தொடுதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: my:ထိတွေ့ ဖန်သားပြင်
சி தானியங்கி மாற்றல்: da:Touchscreenda:Trykfølsom skærm
வரிசை 93: வரிசை 93:
[[ca:Pantalla tàctil]]
[[ca:Pantalla tàctil]]
[[cs:Dotyková obrazovka]]
[[cs:Dotyková obrazovka]]
[[da:Touchscreen]]
[[da:Trykfølsom skærm]]
[[de:Touchscreen]]
[[de:Touchscreen]]
[[el:Οθόνη αφής]]
[[el:Οθόνη αφής]]

16:24, 29 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

தொடுதிரையைப் பயன்படுத்தி ஒரு குழந்தை கணினிப்படுத்தியப் புதிரைச் சுளுவுகிறது.
படிமம்:IPad 2 on stand.jpg
ஐபேடு

தொடுதிரை (Touchscreen) என்பது படங்காட்டும் பரப்புக்குள் தொடுதலையும், அதன் இடத்தையும் ஆராயக்கூடிய ஒரு மின்னணுத் தோற்றப் படங்காட்டி (electronic visual display) ஆகும். இச்சொல் பொதுவாக கருவிகளின் படங்காட்டிகளை (display) விரலால் தொடுவதையே குறிப்பன. தொடுதிரைகள், ஒயிலாணி (stylus pen) போன்ற பிற பட்டுவ பொருட்களையும் (passive objects) உணர கூடியன. தொடுதிரைகள் கும்மாள பொருட்கள் (game consoles), முழுக் கணினிகள் (all-in-one computers), கைக் கணினிகள், மற்றும் நுண்ணறி பேசிகள் போன்ற கருவிகளில் பொதுவாகிவிட்டன.

தொடுதிரை இரண்டு முக்கிய நிறைவுகளை (main attributes) கொண்டுள்ளது. முதலில், இது சுட்டி அல்லது தொடுபலகையினால் சுட்டுமுள்ளை நேரற்று கட்டுப்படுத்துவதைப் போலல்லாமல், எது படங்காட்டப்படுகிறதோ அதனை நேராக அணுகுகிறது. அடுத்ததாக, இது மேலே குறிப்பிட்டப்படி அணுகுவதற்கு வேறெந்த இடையூடகக் கருவிகளும் தேவையில்லை (தற்போதைய தொடுதிரைகளில் உகப்புள்ள (கட்டாயமற்ற) ஒயிலாணியை தவிர). அத்தகைய படங்காட்டிகள் கணினிகளோடும், முனையங்களாக வலையிணக்கங்களோடும் கோர்க்கப்படுகின்றன. இவை தனி எண்முறை உதவுக் கருவிகள் தஎஉ (personal digital assistant PDA), செய்மதி இடஞ்சுட்டல் கருவிகள் (satellite navigation devices), நகர்ப் பேசிகள், நிகழ்படக் கும்மாளங்கள் போன்ற எண்முறை சாதனங்களை வடிமைப்பதிலும் பிரதான பங்காற்றுகிறது.

நுண்ணறி பேசிகள், கைக் கணினிகள் மற்றும் பல வகைத் தகவல் சாதனங்கள் ஆகியவற்றின் புகழ்ப்பெருக்கினால், புகல் மற்றும் பந்தமுடைய மின்னணுக்களில் பொதுத் தொடுதிரையின் கிராக்கி மற்றும் ஏற்பைத் துரவப்படுகிறது. தொடுதிரைக் படங்காட்டியின் மெதுவான மேனியாலும், வன்பொருட்கள் (சுட்டி மற்றும் குயவுப்பலகை) இல்லாமல் பயனருக்கும் அடைவுக்கும் (content) அளிக்கின்ற நேரடி இடையியக்கத்தினாலும் (interaction), சில தொடுதிரை உபரிக்களே தேவைப்படுகின்றன. தொடுதிரைகள் மருத்துவத் புலத்திலும், கனரக தொழிற்சாலைகளிலும், அத்துடன் படங்காட்டியின் அடைவு பயனருடன் உகந்த உள்ளுணர்வாகவோ, துரிதமாகவோ அல்லது துல்லிய இடையியக்கமாகவோ இசையாத விசைப்பலகை அல்லது சுட்டி அமைப்புகளுள்ள தானியங்கு அறை அல்லது அருங்காட்சியகக் படங்காட்டிகள் போன்ற கணினிக்கூடாரங்களிலும் புகழடைந்துள்ளது.

