சினைப்பருவச் சுழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tl:Paglalandi
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bg:Полов цикъл
வரிசை 22: வரிசை 22:


[[ar:نزو جنسي]]
[[ar:نزو جنسي]]
[[bg:Полов цикъл]]
[[ca:Cicle estral]]
[[ca:Cicle estral]]
[[cs:Estrální cyklus]]
[[cs:Estrální cyklus]]

11:00, 13 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

சினைப்பருவச் சுழற்சி (estrous cycle) என்பது நஞ்சுக்கொடிப் பாலூட்டிப் பெண் விலங்குகளில் இனப்பெருக்க வளரூக்கிகளின் உந்துதலால் நடைபெறும் உடலியங்கியல் மாற்றங்களைக் குறிக்கிறது. இதை மாதவிடாய் சுழற்சியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம்.

மாதவிடாய் சுழற்சியுடன் வேறுபடுதல்

மாதவிடாய் சுழற்சி சினைப்பருவச் சுழற்சி
மனிதன் மற்றும் சிம்பன்சிகளில் நடைபெறும். இதர நஞ்சுக்கொடிப் பாலூட்டிகளில் நடைபெறும்.
சுழற்சியின் எல்லாக் காலத்திலும் பெண்களுடன் உடலுறவு கொள்ள முடியும் சுழற்சியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டு‌மே பெண் விலங்குகள் புணர்ச்சியை அனுமதிக்கும்.
கருப்பையில் கருப்பதியம் நடைபெறாவிடில் சுழற்சியின் இறுதிநாட்களில் கருப்பை உட்படலம் உதிர்ந்து இரத்தப் போக்கு ஏற்படும். சில விலங்குகளில் கருப்பதியம் நடைபெறாவிடில் கருப்பை உட்படலம் உறிஞ்சப்பட்டு விடும்.
மாதவிடாய் குறிப்பிட்ட காலத்தில் நின்று அதன்பின் இனப்பெருக்கம் செய்ய இயலா நிலை நேரும் பல விலங்குகள் சாகும் வரையிலும் தொடர்ந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

முடையடித்தல்

முடையடித்தல் என்பது மாடு வளர்ப்பில் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். ஒரு சினைப்பருவச் சுழற்சி முடிந்த பசுக்கள் தங்கள் கன்றுகளைப் பால் குடிக்க விடாது. ஒரு குறித்த காலத்தின் அவற்றின் இனப்பெருக்க உறுப்பு வீங்கி குருதி வழியும். இந்நேரத்தில் சினைப்படும் பொருட்டு பொலிகாளையிடம் பசுவை அழைத்துச் செல்வர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சினைப்பருவச்_சுழற்சி&oldid=1162472" இலிருந்து மீள்விக்கப்பட்டது