டைனமைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 1: வரிசை 1:
{{under construction}}
{{under construction}}
{{About|உயர்நிலை வெடிபொருளைப்}}
{{About|மிகு ஆற்றல் வெடிபொருளைப்}}
[[Image:Dynamite-5.svg|thumb|Diagram of dynamite.
[[Image:Dynamite-5.svg|thumb|Diagram of dynamite.
<ol style="list-style-type:upper-alpha;">
<ol style="list-style-type:upper-alpha;">

04:20, 17 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

Diagram of dynamite.
  1. Sawdust (or any other type of absorbent material) soaked in nitroglycerin.
  2. Protective coating surrounding the explosive material.
  3. Blasting cap.
  4. Electrical cable (or fuse) connected to the blasting cap.

டயனமைட்டு என்பது தழைமவீருயிரகக் களிக்கரை (நைதரோகிளிசரின்) என்ற வெடி மருந்தினால் அமைந்தது. தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டவை டயட்டம் மண் அல்லது பிற உறிஞ்சும் தன்மையுள்ள பொருட்களான கிளிஞ்சல் பொடி, களிமண், ரம்பத்தூள் அல்லது மரக்கூழ் என்பனவாகும். ரம்பத்தூள் போன்ற கரிமப்பொருட்களை பயன்படுத்தும் டயனமைட்டு குறைந்த சமநிலையுடன் (less stable) இருப்பதால் இதன் பயன்பாடு முற்றிலும் கைவிடப்பட்டது. சுவீடனைச் சேர்ந்த பொறியியலாளரும் வேதியியல் வல்லுனருமான அல்பிரெட் நோபெல் என்பவரால் கிரம்மல் (கீச்தச்ட் சிலேச்விக்-ஹோல்ச்டீன்,செருமனி)என்னுமிடத்தில் டயனமைட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 1867 ஆம் ஆண்டு காப்புரிமை பெற்றது. இந்த வெடிமருந்து வகை பொருளின் பெயர் டயனமிஸ் என்ற கிரேக்க வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகவும் இதன் பொருள் ஆற்றலுடன் தொடர்புடையது என்பதாகும்.

டயனமைட்டு வழக்கமாக 8 இன்சு (20 சம்) நீளமும் 1 1/2 இன்சு (3.2 cm ) குறுக்கு விட்டமும், 0 5 பவுண்டு (0 .23 கி.கிராம்) உடைய அளவுகளில் குச்சியாக விற்கப்படுவதுண்டு[1]. வேறு சில அளவுகளும் உள்ளன. நைதரோகிளிசரின் சார்புடைய தயனமைட்டின் தேக்க ஆயுள் (shelf life), தகுதியான தேக்க வரையறைகளுக்கு (storage conditions ) உட்பட்டு அது உருவாக்கிய நாள் (date of manufacture ) முதல் ஒரு ஆண்டு எனப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேக்க வரையறை என்பது தேக்க ஆயுளுடன் தொடர்புடைய நிபந்தனையாகும்[1].

டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) விட 60 % அதிகம்.

நைட்ரோ செல்லுலோசில் நைதரோகிளிசரின் கலந்து சிறிதளவு கீற்றோன் (ketone) சேர்க்கப்பட்ட கலவை தயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (cordite ) போன்றது. இது முன் விவரித்த நைதரோகிளிசரின் மற்றும் தய்ட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. படைத்துறை டயனமைட்டு நைதரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான வேதிப்பொருட்களை பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது[2]. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற உருவகங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது(for example at this link)..

Preparation of dynamite during the construction of the Douglas Dam, 1942.

பயன்கள்

டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: சுரங்கத் தொழில், கல் வெட்டி எடுத்தல், கட்டுமானம், மற்றும் தகர்த்தல் பணிகள். போர்முறைகளில் இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைதரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.

வரலாறு

Alfred Nobel's 1864 patent application for nitroglycerin.

டயனமைட்டு, அல்பிரெட் நோபெல் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கரு மருந்தைவிட பாதுகாப்பாகக் கையாளும் தன்மையுடையது. நோபெல், இங்கிலாந்தில் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி அன்று தன கண்டுபிடிப்பிற்கான காப்புரிமை பெற்றார். தொடர்ந்து சுவீடனில் 1867 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி அன்று காப்புரிமை பெற்றார்[3] இவர் தயனமைட்டை நோபலின் வெடி திறன் என்ற பெயரில் விற்றார். அறிமுகமான உடனேயே டயனமைட்டு, நைதரோகிளிசரின் மற்றும் கருமருந்தை விடவும், பரவலான பயன்பாட்டினைப் பெற்றது. நோபெல் காப்புரிமையை திறம்படக் கையாண்டதால் உரிமம் பெறாத நிறுவனங்கள் மூடப்பட்டன. எனினும் சில அமெரிக்க வர்த்தகர்கள் சற்றே மாறுபட்ட கலவை முறையை காட்டி காப்புரிமை பெற்றனர்[4]. இந்த கண்டுபிடிப்பு வன்முறையாளர்களைக் கொண்டாட வைத்தது[5]..

உற்பத்தி

An old dynamite storage magazine at Ladyha' Colliery ruins, Ayrshire, Scotland.
Diatomaceous earth as viewed under bright field illumination on a light microscope. Diatomaceous earth is a soft, siliceous, sedimentary rock made up of the cell walls/shells of single cell diatoms and which readily crumbles to a fine powder. It is also very absorbent. This image of diatomaceous earth particles in water is at a scale of 6.236 pixels/micrometer, the entire image covers a region of approximately 1.13 by 0.69 millimeter.

தரமான டயனமைட்டு மூன்று பங்கு நைதரோகிளிசரின், ஒரு பங்கு தயட்டம் மண் மற்றும் சிறிய அளவில் சோடியம் கார்போனெட்டு என்ற அளவில் இருக்கும். இந்தக் கலவை சிறிய குச்சிகளாக உருவாக்கி காகிதத்தாளால் சுற்றப்படுவதுண்டு. நைதரோகிளிசரின் என்பது மட்டும் மிகப்பெரிய ஆறறலுள்ள வெடிப்பொருள். இது இதன் தூய நிலை என்பது அதிர்வு உணர்திறனுடைத்தது. எனவே மோசமான வெடி விபத்துக்களை உருவாக்க வல்லது. இது நாளடைவில் நிலை தாழ்வதால்(degrades over time) நிலைகுலையும் (more unstable forms) வாய்ப்புள்ளது. எனவே இதனை தூயநிலையில் எடுத்துச்செல்வது அல்லது பயன்படுத்துவது அபாயகரமானதாகும். தயட்டம் மண்ணால் அல்லது ரம்பத்தூளால் உறுஞ்சப்படுவது காரணமாகவே நைதரோகிளிசரின் குறைந்த அதிர்வு உணருந்திறன் உடைத்தாகிறது. நாளடைவில் டயனமைட்டு அதன் நைதரோகிளிசரினை வியர்த்து ("weep" or "sweat") வெளியேற்றுவதால் இவை கொள்கலப்பெட்டியின் அடியில் சேர்ந்துவிடும். எனவே வெடிபொருள் கையேடுகள் கொள்கலப்பெட்டியினை மீண்டும் மீண்டும் கவிழ்த்து திருப்பி ஆயப்படுத்த அறிவுறுத்துகின்றன. குச்சிகள் மேல் படிகம் படிவதால் இதன் வெடிக்கும் அபாயம் இன்னும் அதிகமாகிறது. நாள்பட்ட டயனமைட்டு நிறைய ஆபத்தானது.

தென்னாப்பிரிக்க குடியரசு

தென்னாப்பிரிக்க குடியரசு தான் 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் மேற்கு சாமேர்செட்டில் 1902 ஆம் ஆண்டு தே பீர்ஸ் (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி) என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் விட்வாட்டார்ஸ்ரண்டு என்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் மோடர்போண்டின் என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது[6].

இதில் உள்ள ஒரு பின்னடைவு என்னவெனில் தயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது என்பதுதான். மேற்கு சாமேர்செட் தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் கட்டக வடிவமைப்பும் (modular design), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். மோடர்போண்டின் தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு எ.இ.சி.ஐ படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது[7].

அமெரிக்கா

Advertisement for the Aetna Explosives Company of New York.

அமெரிக்காவில் 1885 ஆம் ஆண்டு ரஸ்ஸல் எஸ். பென்னிமன் என்ற வேதியல் வல்லுநர் அம்மோனியம் டயனமைட்டு என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் அம்மோனியம் நைட்ரேட்டு என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்கப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் 'எக்ஸ்ட்ரா என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ் நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ஹெர்குலிஸ்,கலிபோர்னியா, அட்லாஸ், ட்ரோஜன் யு.எஸ் பவுடர், ஆஸ்டின், மற்றும் சில நிறுவனகள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான நீர்க்கூழ்ம வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச்செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது[8].

டி.என்.டி யுடனான வேறுபாடு

ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள் இதன் பெயர் 2, 4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன். படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ஆர்..டி.எக்ஸ், 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது. . ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி) மற்றும் டயனமைட்டு என்ற இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பதாக ஒரு தவறான மயக்கம் உள்ளது. மற்றொரு தவறான புரிதல் என்பது டயனமைட்டில் டி.என்.டி உள்ளது என்பதுதான். இக்கருத்துக்கள் இரண்டுமே தவறு. இரண்டுமே மிக ஆற்றலுள்ள வெடிப்பொருட்கள் என்றாலும் இவற்றிற்கு இடையே நிலவும் ஒற்றுமைகள் மிகக்குறைவு. டயனமைட்டு என்பது நைட்ரோகிளிசரினை இணைத்து கலந்த உறிஞ்சும் தன்மையுள்ள கலவை. டி.என்.டி என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள் இதன் பெயர் 2, 4,6 - ட்ரைநைட்ரோடாலுவீன். படைப்பிரிவு டயனமைட்டு. .என்பது ஒரு டயனமைட்டுக்கான ஒரு மாற்று (substitute ) ஏற்பாடு எனலாம். இதன் கூட்டுப்பொருட்களின் கலவை விகிதம் 75 % ஆர்..டி.எக்ஸ், 15 % டி.என்.டி, SAE 10 மோட்டார் எண்ணெய், 5 % சோளமாவு. இது 60 % நைட்ரோகிளிசரின் சேர்த்து கலந்த டயனமைட்டை விட எளிதில் கையாளும் தன்மையும் பாதுகாப்பும் பெற்றது[9].

ஒரு டயனமைட்டு குச்சியில் தோராயமாக 2.1 எம்J சக்தியுள்ளது. [10] டயனமைட்டு வெடி ஆற்றலின் செறிவை (ஜூல்ஸ்/ கிலோகிராம் அல்லது ஜே/கி.கிராம்) த.என்.டி உடன் தோராயமாக ஒப்பிட்டால்

டயனமைட்டு = 7.5 M J / kg

டி.என்.டி 4 5 M J / kg

என்று விடை வரும்

.

மேலுமபார்க்க

மேற்கோள்கள்

குறிப்புகள்

  1. 1.0 1.1 Austin Powder Guide, Dynamite series page 2.
  2. Ledgard, Jared (2007), A Soldiers Handbook, Volume 1: Explosives Operations, ISBN 0615147941
  3. Schück & Sohlman (1929), p. 101.
  4. US Patent 234489 issued to Morse 16 November 1880
  5. Palmer, Brian (2010-12-29) What do anarchists want from us?, Slate.com
  6. An MBendi Profile: South Africa - History of the Chemical Industry.
  7. Historical Highlights 1980's.
  8. DuPont Heritage: Explosives.
  9. Unexploded Ordnance Information: Ordnance Fillers
  10. Classroom Energy.

உசாத்துணைகள்

  • Cartwright, A. P. (1964). The Dynamite Company: The Story of African Explosives and Chemical Industries Limited. Cape Town: Purnell & Sons (S.A.) (Pty) Ltd.
  • Schück, H. and Sohlman, R.(1929). The Life of Alfred Nobel. London: William Heinemann Ltd.

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைனமைட்டு&oldid=1065639" இலிருந்து மீள்விக்கப்பட்டது