ஆல்டிகைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: hi:सुव्युद
வரிசை 38: வரிசை 38:
[[gl:Aldehido]]
[[gl:Aldehido]]
[[he:אלדהיד]]
[[he:אלדהיד]]
[[hi:एल्डिहाइड]]
[[hi:सुव्युद]]
[[hr:Aldehidi]]
[[hr:Aldehidi]]
[[hu:Aldehid]]
[[hu:Aldehid]]

03:02, 25 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

அல்டிகைடு ஒன்று

அல்டிகைடு அல்லது ஆல்டிகைடு (Aldehyde) என்பது ஃபோமைல் வினைக்குழு (formyl group) கொண்ட ஒரு சேதனச் சேர்வையாகும். இங்கு மையத்திலுள்ள காபனைல் வினைக்குழுவின் (carbonyl group) ஒருபுறத்தில் ஓர் ஐதரசன் (Hydrogen) அணுவும் மறுபுறத்தில் அல்கைல் வினைக்குழு ஒன்றும் (Alkyl group) காணப்படும். காபனைல் (அல்லது கார்போனைல்) வினைக்குழுவின் இருபுறமும் அல்கைல் வினைக்குழு இணைக்கப்பட்டிருப்பின் அச்சேர்வை கீட்டோன் (Ketone) எனப்படும்.

கட்டமைப்பும் பிணைப்பும்

அல்டிகைட்டின் தொழிற்பாட்டுக் கூட்டக் காபன் sp2-கலப்பாக்கப்பட்ட காபனில் இரட்டைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒட்சிசன் அணுவும் ஒற்றைப்பிணைப்பால் இணைக்கப்பட்ட ஐதரசன் அணுவும் இணைக்கப்பட்டிருக்கும். C-H பிணைப்பு அமிலப் பிணைப்பல்ல. ஏனெனில் உருவாக்கப்படும் இணைமூலமானது பரிவினால் உறுதியாக்கப்படும். எனவே, சாதாரண அல்கேன் ஒன்றிலுள்ள C-H பிணைப்பிலும் பார்க்க (pKa அண்ணளவாக 50) அல்டிகைட்டிலுள்ள C-H பிணைப்பு(pKa அண்ணளவாக 17) அமிலத்தன்மை கூடியது.[1] இவ்வமிலத்தன்மைக்கு பின்வருவன காரணமாகும்.

  • ஃபோமைல் கூட்டத்தின் இலத்திரன் பின்வாங்குதிறன்
  • உருவாகும் இணைமூலத்தின் மறையேற்றம் ஓரிடப்படாதிருக்கும்.

அல்டிகைட்டுகள் (அல்பா காபன் இல்லாதவை, அல்லது அல்பா காபனில் புரோத்தன்கள் இல்லாதவை தவிர்ந்த, உதாரணமாக ஃபோமல்டிகைட் மற்றும் பென்சல்டிகைட்) கீட்டோ அல்லது ஈனோல் நிலையில் இருக்கலாம். இச் செயற்பாடு அமிலம் அல்லது மூலத்தினால் ஊக்குவிக்கப்படலாம். பெரும்பாலும் கீட்டோ நிலையே உருவாகும். எனினும், ஈனோல் தாக்குதிறன் மிக்கது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டிகைடு&oldid=1218371" இலிருந்து மீள்விக்கப்பட்டது