வரலாற்றுரீதியில், படங்காட்டி, சில்லு, அல்லது தாய்ப்பலகை உற்பத்தியாளர்கள் அல்லாமல், அகன்று அணி திரண்ட பிற்சந்தை கட்டகத் தொகுப்பாளர்களால் (system integrators) தொடுதிரை உணரி மற்றும் அதனுடனுள்ள கட்டுப்பாட்டினங்களான இடைப்பொருளையும் (firmware) கிடைக்கக்கூடியதாக்கப்பட்டுள்ளது. உலகளாவிய படங்காட்டி உற்பத்தியாளர்களும், சில்லு உற்பத்தியாளர்களும் தொடுதிரைகளை பெரிதாக விரும்பத்தக்க பயனர் இடைமுக பாகம் என ஒற்றுக்கொள்ளும் போக்கு உருவாகியுள்ளதையும், அவர்களின் அடிப்படை வடிவமைப்பினை தொடுதிரைகளுடன் இடைச்சேர்க்கவுள்ளதையும் உறுதிசெய்துள்ளனர்.

வரலாறு

முன்மாதிரி[1] x-y பரிமாற்று கொண்மத் தொடுதிரை (இடது),செர்ன் நிறுவனத்தில், 1977-ல் தானிஸ் மின்னணு பொறியாளர் பென்ட் ஸ்டம்பி, செர்ன் உடைய மிகை நேர்மின்னி ஒத்தியங்கு முடுக்கியைக் கட்டுப்பாட்டு அறைக்காக உருவாக்கினார்[2][3] . இதுவே ஸ்டம்பியினால் எதிர்காலத்தில் தனிக் கொண்ம திரையையும்(வலது)CERN யிலேயே உருவாக்கப் பயன்பட்டதாகும்.[4] in 1972.
படிமம்:ViewTouch1986.jpg
வியூடச்

1965 இல் இஏ சான்சன் என்பவர் வெளியிட்ட குறுங்கட்டுரை ஒன்றில் கொண்ம தொடு திரைகள் பற்றிய படைப்பை விவரித்துள்ளார்.[5] அதன் பிறகு முழுமையாக புகைப்படங்கள், வரைப்படங்களுடன் 1967 இல் வெளியிடப்பட்ட கட்டுரையில் விவரித்துள்ளார்.[6] 1968 இல் வெளியிடபட்டுள்ள ஒரு கட்டுரையில் வான்வெளி துரப்பு கட்டுப்பாட்டிற்கு பொருந்தக்கூடிய தொடு நுட்ப விரிவுரையை விவரிக்கப்பட்டுள்ளது. [7] செர்ன்னில் உள்ள பொறியாளர் பென் ச்டம்பி என்பவர் ப்ரான்க் பெக்-இன் உதவியுடன் 1970-இன் முற்பகுதியில் தெளிந்த தொடு திரையை மேம்படுத்தி, செர்ன்னால் உற்பத்தியாக்கி 1973-இல் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது.[8] ஞ்சி சாமுவேல் என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஒரு தடுப்பு தொடு திரையை மேம்படுத்தி, அதன் முதற்பதிப்பு 1982-இல் உற்பத்தியாக்கப்பட்டுள்ளது.[9]

