"மூச்சுவிடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,629 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
===விரும்பிக் கட்டுப்படுத்தல்===
மூச்சை விரும்பிக் கட்டுப்படுத்தல் பல்வேறு வடிவங்களிலான தியான முறைகளில் காணப்படுகின்றது. யோகப் பயிற்சி முறைகளுள் ஒன்றான மூச்சுப் பயிற்சியில் (பிராணாயாமம்) கட்டுப்படுத்தி மூச்சுவிடுதல் இடம்பெறுகிறது. நீச்சல், பேச்சுப் பயிற்சி, குரற் பயிற்சி போன்றவற்றில் மூச்சை ஒழுங்குபடுத்துவது பற்றிப் பயிற்சி பெறுகின்றனர். மனிதப் பேச்சும் விரும்பி மூச்சைக் கட்டுப்படுத்துவதில் தங்கியுள்ளது.
 
உடல்நலத்தோடு கூடிய ஒருவர் மூச்சுவிடுவதை வேண்டுமென்று நீண்ட நேரம் நிறுத்திவைக்க முடியாது. ஒருவர் வளியை உள்ளெடுக்காவிட்டால், குருதியில் காபனீரொட்சைடு அதிகமாகி [[வளி வேட்கை]] ஏற்படும். மூச்சுவிடாவிட்டால், சில நிமிடங்களிலேயே உடலின் உள்ளக ஒட்சிசன் அளவு ஆபத்தான நிலைக்குக் குறைந்து மூளைச் சிதைவையும் தொடர்ந்து இறப்பையும் ஏற்படுத்தும் என்பதால், இவ்வாறான அடக்கமுடியாத [[மறிவினை]] ஆச்சரியத்துக்கு உரியது அல்ல. எனினும், இரண்டு மணி நேரம் வரை மனிதர் காற்றில்லாமல் உயிருடன் இருந்ததும் உண்டு. ஆனால் இது குளிர் நீரில் அமிழ்த்தி வைப்பதன் மூலமும், தற்காலிகமாக உடலியக்கங்களை நிறுத்தி வைப்பதன் மூலமுமே இயலக்கூடியது.
 
===தன்னியல்புக் கட்டுப்பாடு===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1090663" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி