யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:
==வெளியிணைப்புகள்==
==வெளியிணைப்புகள்==
*{{official website|http://www.uefa.com/uefaeuropaleague/index.html}}
*{{official website|http://www.uefa.com/uefaeuropaleague/index.html}}

[[பகுப்பு:கால்பந்துப் போட்டிகள்]]


[[af:UEFA Europa League]]
[[af:UEFA Europa League]]

02:00, 2 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு
படிமம்:351px-Europa league.svg.png

யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு (UEFA Europa League) /juːˈfə jʊˈrpə ˈlɡ/, பழைய பெயர் யூஈஎஃப்ஏ கோப்பை (UEFA Cup) /juːˈfə ˈkʌp/, ஆனது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தால் ஆண்டுக்கொருமுறை, தகுதிபெறும் கால்பந்து கழகங்களுக்காக நடத்தப்பெறும் போட்டியாகும். இது 1971-இல் தொடங்கப்பட்டது. யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு அடுத்தபடியாக இப்போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கால்பந்து கழகங்கள் அவற்றின் நாடுகளில் கூட்டிணைவு மற்றும் உள்நாட்டுக் கோப்பைகளில் செயல்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் இப்போட்டிக்குத் தகுதிபெறும்.

முன்னதாக யூஈஎஃப்ஏ கோப்பை என்று அறியப்பட்ட இது 2009-10 பருவத்திலிருந்து போட்டியின் அமைப்பு முறை மாற்றப்பட்ட பிறகு யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு என்று அழைக்கப்படுகிறது.[1][2] ஐரோப்பிய கால்பந்து கட்டுப்பாட்டமைப்பின் ஆவணப்படுத்தல் காரணங்களுக்காக, யூஈஎஃப்ஏ கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு ஆகிய இரண்டுமே ஒன்றாகவே கருதப்படுகின்றன. வழக்கத்தில் பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.ref>"New format provides fresh impetus". UEFA.com. Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 15 May 2010.</ref>

1999-ஆம் ஆண்டு யூஈஎஃப்ஏ கோப்பை வெற்றியாளர்கள் கோப்பை, யூஈஎஃப்ஏ கோப்பையுடன் ஒன்றுசேர்க்கப்பட்டது.[3] 2004-05 பருவத்தில் தோற்றால் வெளியே சுற்றுக்கு முன்னர் குழு நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. 2009-இல் பெயர் மாற்றத்தோடு கூடவே, யூஈஎஃப்ஏ இன்டர்டோடோ கோப்பையும் இணைக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை உயர்ந்ததோடு போட்டியின் அமைப்புமுறையும் மாற வழிவகுத்தது. யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவு வாகையாளர்கள் யூஈஎஃப்ஏ சூப்பர் கோப்பை ஆட தகுதிபெறுவார்கள்.

இதுவரை 26 வெவ்வேறு கால்பந்து கழகங்கள் இதனை வென்றுள்ளன, அவற்றுள் 12 கழகங்கள் இதனை ஒருமுறைக்குமேல் வென்றுள்ளன. இப்போட்டியில் அதிகமுறை வென்றவர்கள் யுவன்டசு, இன்டர்நேசனல் மற்றும் லிவர்பூல் ஆகியவையாகும். அவையாவும் தலா 3 முறை இப்போட்டியை வென்றுள்ளன.[4]


உசாத்துணைகள்

  1. "UEFA Cup gets new name in revamp". BBC Sport. 26 September 2008. http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/7637600.stm. பார்த்த நாள்: 26 September 2008. 
  2. "UEFA Inter-Cities Fairs Cup to become UEFA Cup". uefa.com. பார்க்கப்பட்ட நாள் 26 September 1972. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "UEFA Europa League History". UEFA.com. பார்க்கப்பட்ட நாள் 27 April 2008.
  4. "Competition format". UEFA. 13 July 2005. பார்க்கப்பட்ட நாள் 9 July 2008.

வெளியிணைப்புகள்

[[zh:欧足联欧洲