித்வார் முதலில் 1886 ஆம் ஆண்டில் லக்சர் வழியாக கிளைப் பாதை மூலமாக இரயில்பாதைகளுடன் இணைக்கப்பட்டது, அச்சமயம் அவத் மற்றும் ரோஹிலாகண்ட் இரயில்வேப் பாதையானது ரூர்கியிலிருந்து சஹரான்புர் வரையில் நீடிக்கப்பட்டது. இது பின்னர் 1900 ஆம் ஆண்டில் டெஹ்ராடுன் வரை நீடிக்கப்பட்டது.[37]

1901 ஆம் ஆண்டில், அது 25,597 மக்கட் தொகையினைக் கொண்டு யுனைட்டெட் மாகாணத்தின் சஹரான்புர் மாவட்டத்தில் ரூர்கி தேஹ்சிலின் பகுதியாக இருந்தது.[13] அது 1947 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உருவாக்கம் வரை அவ்வாறேயிருந்தது.[38]

ஹரித்வார் உள்ளத்தாலும், சிந்தனையாலும் ஆன்மாவிலும் சோர்வுற்றவர்களின் உறைவிடமாக உள்ளது. பல்வேறு கலைகள், அறிவியல் மற்றும் பண்பாடுகளை கற்றுக்கொள்வதற்கான கவரும் மையமாகவும் உள்ளது. இந்நகரம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் நீண்ட கால வளமான மையமாக விளங்கி வருகிறது. மேலும் தனித்த குருகுலத்தின் இல்லமாகவும், (பாரம்பரிய கல்விப் பள்ளி) குருகுல் காங்க்ரி விஷ்வவித்யாலயாவையும் உள்ளடக்கியுள்ளது. அது 1802 ஆம் ஆண்டு முதல் பரந்த வளாகத்தில் தனது சொந்த பாரம்பரியக் கல்வியை கொடுத்து வருகிறது. ஹரித்வாரின் வளர்ச்சியில் உயர் திருப்பம் 1960களில் ஏற்பட்டது. 1962 ஆம் ஆண்டில் 'நவரத்ன பொதுத் துறை நிறுவனமான 'பெல்'லின் மூலமாக நவீன நாகரீகத்தின் கோயில் நிறுவப்பட்டது. அது தனது சொந்த பெல் ராணிப்புர் தன்னாட்சி நகரப்பகுதியை ராணிப்புர் கிராமங்களின் அருகில் கொண்டு வந்ததோடு மட்டுமின்றி அப்பகுதிக்கு துணை நிறுவனங்களின் அணியையும் கொணர்ந்தது. தற்போது ஐஐடி ரூர்க்கி என்றுள்ள ரூர்கி பல்கலைக்கழகம், பழமையான மற்றும் மிக கௌரவமான அதன் செயற்பாட்டு களங்களான அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளின் நிறுவனங்களில் ஒன்றாகும்.

ஹரித்வார் செல்லும் வழியிலுள்ள மைல்கல்

.

நிர்வாகப் பின்னணி

ஹரித்வார் மாவட்டம் மேற்கில் சஹரான்புர், கிழக்கிலும் வடக்கிலும் டெஹ்ராடுன், கிழக்கில் பௌரி கர்வால், தெற்கில் ரூர்க்கி, முசாபர்நகர் மற்றும் பிஜ்னூர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சேர்க்கப்படும் முன்னர், இம் மாவட்டம் சஹரான்புர் கோட்ட ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்தது.

இம் மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும், பகவான்புர், ரூர்க்கி, இக்பால்புர், மாங்கலாவுர், லாந்துவ்ரா, லக்சர், பட்த்ராபாத், ஹரித்வார் மற்றும் லால்டாங் உள்ளடங்கிய உத்தரகண்ட் மாநிலத்தின் 9 சட்ட மன்றத் தொகுதிகளையும் கொண்டிருக்கின்றது.[39]

மாவட்டமானது நிர்வாக ரீதியாக மூன்று வட்டங்களாக பின்வரும் உட்-பிரிப்புக்களைக் கொண்டுள்ளது: ஹரித்வார்,ரூர்க்கி மற்றும் லக்சர். மேலும் அது பின்வரும் ஆறு வளர்ச்சி முகமைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது: பகவான்புர்,ரூர்க்கி,நர்சான்,பஹட்ராபாத்,லக்சர் மற்றும் கான்புர்.[1][40] தற்போதைய ஹரித்வார் (மக்களவைத் தொகுதி) நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) 'ஹரிஷ் ராவத்' அவர்களும், ஹரித்வார் நகரத் தொகுதி உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவை உறுப்பினராக 'மதன் கௌஷிக்' அவர்களும் உள்ளனர்.[39][41]

மாவட்டத் தலைமை அலுவலகம், ஹரித்வாரின் இரயில்வே நிலையத்திலிருந்து 12 கிமீ தூரத்திலுள்ள ரோஷ்னாபாத்தில் உள்ளது. தலைமை வளர்ச்சி அதிகாரியின் அலுவலகம் விகாஸ் பவன், ரோஷ்னாபாத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விகாஸ் பவன், மாவட்ட நீதிமன்றம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் வரம்பு, மாவட்டச் சிறை, மாவட்ட விளையாட்டரங்கம், ஜவஹர் நவோதயா வித்யாலயா போன்றவை இப்பகுதியில் நிறுவப்பட்ட முக்கிய அலுவலகங்களாகும். இதர நிர்வாக அலுவலகங்களான லோக் சேவா ஆயுக் மற்றும் சமஸ்கிருத கல்வி நிறுவனம் ஆகியவையும் இங்கே நிறுவப்பட்டுள்ளன.

புவியமைப்பு

ஹரித்வார் கங்கை மலையிலிருந்து தோன்றி சமவெளிகளைத் தொடுகின்ற முதலாவது நகரங்களில் ஒன்றாகும். மழைக்காலங்கள் தவிர கங்கையின் நீர் பெரும்பாலும் தூய்மையாகவும் பொதுவாக குளிர்ந்துமிருக்கும். அப்போது மேற்புறப் பகுதிகளிலிருந்து கீழே தரைப் பகுதிக்கு மண் விழுகின்றது.

கங்கை வரிசையான ஒன்றையொன்று விலகிய கால்வாய்களில் பாய்கிறது. அக்கால்வாய்களில் மரங்கள் அடர்ந்திருக்கும். ராணிப்பூர் ராவ், பத்ரி ராவ், ராவி ராவ், ஹர்னாயி ராவ், பேகம் நதி முதலியவை பிற சிறு பருவகால நீரோடைகள் ஆகும்.[42] மாவட்டத்தின் பெரும்பகுதி காடாக உள்ளது. மேலும் ராஜாஜி தேசியப் பூங்கா மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் சாகசப் பிரியர்களுக்கு பொருத்தமான செல்லிடமாக உள்ளது. ராஜாஜி தேசியப் பூங்கா பல்வேறு வாயில்கள் வழியாக அணுகக்கூடியது; ராம்கர் வாயில் மற்றும் மோஹந்த் வாயில் ஆகியவை டேஹ்ரடூனிலிருந்து 25 கி.மீ. தூரத்திலுள்ளன, மோடிச்சூர், ராணிப்பூர் மற்றும் சில்லா வாயில் ஆகியவை ஹரித்வாரிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்திலுள்ளன. குனாவோ வாயில் ரிஷிகேசத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும், லால்தாங் வாயில் கோட்வாராவிலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் உள்ளன.

