"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,234 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
உடல்நலத்தோடு கூடிய ஒருவர் மூச்சுவிடுவதை வேண்டுமென்று நீண்ட நேரம் நிறுத்திவைக்க முடியாது. ஒருவர் வளியை உள்ளெடுக்காவிட்டால், குருதியில் காபனீரொட்சைடு அதிகமாகி [[வளி வேட்கை]] ஏற்படும். மூச்சுவிடாவிட்டால், சில நிமிடங்களிலேயே உடலின் உள்ளக ஒட்சிசன் அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து மூளைச் சிதைவையும் தொடர்ந்து இறப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான அடக்கமுடியாத [[மறிவினை]] ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. எனினும், இரண்டு மணி நேரம் வரை மனிதர் காற்றில்லாமல் உயிருடன் இருந்ததும் உண்டு. ஆனால் இது குளிர் நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலமும், தற்காலிகமாக உடலியக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமுமே இயலக்கூடியது.
 
ஒருவர் குறிப்பிட்ட அளவு நேரத்துக்கு மேல் தானாகவே மூச்சுவிடுவதை நிறுத்தி வைத்திருப்பார் எனின் அவர் மயக்கம் அடைந்து விடுவார், பின்னர் மூச்சுவிடல் தானாகவே நிகழத் தொடங்கிவிடும். இதனால், தன்னியல்பாக மூச்சுவிடல் நிகழ முடியாதபடி, நீரில் அமிழ்தல் போன்ற வேறு நிலைமைகள் இருந்தாலன்றி, மூச்சைத் தானே நிறுத்தி வைப்பதன் மூலம் ஒருவர் [[தற்கொலை]] செய்துகொள்ள முடியாது.
 
அதிவிரைவாக மூச்சுவிடல் குருதியில் காபனீரொட்சைடின் அளவை வழமையான நிலையிலும் குறைந்த நிலைக்குக் கொண்டுவரும். இது, காபனீரொட்சைடினால் தூண்டப்படும் [[நாளச்சுருக்கம்|நாளச்சுருக்கத்தினாலும்]], [[போர் விளைவு]] (Bohr effect) அடக்கப்படுவதாலும், முக்கியமான உறுப்புக்களுக்கான குருதி வழங்கலும் ஒட்சிசன் வழங்கலும் குறைத்துவிடும். ஒருவர் தானாகவே விரைந்து மூச்சு விடுவாரானால், திசுக்களில் ஒட்சிசன் ஆபத்தான அளவுக்குக் குறைவதன் மூலம் மூளையில் ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு மயக்கம் அடைவார்.
 
===தன்னியல்புக் கட்டுப்பாடு===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090681" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி