சரக் கோட்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: de:Superstringtheorie
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: de:Stringtheorie
வரிசை 17: வரிசை 17:
[[cs:Teorie strun]]
[[cs:Teorie strun]]
[[da:Strengteori]]
[[da:Strengteori]]
[[de:Superstringtheorie]]
[[de:Stringtheorie]]
[[el:Θεωρία χορδών]]
[[el:Θεωρία χορδών]]
[[en:String theory]]
[[en:String theory]]

09:36, 17 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

சரக்கோட்பாடு

சரக்கோட்பாடு(String Theory) என்பது துகள் இயற்பியலில் ஒரு முக்கியமான கோட்பாடு, சரக்கோட்பாடு துணுக்க விசையியல்லையும், பொது சார்பியல்லையும் சமரசப்படுத்த முயலும் ஒரு கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு "அனைத்ததுலககோட்பாடுக்கு" () ஒரு நல்ல போட்டியிடும் கோட்பாடு (நபர்) என்றே கூற‌லாம். அனைத்ததுலககோட்பாடு என்பது அடிப்படை விசைகள் மற்றும் "பொருள்" ஆகியவற்றை கணிதமுறையில் விளக்கவள்ள ஒரு பெரிய கோட்பாடு ஆகும். சரக்கோட்பாடு இன்னும் பரிசோதித்து உறுதி செய்யப்பட வேண்டிய ஒரு கோட்பாடு ஆகும்.

சரக்கோட்பாட்டின்படி அணுவிலுள்ள எலக்ட்ரான் மற்றும் குவார்க் ஆகியவை 0-பரிமாண பொருட்களல்ல, 1-பரிமாண அசைவுறும் கோடுகள்("சரங்கள்") ஆகும். ஆரம்பகால சரக்கோட்பாடுகளில், போசானிக் சரங்கள், போசான் துகள்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டன. இக்கருத்தாக்கம் பின்னர் மீச்சரக்கோட்பாடு-ஆக மேம்படுத்தப்பட்டது. மீச்சரக்கோட்பாட்டில் போசான் துகள்களுக்கும் பெர்மியான் துகள்களுக்கும் ஒருவகைத் தொடர்பு(மீச்சமச்சீர்மை) உள்ளது என நிறுவப்பட்டது. அறியப்பட்ட 4 வெளி-நேர பரிமாணங்களைத் தவிர்த்து மேலும் பல, கண்ணுக்கு புலப்படாத கண்டறிய இயலா, பரிமாணங்கள் சரக்கோட்பாட்டை நிறுவ தேவைப்படும்.

இக்கோட்பாட்டின் தோற்றம் இரட்டை ஒத்ததிர்வு மாதிரி (வலிய விசை) ஆய்வுகளுடன் தொடர்புடையது. அதன் தொடர்ச்சியாக 5 வெவ்வேறு சரக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டன. அனைத்தும் பெர்மியான்களை தங்கள் கோட்பாடுகளில் கொண்டிருந்தன. மேலும் அனைத்துலகக் கோட்பாடுகளுக்குத் தேவையான பண்புகளையும் கொண்டிருந்தன. அவற்றிலிருந்த இருமையியல்புகளால் 5 கோட்பாடுகளும் தொடர்புபடுத்தப்பட்டமையால், 1990-களின் மத்தியிலிருந்து 11-பரிமாண கோட்பாடான எம் கோட்பாடு-ஆக (5 வெவ்வேறு சரக்கோட்பாடுகளின் பண்புகளையும் ஒருங்கே கொண்டதாக அறியப்படுவது) மேம்படுத்தப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக்_கோட்பாடு&oldid=1065760" இலிருந்து மீள்விக்கப்பட்டது