ஹரித்வார் மாவட்டம், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியில் சுமார் 2360 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் அட்சக் கோடு முறையே வடக்கில் 29.96 கோணத்திலும் தீர்க்கக் கோடு கிழக்கில் 78.16 கோணத்திலும் உள்ளன.[2][43]

ஹரித்வார் கடல் மட்டத்திலிருந்து[1] 249.7 மீட்டர் உயரத்தில், வடக்கு மற்றும் வட கிழக்கில் ஷிவாலிக் மலைகளுக்கும் தெற்கில் கங்கா நதிக்கும் இடையிலுள்ளது.[42]

ஹரித்வாரில் இந்து மரபுவழி ஆய்வுப் பதிவுகள்

1880 களின் ஹரித்வாரின் முக்கிய குளிக்கும் மலைவழிப்பாதை.

இன்று இந்தியர்களுக்கும் வெளி நாட்டில் குடியேறியவர்களுக்கும் நன்கு அறியப்படாத ஒன்று பாரம்பரிய பழக்கமான கடந்த பல தலைமுறைகளுக்கான இந்து குடும்பங்களின் விரிவான மரபுவழி ஆய்வுகள் ஆகும். தொழில்முறையிலான இந்து பிராமண பண்டிதர்கள் பிரபலமாக பாண்டாக்கள் என அறியப்படுபவர். இந்துப் புனித நகரான ஹரித்வாரில் கையால் எழுதப்பட்ட பதிவேடுகளில், அவர்களின் பண்டித மூதாதையர்களால் தலைமுறைகளாக கைமாற்றப்பட்டது என்பது ஒருவரின் மூதாதையர்களின் உண்மையான மாவட்டம் மற்றும் கிராமங்களின்படி பிரிக்கப்பட்டது. குறிப்பிட்ட மாவட்ட பதிவேடுகள் குறிப்பிட்ட சிறப்பு பண்டிதக் குடும்பங்கள் பொறுப்பிலிருக்கும். இன்னும் சில நேர்வுகளில் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் விடப்பட்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த பாரம்பரிய கிராம, மாவட்ட இந்துக்களின் விவரங்கள் உட்பட வைக்கப்பட்டிருக்கும். பல நேர்வுகளில் தற்போதைய வழித்தோன்றல்கள், இக்காலத்தில் சீக்கியர்களாகவோ முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ இருக்கலாம். இது பொதுவான வழக்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஒருவர் அவரது கடந்த ஏழு தலைமுறைகளின் வரையோ அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை இந்த குடிவழிப்பட்டியல்களில் காணும்படி ஹரித்வாரின் பாண்டாக்கள் வைத்துள்ளனர்.

நூற்றாண்டுகளாக புனித நகரான ஹரித்வாருக்கு விஜயம் செய்யும் இந்து முன்னோர்கள், எக்காரணத்தினை முன்னிட்டும் வருபவர்கள் பெரும்பாலும் புனித யாத்திரை அல்லது/மற்றும் அவர்களது இறந்தவர்களின் உடலை எரிக்க அல்லது இந்து மத வழக்கப்படி எரிக்கப்பட்ட உறவினர்களின் சாம்பல் மற்றும் எலும்புகளைப் புனித நதியான கங்கையில் கரைக்க வரும்போது, பாரம்பரிய வழக்கமாக குடும்ப பண்டிதரிடம் சென்று அவர்களது குடும்பக் கிளையின் விவரங்களோடு அனைத்து திருமணம், பிறப்பு மற்றும் இறப்புகளுடன் ஒருவரது விஸ்தரித்த கூட்டுக் குடும்ப பதிவுகளைப் புதுப்பிப்பர்.

இன்றைய இந்தியாவில் ஹரித்வாருக்கு விஜயம் செய்யும் மக்கள் பண்டிதர்கள் எதிர்பாராமல் வருந்தி அழைத்து அவர்களது மூதாதையரின் குடும்ப கிளையின் குடிவழிப்பட்டியலினை புதுப்பித்துக்கொள்ளும்படி கேட்கும்போது வாயடைத்து போகின்றனர். இச்செய்தி காட்டுத்தீ போல் பண்டிதர்களிடம் பரவி ஒருவரது குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட பண்டிதர் அவரது விஜயம் பற்றி விரைவாக அறிவிக்கப்படுகின்றார். தற்காலத்தில் இந்து கூட்டுக் குடும்ப அமைப்பானது தனிக் குடும்பங்களாக மக்களால் விரும்பப்பட்டு பிரிகையில், பதிவுகளை வைத்திருக்கும் பண்டிதர்கள் ஹரித்வாருக்கு விஜயம் செய்பவர்களை அவர்களது அனைத்து விஸ்தரிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டு எல்லா சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் மாவட்டம் பற்றிய விவரங்களையும், பாட்டன்மார் பெயர்கள் மற்றும் கொள்ளு பாட்டன்மார் மற்றும் அந்த விஸ்தரிக்கப்பட்ட குடும்பத்தில் நடைபெற்ற திருமணங்கள், பிறப்புக்கள் மற்றும் இறப்புக்களுடன் திருமணம் செய்துகொண்ட குடும்பங்களின் முடிந்தளவு அதிகமான விவரங்களுடன் தயாராக வரும்படி கூறுகின்றனர். விஜயம் செய்யும் குடும்ப உறுப்பினர் தனிப்பட்ட முறையில் குடும்ப பாண்டா வினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட குடும்ப மரபு வழியில் அதனை எதிர்கால குடும்ப உறுப்பினரின் வருகைக்காக புதுப்பித்தும், எதிர்கால தலைமுறைகள் அதனைப் பார்த்து புதுப்பிக்கப்பட்ட பதிவுகளை அங்கீகரிக்கவும், கையொப்பம் இடவும் வேண்டும். விஜயத்தின் போது உடன் வரும் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும்கூட சாட்சியங்களாகக் கையொப்பமிடத் தேவையுள்ளது.

காலநிலை

வெப்பநிலைகள்:

  • கோடைகாலங்களில்: 15 °செ.- 39.8°செ.
  • குளிர்காலங்களில்: 6°செ. - 16.6°செ.[44]

மக்கட்தொகை

As of 2001 இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ,[45] ஹரித்வார் மாவட்டம் மக்கட்தொகையாக 2,95,213 பேர்களைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் 54% ஆண்களும், 46% பெண்களும் ஆவர். ஹரித்வாரின் கல்வியறிவு விகிதம் 70%, இது நாட்டின் கல்வியறிவு விகிதமான 59.5% என்பதை விட அதிகமாகும்: ஆண்கள் கல்வியறிவு விகிதம் 75% மற்றும் பெண்கள் கல்வியறிவு விகிதம் 64% ஆக உள்ளன. ஹரித்வாரில், 12% மக்கட்தொகை ஆறு வயதிற்குட்பட்டவராவர்.

