சமவெளிப் பொழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:விவிலிய நிகழ்வுகள் சேர்க்கப்பட்டது
வரிசை 30: வரிசை 30:


[[பகுப்பு:கிறித்தவ வரலாறு]]
[[பகுப்பு:கிறித்தவ வரலாறு]]
[[பகுப்பு:விவிலிய நிகழ்வுகள்]]


[[en:Sermon on the Plain]]
[[en:Sermon on the Plain]]

04:35, 22 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

சமவெளிப் பொழிவு என்பது லூக்கா நற்செய்தி 5-7 இன் படி நாசரேத்தூர் இயேசுவினால் அருளப்பெற்ற போதனையாகும். இந்த நிகழ்வை இதனினும் நீடிய மலைப்பொழிவுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சிலர் இவ்விரண்டும் ஒன்றே எனவும், வேறுசிலர், இவ்விரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறானவை எனவும் கூறுவர்.

லூக்கா நற்செய்தி 6:12-20(அ)-இன் படி இந்நிகழ்வுக்கு முன்பு இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்கு வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார். விடிந்ததும் அவர் தம் சீடர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார். இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்களை குணமாக்கிய பின் போதித்தவையே 'சமவெளிப் பொழிவு' எனப்பட்டது.

சமவெளிப் பொழிவின் முக்கிய கருத்துக்கள்

"பேறுபெற்றோர்" அடங்கிய அலங்காரத்தட்டு, திருவருட்பேறுகள் தேவாலயம்
  • பேறுபெற்றோர் (6:20-26)
  • பகைவரிடம் அன்பு காட்டுதல் (6:27-36)
  • பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள் (6:31)
  • தீர்ப்பிடுதல் (6:37-38)
  • பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா? இருவரும் குழியில் விழுவரல்லவா?40 சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர். (6:39-40a)
  • முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய் கண் தெரியும் (40b-42)
  • கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை. ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (43-44)
  • நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ' ஆண்டவரே, ஆண்டவரே ' என ஏன் கூப்பிடுகிறீர்கள்? (46)
  • இருவகை அடித்தளங்கள் (47-49)

இவற்றையும் பார்க்கவும்

மலைப்பொழிவு/சமவெளிப் பொழிவு
இயேசுவின் வாழ்வும் பணிகளும்
முன்னர்
திருத்தூதுப் பொழிவு
  புதிய ஏற்பாட்டு 
நிகழ்வு
பின்னர்
நயீன் ஊர்க்
கைம்பெண் மகன் உயிர்பெறுதல்
(லூக்கா நற்செய்தி 7:11-17 )
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமவெளிப்_பொழிவு&oldid=1143299" இலிருந்து மீள்விக்கப்பட்டது