பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ru:Падмини
சி திருத்தம்
வரிசை 3: வரிசை 3:


==வாழ்க்கைக் குறிப்பு==
==வாழ்க்கைக் குறிப்பு==
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பீஜாப்பூரில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். [[1961]] ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு [[1977]]ல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]] பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி [[லலிதா]], இளையவர் [[ராகினி]] இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். [[1961]] ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு [[1977]]ல் [[ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள்|அமெரிக்கா]]வில் [[நியூ ஜெர்சி]]யில் குடியேறினார். அங்கு பத்மினி ''ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்'' என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.


==கலையுலக வாழ்வு==
==கலையுலக வாழ்வு==

02:40, 7 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Padmini.jpg
பத்மினி

பத்மினி (ஜூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன் பிள்ளை, சரஸ்வதி அம்மா ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவரது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977ல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.

கலையுலக வாழ்வு

பத்மினி, நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர். 17 வயதில் திரையுலகில் புகுந்தார். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் தோன்றிய[1] பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். தமிழில் முதன் முதலில் வேதாள உலகம் படத்தில் நாட்டியம் ஆடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த "மணமகள்" என்ற படம் தான் அவரது முதல் தமிழ்த் திரைப்படம். தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.

விருதுகள்

இறப்பு

பத்மினி, செப்டம்பர் 24, 2006 அன்று இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

குறிப்பிடத் தக்க திரைப்படங்கள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு" (in தமிழ்). பிபிசி. 26 செப்டம்பர், 2006. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml. பார்த்த நாள்: 2006-11-08. 

வெளி இணைப்புக்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மினி&oldid=1227174" இலிருந்து மீள்விக்கப்பட்டது