காணத் தூண்டும் இடங்கள்

ஹர்-கி-பாவ்ரியிலுள்ள மால்வியா தீபாவின் மீதான கடிகார கோபுரம்.
ஹர்-கி-பாவ்ரியில் 'மாலை ஆராதனை' காட்சி
ஹரித்வாரின் மன்சா தேவி கோயிலுக்கான இழுவை வண்டி

இந்து மரபுகளில், ஹரித்வாரிலிருக்கும் 'பஞ்ச தீர்த்தங்கள்', கங்கத்வாரா (ஹர்-கி-பாவ்ரி ), குஷ்வர்த் (காட் ), கன்கால், பில்வா தீர்த் (மன்சா தேவி ) மற்றும் நீத் பர்வத் (சாண்டி தேவி ) ஆகியவையாகும்.[46][47]

ஹர்-கி-பாவ்ரி

இந்த புனித மலைவழிப்பாதை விக்கிரமாதித்யா அரசரால் (கி.மு முதலாம் நூற்றாண்டு) அவரது சகோதரர் பிரித்ஹரியின் நினைவாக கட்டப்பட்டது. பிரித்ஹரி ஹரித்வாருக்கு வருகை புரிந்து புனித கங்கையின் கரைகளில் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவரது சகோதரர் அவரது பெயரில் மலைவழிப்பாதையை கட்டினார், அது பின்னர் ஹர்-கி-பாவ்ரி என அறியப்பட்டது. ஹர்ர்-கி-பாவ்ரியின் உள்ளே இருக்கும் மிகப் புனிதமான மலைவழிப்பாதை பிரம்ம குந்த் ஆகும். மாலை மங்கிய நேரத்தில் மாலைப் பொழுதில் கங்கா தேவிக்கு ஹர்-கி-பாவ்ரியில் (கடவுள் ஹர அல்லது சிவன் காலடி) செய்யப்படும் பூஜை (ஆர்த்தி), எந்தவொரு வருகையாளரையும் மயக்கும் அனுபவமாகும். ஒரு காணத்தக்க காட்சியாக ஒலியும் நிறமும் பூஜைக்குப் பின்னர் காணப்படும், புனித யாத்ரீகர்கள் தியாக்களையும் (தீபப் பூக்களை) நறுமணப்புகையினையும் அவர்களது இறந்துப் போன மூதாதையர்களின் நினைவாக மிதக்கவிடுவர். உலகெங்குமிருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் ஹரித்வார் வருகையில் இப் பூஜையின் போது உடனிருப்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வர். பெரும்பாலான தற்போதைய மலைவழிப்பாதைகள் 1800 களில் பேரளவில் உருவாக்கப்பட்டன.[48]

சாண்டி தேவி கோயில் - 6 கி.மீ.

இக் கோயில் கங்கை நதியின் கிழக்குக் கரையில் 'நீல் பர்வத்தின்' மீது அமர்ந்திருக்கும் சாண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கி.பி 1929 ஆம் ஆண்டில் காஷ்மீர அரசர் சுசாத் சிங்கினால் கட்டப்பட்டதாகும். ஸ்கந்த புராணம் ஒரு புராணக் கதையைக் கூறுகிறது, அதில் உள்ளூர் அரக்க அரசர்களான ஷும்ப் மற்றும் நிஷும்ப் ஆகியோரின் படைத் தளபதியான சண்ட-முண்ட என்பவன் சாண்டி தேவியால் கொல்லப்பட்டதால் அதன் பொருட்டு இப்பகுதி சாண்டி தேவி எனும் பெயர் பெற்றது.[49] முதன்மைச் சிலை ஆதி சங்கரரால் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இக் கோயில் சாண்டிகாட்டிலிருந்து 3 கி.மீ தொலைவு அமைந்துள்ளதை நடைப்பயணமாகவும், இழுவை வண்டிப் போக்குவரத்து மூலமும் அடையலாம். தொலைபேசி:01334-220324, நேரம்-காலை 8.30 முதல் மாலை 6 வரை.

மன்சா தேவி கோயில் - 0.5 கி.மீ.

பில்வ பர்வத்தின் மீது அமைந்திருக்கும் மன்சா தேவியின் இக் கோயில் சரி நேராக ஆசைகளை நிறைவேற்றும் கடவுள் எனப் பொருள்படுவதானது, ஒரு சுற்றுலா இலக்காகும், குறிப்பாக நகரின் முழுமையையும் கண்ணைக் கவருகிற விதத்தில் கம்பி வாகனங்களால் அளிக்கப்படும் காரணத்தினால் புகழ்பெற்றது. முதன்மைக் கோயில் இரு தேவியரைக் கொண்டுள்ளது, ஒன்று அதில் மூன்று வாய்களையும் ஐந்து கரங்களையும், மற்றொன்று எட்டுக் கரங்களையும் வைத்திருக்கிறது. தொலைபேசி: 01334-227745.[50]

மாயா தேவி கோயில் - 0.5 கி.மீ.

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பழமையான மாயா தேவிக் கோயில் ஹரித்வாரின்[51] ஆதிஷத்ரி திருவுருவச் சிலையைக் கொண்டது. இது சித்தபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, சதி தேவியின் இதயமும் தொப்புளும் விழுந்த இடமாகக் கூறப்படுகிறது. ஹரித்வாரில் இன்றும் நிலைத்திருக்கும் மிகச் சில நாராயணி ஷீலா மற்றும் பைரவ் கோயில் போன்றப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.[52]

தக்ஷேஷ்வர மஹாதேவ் கோயில் -4 கி.மீ.

தெற்கு கன்கால் நகரில் இடம் பெற்றிருக்கும் பழமையான தக்‌ஷா மஹாதேவ் ஆலயம் தக்‌ஷேஸ்வரா மஹாதேவ் கோயில் எனவும் அறியப்படுகிறது. இந்து நூல்களுக்கிணங்க அரசர் தக்ஷ பிராஜாபதி, இறைவன் சிவனின் முதல் மனைவி, தக்ஷயாயிணியின் (சதி) தந்தை, ஓர் யக்ஞம் புரிந்து அதற்கு வேண்டுமென்றே கடவுள் சிவனை அழைக்காமலிருக்கிறார். அவர் அழைக்கப்படாமலிருந்தும் வருகைதர, மேலும் அரசரால் அவமானத்திற்குள்ளாக்கப்படுகிறார். இதனைக் கண்டு சீற்றமடையும் சதி யக்ஞ குண்டத்தில் தன்னைச் சுய-பலியிடுகிறார்.

பின்னர் சிவனின் கோபத்தால் உருவாகும் சிறு தெய்வமான வீரபத்ரா அரசர் தக்ஷாவைக் கொல்கிறார். அதன் பிறகு சிவனால் அரசர் மீண்டும் ஆட்டின் தலையுடன் உயிர்ப்பிக்கப்படுகிறார். தக்ஷ மஹாதேவ் கோயில் இப்பழங்கதைக்குப் பங்களிப்பாகும்.

நீல் தாரா பக்ஷி விஹார் - 3.5 கி.மீ.

இந்த பறவைகள் சரணாலயம் முக்கிய கங்கை நதியின் மேல் அல்லது நீல் தாராவில் பீம்கோடா குறுக்கணையில் இடம் பெற்றுள்ளது. இது பறவை நோக்கர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மேலும் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கு வீடாகவும் உள்ளது.[53]

சதி குந்த் - 4 கி.மீ.

சதி குந்த், நன்கறியப்பட்ட புராண பாரம்பரியம் கன்காலிலிருப்பது ஒருமுறை பயணம் செய்யத் தகுதியானது. இந்த குந்த்தில்தான் சதி தன்னைச் சுய பலி கொடுத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன.

பீம்கோடா ஏரி

ஹர்-கி-பாவ்ரியிலிருந்து இந்த ஏரி சுமார் ஒரு கி.மீ. தூரத்திலுள்ளது. பாண்டவர்கள் இமயமலைக்கு ஹரித்வார் வழியாகச் செல்லும் போது இளவல் பீமன் நிலத்தின் மீது தனது முழங்கால் மூட்டினால் உதைத்து பாறைகளிலிருந்து நீரை வரவழைத்ததாகக் கூறப்படுகிறது.

ஜெய்ராம் ஆஷ்ரம்

அதன் எழிலானது பல வண்ணத் தோற்ற கண்காட்சிக்குப் பிரபலமானது. மேலும் ஒரு மிகப் பெரிய வெள்ளைச் சிலை புகழ் பெற்ற சமுத்ர மந்தன் கதைப் பகுதியினை பிரதிபலிப்பகிறது, அது எந்தவொரு வருகையாளருக்கும் கட்டாயம் காண வேண்டியதாக உள்ளது.

சப்த ரிஷி ஆஷ்ரம் & சப்த சரோவர் - 7 கி.மீ.

இது ஹரித்வாரின் அருகிலுள்ள கண்ணைக் கவருகிற இடமாகும். அங்கு பெயர் வரிசைப்படி, காஷ்யபர், வஷிஷ்டர், அத்ரி, விஷ்வாமித்ரா, ஜமதாக்னி, பாரத்வாஜர் மற்றும் கௌதமர் ஆகிய ஏழு பெரும் முனிவர்கள் அல்லது சப்தரிஷிகள் தவமிருந்த இடமாகக் கூறப்படுகிறது. கங்கை இப்பகுதியில் அதன் பாய்ச்சலால் ரிஷிகள் தொந்தரவுக்கு ஆளாகக் கூடாது என்று தன்னைத்தானே ஏழு நதியோட்டங்களாக பிரித்துக் கொண்டு பாய்கிறாள்.

பராத் ஷிவ்லிங் - 2 கி.மீ.

கன்காலில் ஹரிஹர் ஆஷ்ரமத்திலுள்ளது. சுமார் 150 கிலோ எடையுள்ள சிவலிங்கம் மற்றும் ருத்ராக்ஷ மரம் ஆகியவை இவ்விடத்தின் முக்கிய ஈர்ப்புகளாகும்.

இராமானந்த் ஆஷ்ரம்

ஹரித்வாரின் நகரிலுள்ள இரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் ஷ்ரவன் நாத் நகரில் அமைந்திருக்கும் இது, இராமானந்த் சம்ப்ரதாயின் முக்கிய ஆசிரமமாகும். இந்த ஆசிரமத்தின் தலைவராக மஹந்த் பக்வான் தாஸ் உள்ளார்.

ராம் மந்திர் (கோயில்)

இந்த மந்திர் (கோயில்) பூபட்வாலாவில் சப்தரிஷி மார்க்கின் அருகிலுள்ளது கட்டப்பட்டு வருகிறது. மந்திர் (கோயில்) காசியின் பஞ்சகங்கா காட்டிலுள்ள ஸ்ரீமடத்தின் சுவாமி இராமானந்தச்சார்யா ஸ்மாரக் சேவா நியாய்ஸ்சின் தலைவரான ஜகத்குரு ராமானந்தச்சார்ய சுவாமி ராம்நரேஷாச்சார்யாவினால் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் இந்தியாவிலேயே மிகப் பெரியதாக இருக்கும்.

தூதாதாரி பார்ஃபானி கோயில்

தூதாதாரி பார்ஃபானி பாபாவின் ஆசிரமத்தின் ஒரு பகுதியான இக்கோயில் வளாகம் வெள்ளை சலவைக் கல்லில் செய்யப்பட்டுள்ளது. இது ஹரித்வாரின் மிக அழகிய இடங்களில் ஒன்றாகவும், குறிப்பாக ராம்-சீதா மற்றும் ஹனுமான் கோயில்களில் ஒன்றாகவும் உள்ளது.

சுரேஷ்வரி தேவி கோயில்

சுரேஷ்வரி தேவியின் கோயிலான இது, ராஜாஜி தேசியப் பூங்காவின் மத்தியில் அமைந்துள்ளது. தெளிந்த அமைதியும் மற்றும் மதமும் இக்கோயிலை வழிபாட்டாளர்கள், துறவிகள் முதலியவர்களை உறைவிடம் நாடி வரச் செய்கிறது. ஹரித்வாரின் வெளிப்புறத்தில் ராணிப்பூரில் அமைந்துள்ள இவ்விடம் செல்ல வனத்துறையின் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.

பாவன் தாம் पावन धाम

ஒரு நவீனக் கோயில், கண்ணாடி துண்டுகளால் முழுதும் செய்யப்பட்ட இது, தற்போது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும்.

பாரத மாதா மந்திர்

ஒரு பலதள அடுக்கு கோயில், பாரத மாதா, பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது, ஒவ்வொரு தளத்திலும் இந்திய வரலாற்றில் ஓர் காலத்தினை ராமாயணக் காலத்திலிருந்து தற்போதைய விடுதலைப் பெற்ற இந்தியா வரை குறிக்கின்றன.

ஆனந்தமயீ மா ஆசிரமம்

ஹரித்வாரின் ஐந்து துணை-நகரங்களின் ஒன்றான, கன்காலில் இடம் பெற்றுள்ள இந்த ஆசிரமம், இந்தியாவின் குறிப்பிடத்தக்க துறவிகளில் ஒருவரான ஸ்ரீ ஆனந்தமோயீ மாவின் ஸ்மாதி திருவிடத்தின் இல்லமாகும்.

பிரான் காளியார் - 20 கி.மீ.

டில்லியின்[54] அரசரான இப்ரஹீம் லோதியால் கட்டப்பட்ட, 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்தி வழி சூஃபி துறவியான (சர்க்கார் சபீர் பாக் எனவும் அறியப்படும்) இந்த ஹஸ்ரத் அலாதீன் சபீர் காளியாரி 'தர்ஹா' வானது, ரூர்கியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள காளியாரி கிராமத்திலிருக்கின்றது.[55][56] வருடாந்திர 'உர்ஸ்' திருவிழாவின் போது, உலகம் முழுதுமிருந்து பக்தர்களின் வருகைக் கொண்ட இது இஸ்லாமிய நாட்காட்டியின்படி ராபியுல் மாதத்தில் பிறையினைக் கண்ட முதல் நாளிலிருந்து 16 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவிலிருக்கும் மத நல்லிணக்கத்திற்கு வாழும் முன்உதாரணமாக உள்ளது.

