இளம் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|இளம் பெருவழுதி}}
இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயரைக் 'கடலுள் மாயந்த இளம்பெரு வழுதி' என்று சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன. இவர் பாண்டிய மன்னராகவும் திகழ்ந்தவர். கடற்போரில் மாண்டுபோனார்.

16:34, 16 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

இளம்பெரு வழுதி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயரைக் 'கடலுள் மாயந்த இளம்பெரு வழுதி' என்று சில பதிப்புகள் குறிப்பிடுகின்றன. இவர் பெயரில் 2 பாடல்கள் உள்ளன. இவர் பாண்டிய மன்னராகவும் திகழ்ந்தவர். கடற்போரில் மாண்டுபோனார்.

புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் வேறு, பரிபாடல் நூலிலுள்ள பாடலைப் பாடியவர் வேறு என்பது அறிஞர்கள் கருத்து. பாடலின் பொருளமைதியே இதற்குக் காரணம்.

புறநானூறு 182

பாடல்

உண்டால் அம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கு என முயலா நோன் தாள்
பிறர்க்கு என முயலுயர் உண்மை யானே.

பாடல் தரும் செய்தி

  • இந்திரர் அமிழ்தம் = தேவாமிர்தம், சாவா மருந்து (கட்டுக்கதை நம்பிக்கை)

அமிழ்தம் பெறினும் பகிர்ந்து உண்ணுபவர், சினம் கொள்ளாதவர், தூங்காமல், அஞ்சாமல் உழைத்துப் புகழுக்காக உயிரையும் தருபவர், உலகையே கூலியாகப் பெறுவதாயினும் சான்றோர் பழிக்கும் செயலைச் செய்யாதவர், முயற்சியைப் பிறர் நலனுக்கு ஆக்குவோர் ஆகிய இவர்கள் வாழ்வதால்தான் உலகம் வாழ்கிறது.

பரிபாடல் 15

செய்தி

  • திருமாலிருஞ்சோலை = இருங்குன்று = பெரும்பெயர் இருவரை = கேழ் இருங்குன்று (அழகர் மலை)

அழகர் மலைத் திருமாலை வழிபடுமாறு இந்தப் பாடல் கூறுகிறது. இந்தத் திருமாலின் பெருமை இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது.

66 அடிகள் கொண்ட இந்தப் பாடலுக்கு மருத்துவன் நல்லச்சுதன் என்பவர் இசை அமைத்து நோதிறம் என்னும் தமிழ்ப்பண்ணால் பாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இளம்_பெருவழுதி&oldid=1138809" இலிருந்து மீள்விக்கப்பட்டது