தென்சீனக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியியல்: *விரிவாக்கம்*
சி →‎வளங்கள்: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 24: வரிசை 24:


பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.
பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

== ஆட்சி எல்லைக் குறித்த உரிமைக்கோரல்கள் ==
[[File:Spratly with flags.jpg|thumb|250px|இசுபிராட்லி தீவுகளை ஆக்கிரமித்திருக்கும் பல நாடுகளைக் குறித்த வரைபடம்]]
[[File:South China Sea claims.jpg|thumb|right|தென்சீனக் கடல் மீதான கடல்சார் உரிமைகள்]]
தென்சீனக் கடல் பகுதிகளின் மீது பல நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக ஆட்சிஎல்லை உரிமைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது.
[[சீன மக்கள் குடியரசு]]ம் (PRC) [[சீனக் குடியரசு]]ம் (ROC) இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த எதிர் உரிமைக்கோரல்கள் :
* நதுனா தீவுகளின் வடகிழக்கு கடல்பகுதி குறித்து இந்தோனேசியா, சீனா, மற்றும் தைவான்
* மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளி களம் குறித்து பிலிப்பீன்சு,சீனா மற்றும் தைவான்.
* இசுகார்பரோ திட்டு குறித்து பிலிப்பீன்சு. சீனா மற்றும் தைவான்.
* இசுபிராட்லித் தீவுகளின் மேற்கு கடல்பகுதி குறித்து வியட்நாம், சீனா மற்றும் தைவான். சில அல்லது அனைத்துத் தீவுகளைக் குறித்தும் வியட்நாம், சீனா,தைவான், புருணை,மலேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளுக்கிடையே பிணக்கு உண்டு.
* பராசெல் தீவுகளைக் குறித்து சீனா, தைவான் மற்றும் வியட்நாம் இடையே.
* தாய்லாந்து வளைகுடா பகுதிகள் குறித்து மலேசியா, கம்போடியா, தாய்லாந்து,வியட்நாம்.
* சிங்கப்பூர் நீரிணை மற்றும் யோகோர் நீரிணை குறித்து சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும்

==இந்திய கடற்படையின் வருகை மற்றும் எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த சீன எதிர்ப்பு==


== மேலும் பார்க்க ==
== மேலும் பார்க்க ==

02:13, 8 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

30°0′N 125°0′E / 30.000°N 125.000°E / 30.000; 125.000

தென்சீனக்கடலின் ஒரு தோற்றம்

சீனாவின் தெற்குப்புறம் உள்ள கடல் தென்சீனக்கடல் என அழைக்கப்படுகிறது. இது பசிபிக் கடலின் ஒரு பகுதியாகும். சிங்கப்பூருக்கும் தைவான் நீரிணைக்கும் இடையில் இது அமைந்துள்ளது. இக்கடலின் பரப்பளவு 3,500,000 ச.கி.மீ. உலகின் ஐந்து மாக்கடல்களுக்கு அடுத்துள்ள பெரிய கடல்களுள் இதுவும் ஒன்று. உலகின் கப்பல் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தக் கடல் வழியே செல்வதால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இந்தக் கடலின் அடிப்பகுதியில் பெரும் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. [1]

இந்தப் படல் பகுதியின் அமைவிடம்

இக்கடலில் பலநூறு சிறு தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமும் உள்ளது. பல்வேறு நாடுகள் இந்தக் கடலுக்கும் இதிலுள்ள பெரும்பாலும் மக்களில்லாத தீவுகளுக்கும் உரிமை கொண்டாடுகின்றன.

புவியியல்

தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளும் ஆட்சிப்பகுதிகளும் (வடக்கில் துவங்கி கடிகாரச்சுற்றில்):மக்காவு மற்றும் ஃகொங்கொங் உள்ளிட்ட சீன மக்கள் குடியரசு, சீனக் குடியரசு (தைவான்), பிலிப்பீன்சு, மலேசியா, புருணை, இந்தோனேசியா, சிங்கப்பூர், மற்றும் வியட்நாம்.

இந்தக் கடலில் விழும் பெரும் ஆறுகள்: பவழ ஆறு , மின் ஆறு, ஜியுலொங் ஆறு, சிவப்பு ஆறு, மேக்கொங், ரஜங் ஆறு, பகாங் ஆறு, பம்பங்கா ஆறு, மற்றும் பாசிக் ஆறு.