நகரைச் சுற்றி பல பிற கோயில்களுள்ளன. ஹரித்வாரில் மதுவோ இறைச்சி உணவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக அறியவேண்டியதாகும்.

கல்வி நிறுவனங்கள்

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கி - 30 கி.மீ.

முன்னாள் ரூர்க்கி பொறியியல் கல்லூரியான இது, உயர்க் கல்வி அளிக்கும் முதன்மையான இந்திய நிறுவனங்களில் ஒன்றாகும். ஹரித்வாரிலிருந்து அரை மணி நேர பயண தூரத்திலிருக்கும் ரூர்க்கியில் கம்பீரமான மிகுந்த பெரிய மற்றும் அழகிய வளாகத்தினைக் கொண்டதாகும்.

ரூர்க்கி பொறியியற்க் கல்லூரி (COER) - 14 கிமீ.

ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஹரித்வாருக்கும் ரூர்க்கி க்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 58 இல் அமைந்துள்ளது.

குருகுல் கங்க்ரி பல்கலைக்கழகம் - 4 கி.மீ.

கன்க்காலில் கங்கை நதியின் கரையில் ஹரித்வார்-ஜ்வாலப்பூர் புற வழிச் சாலையில் அமைந்துள்ள, குருகுல் கங்க்ரி பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான ஒன்றாகும். இதை 1902 ஆம் ஆண்டில் சுவாமி ஷ்ராத்தானந்தா (1856-1962) என்பவர் ஆர்ய சமாஜ்ஜின் நிறுவனரான சுவாமி தயானந்த சரஸ்வதியின் நெறிப்படி துவக்கினார். அங்கு பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர் சார்லஸ் ஃப்ரீர் ஆண்ட்ரூஸ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மேக்டொனால்டு[57] ஆகியோர் தனிச் சிறப்பு மிகுந்த குருகுலத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை அறிய வருகை தந்தனர். இங்கு பழங்கால வேத மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள், ஆயுர்வேதம், தத்துவம் ஆகியவை நவீன அறிவியல் மற்றும் இதழியல் பாடங்கள் தவிர பாடத் திட்டங்களாக உள்ளன. அதன் 'அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்,'(நிறுவப்பட்டது 1945)[58] சில அரிய சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹராப்பாவின் பண்பாட்டு காலம் முதல் (சிர்கா கி.மு 2500-1500) ஆகியவற்றிற்கு உறைவிடமாகவுள்ளது.[59] மகாத்மா காந்தி மூன்று முறை வாளாகத்திற்கு வருகைத் தந்துள்ளார்,[57] மேலும் அதன் பரந்த மற்றும் தெளிந்தமைதியான வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட காலங்களுக்கு தங்கியிருந்தார், மிகக் குறிப்பாக 1915 கும்பமேளா [60] வின் போதும், தொடர்ச்சியாக 1916 ஆம் ஆண்டு வருகையின் போது மார்ச் 20 அன்று குருகுல் பல்கலையின் ஆண்டுவிழாவில் பேசினார்.[61]

சின்மயா பட்டப் படிப்புக் கல்லூரி

ஹரித்வார் நகரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஷிவாலிக் நகரிலுள்ளது. ஹரித்வாரின் அறிவியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று.

விஷ்வ சமஸ்கிருத மாஹாவித்யாலயா

உத்தரகண்ட் அரசால்[62] ஹரித்வாரில் அமைக்கப்பட்ட, உலகிலேயே பழங்கால சமஸ்கிருத வேத சாசனங்கள், நூல்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு சமஸ்கிருத பல்கலைக்கழகம்.[62] பாடதிட்டத்தில் பழமையான இந்து சடங்குகள், பண்பாடு மற்றும் மரபினை உள்ளடக்கியது. மேலும் பழங்கால இந்து கட்டிடக்கலைப் பாணியிலான தெளிந்த அமைதியான கட்டிடத்தையும் கொண்டுள்ளது.

புனித மேரி மேல்நிலைப் பள்ளி

புனித மேரி பள்ளி, ஜ்வாலப்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது மாணவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பயிற்சி பெற முயலச் செய்யும் வகையில் ஊக்குவிக்கிறது. மேலும் அவர்களிடம் குடிமை மற்றும் சமூக மனப்பாங்கினைப் படிப்படியாக ஊட்டவும் செய்கிறது.

டெல்லி பொதுப் பள்ளி, ராணிப்பூர்

அந்த மண்டலத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகம் முழுதுமான டெல்லி பொதுப் பள்ளிக் குடும்பத்தின் பகுதியாகவும் உள்ளது. சிறப்பான கல்விச் சாதனைகளுக்காகவும் விளையாட்டு மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய கல்வித் திட்டம் சாராத நடவடிக்கைகளுக்கும் ஆய்வுசாலைகளையும் சூழலையும் கொடுக்கப்படுவதற்கு நன்றாக அறியப்பட்டது.

டி.ஏ.வி நூற்றாண்டு பொதுப் பள்ளி

ஜக்ஜீத்பூர் பகுதியிலுள்ள டி.ஏ.வி. பள்ளி கல்வியை அளிப்பது மட்டுமின்றி, ஒழுக்க நெறியையும் அதன் மாணவர்களுக்கு அளிக்கிறது. ஆகையால் ஒவ்வொருவரும் உலகின் அனைத்து மூலைகளையும் ஒளிரச் செய்யலாம்.

கேந்திரிய வித்யாலயா, பி.எச்.ஈ.எல்.

ஹரித்வாரின் முன்னணி கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா 1975 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நிறுவப்பட்டது. மத்திய மேல் நிலைக் கல்வி வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ள, இப்பள்ளியில் 2000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் துவக்கநிலைக்கு முந்தைய வகுப்புகள் முதல் மேல்நிலைப்பள்ளி வரை (வகுப்பு XII) பதிவேட்டிலுள்ளனர்.

பன்னலால் பல்லா நகராட்சி இடைக் கல்லூரி

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான இடைக் கல்லூரியாகும்.

அரசு ஆயுர்வேதக் கல்லூரி & மருத்துவமனை, குருகுல் கன்ரி, ஹெச்என்பி கார்வால் பல்கலைக்கழகம்

இது இந்தியாலிலுள்ள மிகப் பழமையான மருத்துவ கல்லூரிகளில் (ஆயுர்வேத) ஒன்றாகும். இது குருகுல் காங்க்ரி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 மருத்துவர்கள் அதிலிருந்து வெளி வருகின்றனர்.

மாநில ஆயுர்வேதக் கல்லூரி & மருத்துவமனை ரிஷிகுல், ஹரித்வார்

இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இதுவாகும். ஹரித்வாரிலுள்ள தேவ்புராவின் அருகிலுள்ள மேற்புற கங்கைக் கால்வாய் கரைகளின் மீது அமைந்துள்ளது. அது ஆயுர்வேதக் கல்வியில் பட்ட மேற்படிப்பு கல்வியையும் அளிக்கிறது. விரைவில் உத்தரகண்ட்டின் முதல் ஆயுர்வேத பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்படும்.

