பிரித்தானிய வெப்ப அலகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கி மாற்றல்: vi:Đơn vị nhiệt Anh
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sr:Btu
வரிசை 53: வரிசை 53:
[[ro:British thermal unit]]
[[ro:British thermal unit]]
[[ru:Британская термическая единица]]
[[ru:Британская термическая единица]]
[[sr:Btu]]
[[sv:Btu]]
[[sv:Btu]]
[[tr:BTU]]
[[tr:BTU]]

18:10, 3 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

பிரித்தானிய வெப்ப அலகு (பி.டி.யூ அல்லது BTU or Btu = British thermal unit) என்பது ஆற்றலை அளக்கும் ஓர் அலகு. "வெப்ப அலகு" என்று குறிப்பிட்டாலும், இது ஓர் ஆற்றல் அலகு. இவ் ஆற்றல் அலகானது ஒரு பவுண்டு எடையுள்ள நீரை, சீரழுத்த நிலையில், 1°F உயர்த்தத் தேவையான ஆற்றல் ஆகும். இவ்வலகு பெரும்பாலும் கனடா, அமெரிக்கக் கூட்டு நாடுகள், ஐக்கிய இராச்சியம் போன்ற ஆங்கிலம் பேசும் நாடுகளில், நீரைச் சூடேற்றும் கருவிகள், காற்றுபதனக் கருவிகள், அறையைச் சூடேற்று/குளிர்விக்கும் கருவிகள் போன்றவற்றை விற்பனை செய்யும் தொழிலகங்களில் பரவலாகப் பயன்படுத்தும் ஓர் ஆற்றல் அலகு. அறிவியலில் இவ் அலகைப் பயன்படுத்துவதில்லை. அறிவியலில் ஆற்றலை அளக்க SI அலகான ஜூல் பயன் படுகின்றது. ஒரு பிரித்தானிய வெப்ப அலகு (பி.டி.யூ) என்பது ஏறத்தாழ 1055 ஜூல் ஆகும். வேறு ஒரு வெப்ப அலகாகிய கலோரி கணக்கில் ஒரு பி.டி.யூ என்பது 252.16 கலோரிக்கு ஈடு.

பிரித்தானிய வெப்ப அலகானது, திறன் (ஆற்றுதிறன்) அளவீடுகளிலும் பயன்படுகின்றது. ஒரு மணி நேரத்தில் ஓராயிரம் பி.டி.யூ செலவானால் அது 293 வாட்டுக்கு ஈடாகும். (1000 BTU/h = 293 W). இவ்வகை திறன் அலகுகள் (பி.டி.யூ/மணி) அடுப்பு, வீட்டை சூடேற்றும் உலைகள், வீட்டுத்தோட்டத்தில் உணவை வாட்டும் உலைத் தளங்கள் (பார்பிக்யூ, barbecue), காற்றுப்பதனக் கருவிகள் முதலானவற்றில் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒரு மணி நேரத்தில் செலவாகும் பி.டி.யூ என்னும் திறன் அலகையும் பேச்சு வழக்கில் துல்லியம் இல்லாமல், குழப்பம் தருமாறு பி.டி.யூ (BTU) என்றே அழைக்கும் வழக்கும் உள்ளது. ஆனால் திறன் என்பது பி.டி.யூ/மணி (BTU/h ) ஆகும்.

MBTU என்பது ஓராயிரம் பி.டி.யூ ஆகும். இதில் வரும் முதல் எழுத்தாகிய M உரோமானிய எண்ணெழுத்து முறையில் ஓராயிரத்தைக் குறிக்கும் (M என்பது மெகா அல்ல). எனவே MBTU = 1000 BTU. ஒரு மில்லியன் (மெகா) பி.டி.யூவைக் குறிக்க MMBTU என்று எழுதுகிறார்கள். MMBTU = 1,000,000 BTU.. இன்னும் பெரிய ஆற்றல் அளவாக குவாடு (quad) என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு குவாடு =1015 BTU = ஒரு குவாடிரில்லியன் BTU.


அலகு மாற்றங்கள்

ஏறத்தாழ ஒரு பி.டி.யூ ( BTU) என்பது :

தொடர்புடைய பிற அலகுகள்

  • 1 வாட் என்பது ஏறத்தாழ 3.413  பி.டி.யூ/மணி (BTU/h)
  • 1000 பி.டி.யூ/மணி (BTU/h) ஏறத்தாழ 293 வாட் (W)
  • 1 குதிரைத்திறன் (horsepower) என்பது ஏறத்தாழ 2,544 பி.டி.யூ/மணி (BTU/h)
  • 1 "டன் குளிர்ச்சி" ("ton of cooling") என்று வட அமெரிக்காவில் குளிர்ப்பெட்டி, அறை குளிர்விகள், காற்றுப்பதனக் கருவிகள் விற்பனை செய்பவர்கள் கூறுவது 12,000  பி.டி.யூ/மணி (BTU/h) ஆகும். இது ஒரு சிறிய டன் பனிக்கட்டியை 24 மணி நேரத்தில் உருக்கத்தேவையான திறன் ஆகும். இது ஏறத்தாழ 3.51 கிலோ வாட் (kW).
  • 1 தெர்ம் therm என்பது ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் வரையறையில் 100,000 பி.டி.யூ (BTU)—ஆனால் அமெரிக்கா BTU59 °F என்னும் அலகைப் பயன்படுத்துகின்றது; ஐரோப்பிய ஒன்றியம் (EU) BTUIT என்னும் அலகைப் பயன்படுத்துகின்றது.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்தானிய_வெப்ப_அலகு&oldid=1079038" இலிருந்து மீள்விக்கப்பட்டது