சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hr:Žlijezda
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: nds:Drüüs
வரிசை 57: வரிசை 57:
[[mk:Жлезда]]
[[mk:Жлезда]]
[[my:ဂလင်း]]
[[my:ဂလင်း]]
[[nds:Drüüs]]
[[new:ग्रन्थि]]
[[new:ग्रन्थि]]
[[nl:Klier]]
[[nl:Klier]]

14:34, 19 மே 2012 இல் நிலவும் திருத்தம்

மனிதக் கன்னஎலும்புக்கீழ்ச் சுரப்பி. At the right is a group of mucous alveoli, at the left a group of serous alveoli.

சுரப்பி என்பது, விலங்குகளின் உடம்பில் வளரூக்கிகள், முலைப்பால் போன்றவற்றை உண்டாக்கி வெளிவிடும் ஒரு உறுப்பு ஆகும். இவ்வாறு சுரக்கும் நீர்மம் இரத்த ஓட்டத்துடன் கலக்கிறது அல்லது உடலுக்குள் உள்ள இடைவெளிகளுள் அல்லது உடல் மேற்பரப்பில் விடப்படுகிறது. இரத்தஓட்டத்தில் நீர்மங்களைச் சுரக்கும் சுரப்பிகள் அகச்சுரப்பிகள் என்றும், மற்றவகை புறச்சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

வகைகள்

சுரப்பிகள் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  • அகச்சுரப்பிகள்: இவை தமது சுரப்புநீரை நேரடியாக ஒரு மேற்பரப்பில் சுரக்கின்றன.
  • புறச்சுரப்பிகள்: இவை தமது சுரப்பிநீரை குழாய்கள் மூலம் சுரக்கின்றன. இப் பிரிவில் உள்ள சுரப்பிகள் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
    • ஆப்போகிறைன் சுரப்பிகள்: இதில் சுரத்தலின்போது சுரக்கும் கல உடலின் ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. அப்போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொதுவாக அப்போகிறைன் வியர்வைச் சுரப்பிகள் குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்தலுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப்படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண்மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என்றும் கருதப்படுகிறது.
    • ஹொலோகிறைன் சுரப்பிகள்: சுரத்தலின்போது சுரக்கும் கலம் முழுவதுமே அழிந்துபோகிறது.
    • மெரோகிறைன் சுரப்பிகள்:

புறச்சுரப்பிகளின் சுரப்புப் பொருள் அடிப்படையிலும் சுரப்பிகள் மூன்று பிரிவுகளாக உள்ளன:

  • ஊநீர்ச் சுரப்பிகள்: நீர்த்தன்மையான புரதம் நிறைந்த பொருளைச் சுரப்பவை.
  • சளிமச் சுரப்பிகள்: சளி போன்ற, அதிக மாப்பொருளைக் கொண்ட பொருளைச் சுரப்பவை.
  • கொழுப்புச் சுரப்பிகள்: கொழுப்புத் தன்மையான பொருள்களைச் சுரப்பவை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரப்பி&oldid=1112343" இலிருந்து மீள்விக்கப்பட்டது