கணிணிக் கல்விப் பள்ளி, பி.எச்.இ.எல். இது பி.எச்.இ.எல் வளாகத்தில் அமைந்துள்ள முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். பொதுவாக SCE அல்லது HRDC என அறியப்படுகிறது. இது DOEACC யால் சான்றாளிக்கப்பட்ட 'ஓ' நிலை மற்றும் 'ஏ' நிலை படிப்புக்களை நடத்துகிறது. DOEACC தொடர்ச்சியாக, அதனை உத்தரகண்ட்டின் சிறந்த DOEACC நிறுவனமாக தரப்படுத்தி வருகிறது.

நகரத்திலுள்ள முக்கியப் பகுதிகள்

பி.எச்.இ.எல்., ராணிப்பூர் தன்னாட்சி நகரப்பகுதி பாரத் மிகுமின் நிறுவனம், ஒரு நவரத்னா பொதுத் துறை நிறுவனம், 12 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ள வளாகம். இந்த முக்கிய தொழிற்சாலை இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஹெவி எலக்டிரிகல் எக்யூப்பெண்ட் பிளாண்ட் (HEEP) மற்றும் செண்ட்ரல் ஃபௌண்ட்ரி போர்ஜ் பிளாண்ட் (CFFP)ஆகியவையாகும். அவையிரண்டும் இணைந்து 8000 த்திற்கும் மேற்பட்ட திறமையான தொழிளாலர்களைப் பணியமர்த்தியுள்ளன. ஆறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது, சிறப்பான குடியிருப்பு, பள்ளி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கிறது.

பஹாத்ராபாத் - 7 கி.மீ. இது ஹரித்வாரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலிருக்கும் ஹரித்வார்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையிலுள்ளது. 1955 ஆம் ஆண்டில் மேற்புற கங்கைக் கால்வாய் மீது கட்டப்பட்ட பத்ரி மின் நிலையம் அருகிலுள்ள பத்ரி கிராமத்தில் இருக்கிறது. இதற்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் பல வளர்ச்சியடைந்த கிராமங்கள் (இ.கா கேட்லி, கிஸான்புர் ரோஹார்ல்கி, போங்க்லா, சீதாப்புர், அலிப்பூர் முதலியவை) வருகின்றன.

சிட்குல் - 5 கி.மீ. மாநில அரசின் வாரியமான ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மண்ட் கார்ப்பரேஷன் உத்தராஞ்சல் லிமிடெட் (சிட்குல்)டால் உருவாக்கப்பட்ட ஒரு பெருத்த தொழிற்சாலைப் பகுதி 2034 ஏக்கர்களில் பரந்துள்ளது. பெரும் நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர் லிமிடெட், டாபர், மஹிந்திரா & மஹிந்திரா, ஹவேல்ஸ் ஆகியவை சிட்குலில் நகரத்தினுள் மற்றொரு தொழிற்ப்பேட்டையை உருவாக்கியமைக்க நுழைகின்றன. இது டெல்லி-ஹர்த்வார் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரத்தில், பெல் நகரத்தின் ஒரு முக்கிய பொதுப் பிரிவு நகரின் அருகில் சிட்குல் அமைந்துள்ளது.

ஜ்வாலப்பூர் நகரின் பழையப் பகுதியான ஜ்வாலப்பூர் நகரின் ஒரு நிதி & தொழில் தலைநகரமாகவும், தற்போது ஒரு முக்கிய வணிக மற்றும் அங்காடி நுகர்விற்கான உள்ளூர் மக்களின் மையமாகும்.

சீலா அணை ஒரு நல்ல புறவெளிச் செல்லும் இடமாக ஓர் அணையுடனும் மற்றும் அருகிலிருக்கும் ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட ஏரியுடன் கூடியது. இங்கு யானைகளையும் இதர காட்டு விலங்குகளையும் எளிதில் காண இயலும்.

ஷிவாலிக் நகர் ஹரித்வாரின் பழைய மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெல் பணியாளர்களுக்காக முக்கியமாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். ஆனால் சிட்குலின் வருகைக்குப் பிறகு மக்கட்தொகை மற்றும் நிதி நடவடிக்கைகள், அதன் தகுந்த அருகாமையினால் வெடித்துள்ளது.

திருவிழாக்கள்

ஹரித்வாரின் கங்கா தசரா

ஹரித்வார் ஓர் ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, வருடம் முழுதும் மதத் திருவிழாக்கள் பலவற்றையும் விருந்தோம்புகிறது; அவற்றில் புகழ்பெற்றவை கவாத் மேளா, சோம்வதி அமாவாஸ்யா மேளா, கங்கா தசரா, குகள் மேளா ஆகியனவற்றில் கிட்டத்தட்ட 20-25 இலட்சம் (2-2.5 மில்லியன்) பேர்கள் பங்கேற்கின்றனர்.[63]

இது தவிர, அங்கு கும்ப மேளா ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை, வியாழன் (பிருஹஸ்பதி) கும்பத்தில் (கும்ப ராசியில்) சஞ்சரிக்கும் போது நடைபெறுகின்றது. கும்ப மேளாவிற்கான முதல் எழுத்துப்பூர்வ சாட்சியம், கி.பி 629 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகைத் தந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் அல்லது க்ஸுவான்சாங்கின் (கி.பி 602 - 664) நாட்குறிப்புகளில் காணப்படுகிறது.[22][64]. தி இம்ப்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா என்பதற்கிணங்க 1892 ஆம் ஆண்டில் ஹரித்வாரில் கும்ப மேளாவின் போது காலரா நோய்த் தாக்கம் ஏற்பட்டது, இது மேளா ஏற்பாடுகளில் வேகமான முன்னேற்றத்தினை அதிகாரிகள் மூலம் விளைவித்தது. மேலும் 'ஹரித்வார் மேம்பாட்டு சமூகத்தின்' துவக்கத்திற்கும் வழியேற்படுத்தியது. மேலும் 1903 ஆம் ஆண்டில் சுமார் 400,000 பேர் திருவிழாவில்[65] கலந்துக் கொண்டனர். 1980 களில், கும்ப மேளாவின் போது ஹர்-கி-பாவ்ரியின் அருகே ஏற்பட்ட நெரிசலில் 600 பேர் இறந்தனர், மேலும் எண்ணற்றவர் காயமுற்றனர்[66]. 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மஹா கும்பமேளா, புனித நதியான கங்கையில் முழுக்குப் போட வருகை தந்த 80 மில்லியனுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கண்டது.[67]

போக்குவரத்து

சாலை

ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலை 58 ற்கு டெல்லிக்கும் மனாபாஸிற்கும் இடையில் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

ரயில்

ஹரித்வாரின் ரயில் நிலைய சந்திப்பு, இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுடனும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

வான்வழி

அருகிலுள்ள விமான நிலையம் டெஹ்ராடூனிலுள்ள ஜோலி கிராண்ட் வானூர்தி நிலையமாக இருப்பினும், புது டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே விரும்பப்படுகிறது.

