ஜிப்ரால்ட்டர் நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: vec:Streto de Gibiltera
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: ku:Tengava Cîbraltarê
வரிசை 57: வரிசை 57:
[[ko:지브롤터 해협]]
[[ko:지브롤터 해협]]
[[krc:Гибралтар ачыкъ богъаз]]
[[krc:Гибралтар ачыкъ богъаз]]
[[ku:Tengava Cîbraltar]]
[[ku:Tengava Cîbraltarê]]
[[la:Fretum Gaditanum]]
[[la:Fretum Gaditanum]]
[[lb:Strooss vu Gibraltar]]
[[lb:Strooss vu Gibraltar]]

17:22, 17 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

விண்வெளியிலிருந்து ஜிப்ரால்டர் நீரிணையின் தோற்றம்.

ஜிப்ரால்ட்டர் நீரிணை, மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் நீரிணையாகும். மத்தியதரைக் கடற் பகுதியில், ஆவியாதல் வீதம், அதனுள் விழும் ஆறுகளினால் ஏற்படும் மொத்த நீர்வரத்தைவிட அதிகமாக இருப்பதன் காரணமாக, நீரிணையில் கிழக்கு நோக்கிய நீரோட்டம் தொடர்ச்சியாக உள்ளது. நீரிணையில் காணப்படும் கற்படுகைகள், அட்லாண்டிக்கின் குளிர்ந்த, உவர்ப்புக் குறைந்த நீரும், மத்தியதரைக் கடலின் சூடான, கூடிய உவர்ப்புத்தன்மை கொண்ட நீரும் கலப்பதைக் குறைக்க உதவுகின்றன. மத்தியதரைக் கடல் நீரின் உவர்த்தன்மை காரணமாக, இந்த நீர் எப்பொழுதும் உள்ளே வந்துகொண்டிருக்கும் அட்லாண்டிக் நீரின் அடியில் அமிழ்ந்து கிடக்கின்றது. இது நீரிணையின் அடியில் மிகவும் உவர்த்தன்மை கொண்ட நீர்ப்படையாக உருவாகி உள்ளது. இந்த இருவேறு அடர்த்தி கொண்ட நீர்ப்படைகள் சந்திக்கும் தளம் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. இது அட்லாண்டிக் கடலடியிலுள்ள கண்டச் சரிவின் வழியாகச் சென்று, உவர்த்தன்மை குறைந்து, சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் அட்லாண்டிக் நீருடன் கலக்கின்றது. இது மத்தியதரைக்கடல் வெளிநீரோட்டம் (Mediterranean Outflow) எனப்படுகின்றது. இந்த வெளிநீரோட்ட நீரை, அட்லாண்டிக் கடலினுள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவுக்கு அடையாளம் காணமுடியும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரால்ட்டர்_நீரிணை&oldid=1213693" இலிருந்து மீள்விக்கப்பட்டது