1979–1985 க்கிடையில், பயனர் மாதிரியை ஒதிக்கி, கையாளவும் தரவை சேர்க்கவும் அத்துடன் அதன் இயங்குதளத்துக்குள் மெல்லாணியால் திரையை தொட்டு வெவ்வேறு பட்டியை அணுக்கமடையவும் செய்யகூடியவகையில் பார்லைட் சிஎம்ஐ Fairlight CMI (and Fairlight CMI IIx) மெல்லாணி நுட்பத்தை பயன்கொண்ட உயர்முனை இசையியல் மாதிரியாக்கல் மற்றும் மறுசேர்க்கை பணினிலையமாக திகழ்ந்ததாகும். அதற்கு பின் வெளியான Fairlight series IIT மாதிரிகள் மெல்லாணிக்கு பதிலாக வரைகலை பட்டிகைகளைப் பயன்படுத்தின. 1983 இருந்த HP-150, உலகில் ஆரம்பக்கட்ட வணிகமாக்கிய தொடுதிரைக் கணினிகளில் ஒன்றாகும். PLATO IV அமைப்பைப் போன்று, திரையில் உள்ள எந்த ஒளிப்புகாப் பொருட்களையும் அறியக்கூடிய 9" சோனி எதிர்மின் கதிர்க் குழாயின் உளிச்சாயும் ஓரத்தில் அகச்சிவப்புக் கதிர் அலை அனுப்பிகளையும், அலை வாங்கிகளையும் பொருத்தப்பட்டதாக இந்தத் தொடு நுட்பங்கள் பயன்படுத்துகின்றன.

1986 இல், 16-நுண்மி (16-பிட்) அடாரி 520எஸ்டி வண்ணக் கணினியில் முதல் வரைகலை பார்வையிலான விற்பனை மென்பொருளை செய்துகாட்டப்பட்டது. இதன் சிறப்புக்கூறுகளாக நிரல்பலகை-இயக்கும் இடைமுகமாய் ஒரு வண்ணத் தொடுதிரை உள்ளது.[10] அடாரிக் கணினி செயற்காட்டல் இடம், 1986இல் லாஸ் வீகாஸ், நிவாதா, ஃபால் காம்டெக்ஸில் வியூடச் [11]பார்வையிலான விற்பனை மென்பொருளை முதலில் பார்வையாளரிடம் காண்பித்தவர் வளர்ப்பாளர் ஜெனி மோசர் மற்றும் அதுவே நிரல்பலகை-இயக்கும் வரைகலை வண்ணத் தொடுதிரை இடைமுகம் கொண்ட வணிக பிஒஎஸ் அமைப்பாகும்.

1990களின் முன்பு கேம் கியர்க்கான சேகாவின் வெற்றியாக கருதப்படும் தொடுதிரை கட்டுப்பாடுடனான கையடக்க கும்மாள பொருளை உருவாக்கப்பட்டது, ஆனாலும் அதன் தொடுதிரை நுட்பங்களுடைய அதிக விலையின் காரணமாக அதனை வெளியிடவேயில்லை. 2004 இல் நின்டென்டோ டிஎஸ் வெளியாகும் வரை தொடுதிரைகள் நிகழ்படக் கும்மாளங்களில் பெரிதாக பயன்பட்டுத்தபடவில்லை.[12] சில வருடங்களுக்கு முன்பு வரை, பெரும்பாலான நுகர்வோர்கள் ஒரு தடவை ஒரு முறை தொடும் படியான தொடுதிரை அனுபவத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். இது தற்போதைய தாராளமயமாக்கப்பட்ட பல்முனைத் தொடு தொழில்நுட்பத்தினால் மாற்றமடைந்துவிட்டது.

தொழினுட்பங்கள்

பல்வேறு வகையான தொடுதலை உணரும் முறைகளில் பலவகை தொடுதிரை தொழினுட்பங்கள் உள்ளன.

மின்தடை தொடுதிரை

மின்தடை தொடுதிரைப் பலகம் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது, அதில் மிக முக்கியமானது மெல்லிய இடைவெளியுடன் அமைந்த இரண்டு மெல்லிய, ஒளிபுகக்கூடிய மின்சாரத் தடை அடுக்குகள் ஆகும். மேல் திரையின் (பயனரால் தொடப்படுகிற திரையின்) உட்பரப்பில் சில திரவபூச்சு செய்யப்படும். அதற்கு தாழ்வாக அதன் தளப்பொருளின் மேல் அதேப் போன்று மற்றொரு மின்சாரத் தடை அடுக்கு. அதன் ஓரத்தில் ஒரு மின்கடத்து அடுக்கும், மற்றொன்று அதன் மேலும் கீழுமாய். ஒரு மின்னழுத்தம் ஒன்றின் மீது கொடுக்க, மற்றொன்றினால் உணரப்படுகிறது. விரல்நுனி அல்லது ஒயிலாணி அதன் மேற்பரப்பை அழுத்தும் பொழுது அது இரு அடுக்கும் அந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறது. அந்தப் பலகம் அப்பொழுது ஒரு இணை மின்னழுத்த வகுப்பியின் பண்பைப் பெறுகிறது. உடனரியாக பிரியப் படுகின்ற இரு அடுக்குகளினால், அது அழுத்தப்பட்ட இடத்தை அறிகிறது.

மாசுக்களுடனும், திரவங்களுடனும் அதிக மின்தடையை கொண்டிருப்பதால், மின்தடை தொடுதிரை உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொழிலகங்கள் ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. மின்தடை தொடு நுட்பங்களின் முகனையான பயன் என்னவென்றால் அதன் குறைவான விலையே ஆகும். பயன் குறைவுகள் கீழ் அழுத்த வேண்டிய தேவை மற்றும் கூரான பொருட்களினால் பாதிப்படையும் ஆபத்து ஆகியவை அடக்கம். திரையின் மேற்பரப்பில் வைக்கப்பட்ட மிகையான அடுக்கில் கூடுதல் எதிரொளிப்புகள் கொண்டிருப்பதால், குறைவான தெளிவுநிலையிலும் மின்தடை தொடுதிரைகள் அவதியுறுகிறது.

மேற்பரப்பு ஒலியலை

இந்த அடிப்படை தொழினுட்பத்தில், மின்காப்புப்பொருளின் ஒரே ஒரு பக்கம் மட்டுமே மின்கடத்து அடுக்கு பூசப்பட்டிருக்கும். குறைந்த அளவு மின்சாரம் அவ்வடுக்கின் மீது செலுத்தும் பொழுது, அதன் விளைவாக சீரான மின்னிலை புலம் உருவாகிறது.

கொண்மம்

மேற்பரப்பு கொண்மம்

துருத்தக் கொண்மம்

பரிமாற்றக் கொண்மம்

தனிக் கொண்மம்

அகச்சிவப்பு கதிர்

மேற்கோள்கள்

  1. The first capacitative touch screens at CERN, CERN Courrier, 31 March 2010, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
  2. Bent STUMPE (16 March 1977), A new principle for x-y touch system (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
  3. Bent STUMPE (6 February 1978), Experiments to find a manufacturing process for an x-y touch screen (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
  4. Frank BECK & Bent STUMPE (24 May 1973), Two devices for operator interaction in the central control of the new CERN accelerator (PDF), CERN, பார்க்கப்பட்ட நாள் 2010-05-25
  5. Johnson E.A. Touch Display - A novel input/output device for computers|Journal Electronics Letters 1965 volume 1 issue 8 pages 219–220
  6. Johnson, E.A. (1967). "Touch Displays: A Programmed Man-Machine Interface". Ergonomics 10 (2): 271–277.
  7. Orr, N.W.; Hopkins, V.D. (1968). "The Role of Touch Display in Air Traffic Control.". The Controller 7: 7–9.
  8. CERN Bulletin Issue 12/2010 & 13/2010, "Another of CERN's many inventions!"
  9. oakridger.com, "G. Samuel Hurst -- the 'Tom Edison' of ORNL", December 14 2010.
  10. The ViewTouch restaurant system by Giselle Bisson
  11. http://www.viewtouch.com
  12. Travis Fahs (April 21, 2009). "IGN Presents the History of SEGA". IGN. p. 7. Retrieved 2011-04-27.

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடுதிரை&oldid=1221647" இலிருந்து மீள்விக்கப்பட்டது