தொழில்துறை

ஹரித்வார் உத்தராஞ்சலின் வேகமாக வளர்ந்து வரும் ஓர் முக்கிய தொழில் தன்னாட்சி நகரமாக, மாநில அரசின் முகமையான சிட்குல் மாவட்டத்தில் (ஸ்டேட் இன்ப்ராஸ்ட்ரக்சர் & இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் உத்தராஞ்சல் லிட்).[10] ஏற்படுத்திய ஒருங்கிணைந்த தொழிற்பேட்டையானது, அப்பகுதியில் பல முக்கிய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த தொழில் நிறுவனங்களை ஈர்க்கிறது.

ஹரித்வார் ஏற்கனவே புறவழிச் சாலையில் செழித்தோங்கும் தொழிற் பகுதியில் முக்கியமாக 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பெல்லின் துணைப் பிரிவுகள் இடம்பெற்றது, இது தற்போது 8000 ற்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்தியுள்ளது.

மேலும் படிக்க

  • ஹரித்வார் - கங்காத்வாரே ம்ஹாதீர்தே , தொகு.ஷாலினி சரண் ஹரித்வார் வளர்ச்சி முகமை, உத்தரப்பிரதேச அரசு 1992.[1]
  • கேட்வே டு தி காட்ஸ்:ஹரித்வார்-ரிஷிகேஷ் . ருபீந்தர் குல்லார், ரீதா குல்லார். 2004, UBS பப்ளிஷர்ஸ். ISBN 81-7476-460-7.
  • ஹர்த்வார் மேளா ஃபிரம் தி கேவ்ஸ் அண்ட் ஜங்கிள்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்(1879-80) , ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்ஸ்கி (1831-1891).
  • ரிப்போர்ட் , ஆர்க்கியாலாஜிகல் சர்வே ஆஃப் இந்தியா, அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். பப்ளிஷ்ட் பை ஆபீஸ் ஆஃப் தி சூப்பிரிண்டென்டெண்ட் ஆஃப் கவர்மெண்ட் பிரிண்டிங், 1871. சாப்ட் 30: ஹரித்வார் ஆர் கங்கத்வாரா, ப. 231-236.
  • சாப்டெர் XVII: ஹிமாலயாஸ், ஹர்த்வார். இந்தியா, பாஸ்ட் அண்ட் பிரசண்ட் , பை சார்ல்ஸ் ஹர்கோர்ட் ஐன்ஸ்லி ஃபோர்ப்ஸ்-லிண்ட்சே. பப்ளிஷ்ட் பை ஜே.சி. வின்ஸ்டன், 1903. பேஜ் 295 .