வளங்கள்

இந்த கடல்பகுதி உலக புவிசார் அரசியலில் மிக முக்கியமான நீர்ப்பகுதியாகும். உலகின் இரண்டாவது மிகவும் பயன்படுத்தப்படும் கடல் வழி ஆகும். உலகின் வருடாந்திர வணிக கப்பல் சரக்குப் போக்குவரத்தில் 50%க்கும் மேலான எடையளவு மலாக்கா நீரிணை, சுந்தா நீரிணை மற்றும் லோம்பொக் நீரிணைகள் வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஒருநாளைக்கு 1.6 மில்லியன் க.மீ (10 மில்லியன் பீப்பாய்கள்) பெட்ரோலியம் எடுத்துச் செல்லப்படுகிறது. அடிக்கடி கடற்கொள்ளை நிகழ்வுகள் பதியப்பட்டபோதும் இருபதாம் நூற்றாண்டின் நடுக்காலங்களில் இருந்ததைவிட குறைந்துள்ளது.

இந்தப் பகுதியில் உறுதிசெய்யப்பட்ட பாறை எண்ணெய் இருப்பு ஏறத்தாழ 1.2 கன கி.மீ (7.7 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும், மொத்தம் மதிப்பிடப்பட்ட இருப்பு 4.5 கன கி.மீ (28 பில்லியன் பீப்பாய்கள்) அளவிலும் உள்ளது. இயற்கை எரிவளி வளங்கள் மொத்தம் 7,500 கன கி.மீ (266 டிரில்லியன் கன அடி) எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

பிலிப்பீன்சு நாட்டு சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுகள் உலகின் கடல்சார் உயிரிப் பன்மியத்தில் மூன்றில் ஒருபங்கு இந்தக் கடல்பகுதியில் இருப்பதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே உலகச் சூழ்நிலைத் தொகுப்பில் இப்பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கதாக விளங்குகிறது.

ஆட்சி எல்லைக் குறித்த உரிமைக்கோரல்கள்

இசுபிராட்லி தீவுகளை ஆக்கிரமித்திருக்கும் பல நாடுகளைக் குறித்த வரைபடம்
தென்சீனக் கடல் மீதான கடல்சார் உரிமைகள்

தென்சீனக் கடல் பகுதிகளின் மீது பல நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக ஆட்சிஎல்லை உரிமைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. சீன மக்கள் குடியரசும் (PRC) சீனக் குடியரசும் (ROC) இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த எதிர் உரிமைக்கோரல்கள் :

  • நதுனா தீவுகளின் வடகிழக்கு கடல்பகுதி குறித்து இந்தோனேசியா, சீனா, மற்றும் தைவான்
  • மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளி களம் குறித்து பிலிப்பீன்சு,சீனா மற்றும் தைவான்.
  • இசுகார்பரோ திட்டு குறித்து பிலிப்பீன்சு. சீனா மற்றும் தைவான்.
  • இசுபிராட்லித் தீவுகளின் மேற்கு கடல்பகுதி குறித்து வியட்நாம், சீனா மற்றும் தைவான். சில அல்லது அனைத்துத் தீவுகளைக் குறித்தும் வியட்நாம், சீனா,தைவான், புருணை,மலேசியா மற்றும் பிலிப்பீன்சு நாடுகளுக்கிடையே பிணக்கு உண்டு.
  • பராசெல் தீவுகளைக் குறித்து சீனா, தைவான் மற்றும் வியட்நாம் இடையே.
  • தாய்லாந்து வளைகுடா பகுதிகள் குறித்து மலேசியா, கம்போடியா, தாய்லாந்து,வியட்நாம்.
  • சிங்கப்பூர் நீரிணை மற்றும் யோகோர் நீரிணை குறித்து சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும்

இந்திய கடற்படையின் வருகை மற்றும் எண்ணெய்வள ஆய்வுகள் குறித்த சீன எதிர்ப்பு

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. A look at the top issues at Asian security meeting Associated Press, ROBIN McDOWELL, July 21 2011. Retrieved July 21 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்சீனக்_கடல்&oldid=1082297" இலிருந்து மீள்விக்கப்பட்டது