விக்கிப்பீடியா:விரைவுப்பகுப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: af, arc, bjn, kk மாற்றல்: as, pt
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: tt:Википедия:Gadgets-HotCat
வரிசை 68: வரிசை 68:
[[sv:Wikipedia:Hotcat]]
[[sv:Wikipedia:Hotcat]]
[[tr:Vikipedi:Araçlar/HotCat]]
[[tr:Vikipedi:Araçlar/HotCat]]
[[tt:Википедия:Gadgets-HotCat]]
[[uk:Вікіпедія:Додатки/HotCat]]
[[uk:Вікіпедія:Додатки/HotCat]]
[[vi:Wikipedia:HotCat]]
[[vi:Wikipedia:HotCat]]

09:07, 15 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

ஹாட்கேட் (Hotcat) என்பது விக்கிப்பீடியாவில் உள்ள எளியமுறை பகுப்புருவாக்கு கருவியாகும். இக்கருவியை கொண்டு தொகு என்னும் வார்ப்புருவை உபயோகிக்காமல் அக்கட்டுரைப் பக்கத்திற்கு சென்று நேரடியாக பகுப்புகளை இணைக்கவும், நீக்கவும் அல்ல்து வேறு பகுப்புக்கு மாற்றவோ முடியும்.

நிறுவல்

கருவியாக நிறுவ

  • என் விருப்பத்தேர்வுகள் என்பதைச் சொடுக்கிவரும் பக்கத்தில் கடைசியாக உள்ள கருவிகள் எனும் தத்தலில் தொகுப்புதவிக் கருவிகள் எனும் பிரிவில் உள்ள Hotcat என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு கருவியாக உங்கள் அமர்வுக்கு நிறுவப்பட்டுவிடும். மேலும் ஒவ்வொரு முறையும் உங்கள் நெறியத்தோல் ஏற்றம்பெறாமல் (load) இருக்கும்.
என் விருப்பத்தேர்வுகள் → கருவிகள் → தொகுப்புதவிக் கருவிகள் → Hotcat சதுரபெட்டியை சொடுக்கவும் → பின் விருப்பத்தேர்வுகளை சேமிக்கவும்.


உபயோகிக்கும் முறைகள்

நீங்கள் ஒரு கட்டுரை பக்கத்தில் இருக்கும் போது பகுப்புகள் பகுதியில் பின்வரும் குறிகள் தோன்றும்.

குறி பயன் உதாரணம்
(+) புதிய பகுப்பு சேரும் தமிழர் ஒருவரின் கட்டுரை எப்பகுப்புகளோடும் இணைக்காமல் காணப்படுகிறது. தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (+) குறியை சொடுக்கி வரும் பெட்டியில் தமிழர் என்று தட்டச்சு செய்து சரி என்று டிக் செய்யவும். தற்போது அக்கட்டுரை தமிழர் பகுப்புக்குள் சென்றுவிடும்.
(−) பகுப்பு நீக்கப்படும் தமிழ் நபரல்லாத ஒரு கட்டுரையில் பகுப்புகள்:தமிழ் நபர்கள் என்றுள்ளது. தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (−) குறியை சொடுக்கினால் தமிழ் நபர்கள் பகுப்பில் இருந்து அக்கட்டுரை நீக்கப்படும்.
(±) பகுப்பு தொகுக்கப்படும் ஒரு கட்டுரை தமிழர் அறிவியல் பகுப்பில் உள்ளது. அக்கட்டுரை அப்பகுப்பில் இருப்பதை விட தமிழர் வானியல் என்ற பகுப்பில் இருப்பது சிறந்ததாக இருக்கலாம். தற்போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (±) குறியை சொடுக்கி தமிழர் அறிவியல் என்பதில் அறிவியல் வார்த்தையை அழித்துவிட்டு வானியல் என்று தட்டச்சிடுவது மூலம் அக்கட்டுரை தமிழர் வானியல் பகுப்புக்கு மாறிவிடும்.
(↓) பகுப்பு துணைப்பகுப்புக்கு மாறிவிடும் ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் துணைப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↓) குறியை சொடுக்கினால் அப்பகுப்பில் உள்ள துணைப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த துணைப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய துணைப்பகுப்புக்குள் சென்றுவிடும்.
(↑) பகுப்பு தாய்ப்பகுப்புக்கு மாறிவிடும் ஒரு கட்டுரையில் உள்ள பகுப்பின் தாய்ப்பகுப்புகள் தெரியாமல் இருக்கும் போது அப்பகுப்பு பகுதிக்கு சென்று (↑) குறியை சொடுக்கினால் அப்பகுப்பு அடங்கியுள்ள தாய்ப்பகுபுகளின் பட்டியல் வரும். அதில் தகுந்த தாய்ப்பகுப்பை சொடுக்கி சேமிப்பதன் மூலம் அக்கட்டுரை பகுப்பு சொடுக்கிய தாய்ப்பகுப்புக்குள் சென்றுவிடும்.

எடுத்துக்காட்டு படம்