குறிப்புதவிகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Geography of Haridwar பிழை காட்டு: Invalid <ref> tag; name "geo" defined multiple times with different content
  2. 2.0 2.1 ஹரித்வார், இந்தியா பக்கம் fallingrain.com.
  3. Haridwar euttaranchal.
  4. அகராதி மோல்ஸ்வொர்த், ஜே. டி. (ஜேம்ஸ் தாமஸ்). ஒரு அகராதி, மராத்தி மற்றும் ஆங்கிலம். பாம்பே எஜுகேஷன் சொஸைட்டியின் அச்சகம், 1857, பக்கம் 888.
  5. 5.0 5.1 அபௌட் ஹரித்வார் சஹஜாஹரித்வார்.
  6. 6.0 6.1 கங்காஜி ஹரித்வார் ஹரித்வாரின் அதிகாரபூர்வ வலைத்தளம்.
  7. கங்கத்வாரா, தி பிளேஸ் வேர் தி கேங்க்ஸ் டெசெஸ்ண்ட்ஸ் டு தி பிளெய்ன்ஸ்.. தக்ஷனின் தியாகம் (பிரம் தி வாயு புராணா.) தி விஷ்ணு புராணா, ஹோரேஸ் ஹேய்மான் வில்சன், 1840. ப். 62, 62:2.
  8. மறுசீரைமைப்பு சட்ட முன் வரைவு உ.பி அரசால் நிறைவேற்றப்பட்டது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் , 2 செப்டெம்பர் 1998.
  9. உத்தரகண்ட் இந்திய அரசு, அதிகாரபூர்வ வலைத்தளம்.
  10. 10.0 10.1 ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்ப் பேட்டை - ஹரித்வார் சிட்குல் அதிகாரபூர்வ வலைத்தளம்]
  11. 11.0 11.1 பிளேசஸ் ஆஃப் பீஸ் அண்ட் பவர் சேக்கர்ட் சைட்ஸ்.
  12. ஹர்த்வார் சனாதன்சொசைட்டி.
  13. 13.0 13.1 13.2 13.3 13.4 13.5 ஹர்த்வார் தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா, பாடல். 13, ப. 52. பிழை காட்டு: Invalid <ref> tag; name "gaze" defined multiple times with different content
  14. 14.0 14.1 ஹரித்வார் வரலாறு ஹரித்வார் அதிகாரப்பூர்வ வலைத்தளம் .
  15. Yudhishthira The Mahabharata, translated by Kisari Mohan Ganguli (1883 -1896), Book 3: Vana Parva: Tirtha-yatra Parva: Section XC, p 204.
  16. வரலாறு, பண்பாடு மற்றும் சமூகப் பார்வைகள். சாப்டெர் 3. தி கல்சுரல் டைமென்சன் ஆஃப் ஈகாலஜி, பைத்யநாத் சரஸ்வதி, 1998, இந்திரா காந்தி தேசிய மையம் ஃபார் தி ஆர்ட்ஸ். ISBN 81-246-0102-X. ignca.nic.in. வனபர்வா (தி புக் ஆஃப் தி ஃபாரஸ்ட்) மூன்றாம் பர்வம் , மகாபாரதப் புத்தகம்.
  17. லோபமுத்ரா தி மஹாபாரதா, மொழிபெயர்ப்பு கிஸான் மோகன் கங்குலி (1883 -1896), புக் 3: வனப் பர்வா: தீர்த்-யாத்ரா பர்வா: பிரிவு XCVII.
  18. பாகீரதனின் கதை
  19. "உத்தரகண்ட் தகவல் மையம் - கங்கோத்ரி தகவல்" முழு உத்தரகண்ட் சுற்றுலாக் கையேடு
  20. மன்கொடி, கீர்த்தி (1973) "கங்கா ட்ரிபாதகா" ஆர்டிபஸ் ஆசியேய் 35(1/2): பக்கங்கள். 139-144, ப. 140
  21. ஹர்த்வார், நகரம் பற்றி
  22. 22.0 22.1 கும்ப மேளா சேனல் 4.
  23. ஹரித்வார் Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  24. டிஜிடல் நூலகம் தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா , ஆக்ஸ்போர்ட், 1908, தொகுதி.13, ப.51.
  25. வரலாறு தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா , தொ. 2, ப. 570.
  26. குரு நானக் (ஃபார் சில்ரன்) - அ நியூ வே ஆஃப் டீச்சிங்
  27. லைப் ஆஃப் குரு நானக்: சாப்டெர் நான்கு சீக்கிய மதம், தொகுதி 1 , மாக்ஸ் ஆர்தர் மாகாலிஃபே (1842-1913), ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் (1909). பக்கம் 50-52 .
  28. 28.0 28.1 ஜனசாக்கி ஜனசாக்கீஸ்ஆஃப் மிஹார்பான் அண்ட் மணி சிங் , ஜனம்சாக்கி மரபு, 2004, பஞ்சாப் பல்கலைக்கழகம், பாட்டியாலா. ISBN 81-7205-311-8. www.globalsikhstudies.net.
  29. புனித யாத்திரையின் புனிதத் தலங்கள் அய்னி அக்பரி , தொகு. III, ப. 306.
  30. ஹர்த்வார் அய்னி அக்பரி , பை அபுல் பசல் 'அலாமி, தொகுதி I, அ´யி´என் 22. தி அ´ப்தா'ர்´ கா´னாஹ். ப 55. பெர்ஷிய மூலத்திலிருந்து எச்.பிளோச்மான், மற்றும் கலோனல் எச்.எஸ். ஜார்ரேட், ஆஷியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால். கல்கத்தா, 1873 – 1907. “அரசர் இந்த வாழ்வின் ஆதார வளத்தை "அழியாத்தன்மையின் நீர்", மற்றும் பொருத்தமான நபர்கள் மூலம் இத்துறையை ஒப்படைத்துள்ளார்.... அரண்மனையிலும் பயணங்களிலும், அவர் கங்கை நீரையே பருகுகிறார்.”
  31. அயின் # 10. தி காயின்ஸ் ஆஃப் திஸ் க்ளோரியஸ் எம்பயர் சி.காப்பர் காயின்ஸ், அயினி அக்பரி, பை அபுல் ஃபசல் 'அலாமி, தொகுதி I, ப31, ib.
  32. நியூஸ்லெட்டர் 106, 1987, கோரோன், எஸ் & விக்கின்ஸ், கே. முகல் கயின்ஸ் ஸ்க்டிரக் இன் தி நேம் ஆஃப் தி பிடெண்டர் முகம்மத் அக்பர், அட் ஹர்த்வார். தி ஓரியண்டல் நியூமிஸ்மாடிக் சொசைட்டி (ஓஎன்எஸ்). இங்கிலாந்து
  33. தி சொசைட்டி ஃபார் சவுத் ஆசியன் ஸ்டெடீஸ் பிரிட்டிஷ் அகாடெமி, வருடாந்திர அறிக்கை 2001, ப. 8. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் மொகலாய பொம்மை முகம்மத் அக்பர், தனிச் சிறப்பான ரூபாய் அவரது குறுகிய 45 நாட்கள் ஆட்சிக் காலத்தில் ஹரித்வார் நாணயச் சாலையிலிருந்து வெளியிடப்பட்டது வைக்கப்பட்டுள்ளது.
  34. தி அமெரிக்கன் ந்யூமிஸ்மேடிக் சொஸைட்டி ஓரியண்டல் நியூமிஸ்மேடிக் சொஸைட்டி 178 (குளிர்க்காலம் 2004), பண்டாரே எஸ். "ஹர்த்வார்: அ ந்யூ மிண்ட் ஃபார் அக்பர்'ஸ் காப்பர் காயினேஜ்," பக்கங்கள். 27-28, இல்லஸ்.
  35. தி கங்கா பேசின் டேம்ஸ் ஆன் தி கங்கா, அல்பானி பல்கலைக்கழகம் .
  36. 36.0 36.1 மேற்புற கங்கைக் கால்வாய் தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா , 1909, தொகுதி. 12, ப. 138.
  37. டிரேட் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா , தொ. 21, ப. 375.
  38. வரலாறு தி இம்பீரியல் கெஸெட்டீர் ஆஃப் இந்தியா , தொ. 13, ப. 53.
  39. 39.0 39.1 ஹரித்வாரின் மக்கள் பிரநிதிகள் பட்டியல் அதிகாரபூர்வ வலைத்தளம்.
  40. ஹரித்வார் மாவட்டம்
  41. உத்தரகண்ட்: வெற்றிபெற்றவர் பட்டியல் ரிடிஃப் நியூஸ், பிப்ரவரி 27, 2007.
  42. 42.0 42.1 நகர வளர்ச்சித் திட்டம்: ஹரித்வார் நகர வளர்ச்சித் துறை, உத்தரகண்ட் அரசு ப.20.
  43. ஹரித்வார் வெதர் அண்ட் கோ ஆர்டினேட்ஸ் timeanddate.com/வோர்ல்ட்கிளாக்.
  44. புதிய மாவட்டம் ஹரித்வார், www.gmvnl.com.
  45. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  46. சுற்றுலாக் கையேடு ஹரித்வார்
  47. கன்க்கால் www.indiainfoweb.com.
  48. ஹரித்வார் வரலாறு
  49. பழங்கதை சாண்டி தேவி கோயில்.
  50. மானசா தேவி கோயில்
  51. தளங்கள் உத்தரகண்ட் அரசு அதிகாரபூர்வ வலைத்தளம்.
  52. ஹரித்வாரின் கோயில்கள்
  53. நீல் தாரா பறவைகள் சரணாலயம்
  54. பிரான் ஹரித்வார் அதிகாரபூர்வ இணையத் தளம்.
  55. பிரான் காளியார் டைம்ஸ் ஆஃப் இந்தியா, 13 மார்ச் 2003.
  56. ரூர்க்கியின் உள்ளூர் ஈர்ப்புகள்
  57. 57.0 57.1 குருகுல் ஹரித்வாரின் அதிகாரபூர்வ வலைத்தளம்.
  58. அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம், ஹரித்வார் indiatourism.com.
  59. அருங்காட்சியகத்திலுள்ள கலைப்பொருட்கள் குருகுல் காங்க்ரி, அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்.
  60. கும்ப மேளா 1915 தி ஸ்டோரி ஆஃப் மை எக்ஸ்பெரிபெண்ட்ஸ் வித் ட்ரூத்/பகுதி V/லஷ்மண் ஜூலா.
  61. மகாத்மா காந்தியின் வாழ்க்கை கால வரிசை/இந்தியா 1916 விக்கி மூலங்கள்.
  62. 62.0 62.1 சமஸ்கிருத பல்கலைக்கழகம் அரசு. உத்தரகண்ட்.
  63. ஹரித்வாரின் திருவிழாக்கள் ஹரித்வார் அதிகாரபூர்வ இணையத் தளம்.
  64. கும்ப மேளா www.archaeologyonline.net.
  65. ஹரித்வார் தி இம்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா, 1909, தொ. 13, ப. 52.
  66. 1980 களில் ஹரித்வாரில் சுமார் 600 புனித யாத்ரீகர்கள் கூட்ட நெரிசலில் இறந்தனர்.. தி கார்டியன், 28 ஆகஸ்ட் 2003.
  67. கும்ப மேளா, ஓர் ஆய்வு மிஸ்ஸௌரி ஸ்டேட் யுனிவர்சிட்டி'
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Haridwar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரித்துவார்&oldid=1234629" இலிருந்து மீள்விக்கப்பட்டது