வெண்தொண்டை மீன்கொத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: eu:Halcyon smyrnensis
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vi:Sả đầu nâu
வரிசை 52: வரிசை 52:
[[sv:Smyrnakungsfiskare]]
[[sv:Smyrnakungsfiskare]]
[[tr:İzmir yalıçapkını]]
[[tr:İzmir yalıçapkını]]
[[vi:Sả đầu nâu]]
[[zh:白胸翡翠]]
[[zh:白胸翡翠]]

12:15, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

வெண்தொண்டை மீன்கொத்தி
Race fusca in Kerala, south-western India
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
H. smyrnensis
இருசொற் பெயரீடு
Halcyon smyrnensis
லின்னேயசு, 1758

வெண்தொண்டை மீன்கொத்தி (Halcyon smyrnensis) என்பது ஒரு மர மீன்கொத்தி. இது வெண்மார்பு மீன்கொத்தி எனவும் அழைக்கப்படும். மேலும் தமிழில் விச்சிலி, சிச்சிலி, பெருமீன்கொத்தி முதலிய பெயர்களும் உண்டு. இது உலகில் மேற்கில் பல்கேரியா, துருக்கி முதல் கிழக்கில் தெற்காசியா, பிலிப்பைன்சு வரை பரவியுள்ளது. இம்மீன்கொத்திகள் இவை சிறிய ஊர்வன, நிலநீர் வாழிகள், நண்டுகள், சிறு கொறிணிகள் முதலிய பலதரப்பட்ட உணவுகளை இரையாகக் கொள்கின்றன. இனப்பெருக்க காலத்தில் கட்டிடத்தின் உச்சி, மின்கம்பிகள் உள்ளிட்ட எடுப்பான இடங்களில் இருந்து ஒலியெழுப்புகின்றன.

அறிமுகம்

இது ஒரு பெரிய மீன்கொத்தி. 28 செமீ நீளம் வரை வளரும். நன்கு வளர்ந்த நிலையில் இப்பறவையின் முதுகு, இறக்கைகள், வால் ஆகியன பளிச்சென்ற நீலநிறத்தில் இருக்கும். இதன் தலை, தோள், அடிவயிறு பழுப்பு நிறத்திலும் தொண்டையும், மார்புப்பகுதியும் வெள்ளையாக இருக்கும். பறக்கையில் இதன் இறக்கையில் வெள்ளைப் பகுதிகள் தெரியும்.

வாழிடமும் பரவலும்

இப்பறவை பல்வேறுபட்ட சூழல்களில் வாழ்கிறது. மரங்கள், கம்பிகள் உள்ள திறந்த சமநிலங்களில் பெரும்பாலும் காணப்படுகிறது.


இது இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "Halcyon smyrnensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்தொண்டை_மீன்கொத்தி&oldid=1223236" இலிருந்து மீள்விக்கப்பட்டது