சிறப்பு நிறைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1: வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''சூப்பர் பந்துப் பரிமாற்றம் ''' அல்லது '''சூப்பர் ஓவர்''' (''Super Over'')<ref name=ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver>
'''சூப்பர் பந்துப் பரிமாற்றம் ''' அல்லது '''சூப்பர் ஓவர்''' (''Super Over'')<ref name=ABC_Twenty20_NZvWI_26Dec2008_SuperOver>
{{cite web
{{cite web

08:08, 29 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

சூப்பர் பந்துப் பரிமாற்றம் அல்லது சூப்பர் ஓவர் (Super Over)[1][2] அல்லது நீக்குவான் (Eliminator)[3][4] அல்லது ஆங்கிலச் சுருக்கமாக ஓப்சே (Oopse) (ஓரணிக்கு ஒரு ஓவர் நீக்குவான் - One Over Per Side Eliminator)[5], எனப்படுவது மட்டுப்படுத்திய பந்துப் பரிமாற்ற துடுப்பாட்டத்தில் சமனாக முடிந்த ஆட்டங்களில் வெற்றி அணியைத் தேர்கின்ற ஓர் முறைமையாகும்.

ஒர் ஆட்டத்தில் இரு அணிகளும் சமமான ஓட்டங்களைப் பெற்றிருந்தால் இருவருக்கும் ஆட்டப் பள்ளிகளை பகிர்ந்தளிக்காது இந்த சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற அணிக்கே முழுமையான புள்ளிகளும் வழங்கப்படும். 2008ஆம் ஆண்டுமுதல் செயல்முறையில் உள்ள இந்த முறைமை இதற்கு முன்னிருந்த பௌல் அவுட் முறைமைக்கு மாற்றாக அமைந்தது.

சமனான ஆட்டதில் இரு அணிகளும் மூன்று துடுப்பாட்டக்காரர்களையும் ஒரு பந்து வீச்சாளரையும் சூப்பர் பந்துப் பரிமாற்றங்களுக்கு நியமிக்கின்றன. இரு அணிகளும் மீண்டும் ஆடுகளத்திற்கு வருகின்றன. ஆறு பந்துகளுக்கு, முதல் அணி பந்துவீசி களத்தடுப்புச் செய்ய இரண்டாமணியின் மட்டையாளர்கள் தங்களால் இயன்ற அளவில் ஓட்டங்களை எடுக்கின்றனர். பிறகு இரண்டாம் அணி பந்து வீச முதலாமணியின் மட்டையாளர்கள் ஓட்டங்களை எடுக்கின்றனர். எந்த அணி கூடுதலான ஓட்டங்களை எடுத்துள்ளதோ அந்த அணியே வென்றதாக அறிவிக்கப்படுகிறது. இலக்குகள் வழமைபோலவே வீழ்த்தப்படுகின்றன. ஓரணியின் இரண்டு இலக்குகளும் இழந்தநிலையில் அந்த அணியின் சூப்பர் ஓவர் முடிவுறுகிறது.

சான்றுகோள்கள்

  1. "Windies edge NZ in Twenty20 thriller". www.abc.net.au Australian Broadcasting Corporation. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  2. "Benn stars in thrilling tie". cricinfo.com cricinfo.com. 2008-12-26. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  3. "One-over eliminator could replace bowl-out". cricinfo.com cricinfo.com. 2008-06-27. பார்க்கப்பட்ட நாள் 2008-12-26.
  4. "2009/10 Champions League Twenty20, Match 11 - Feroz Shah Kotla Ground, Delhi, IND". Australian Broadcasting Corporation. 2009-10-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
  5. static.espncricinfo.com/db/DOWNLOAD/0000/0035/oopse.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறப்பு_நிறைவு&oldid=1221302" இலிருந்து மீள்விக்கப்பட்டது