பகலொளி சேமிப்பு நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: as:দিবালোক সংৰক্ষণ সময়
சி →‎வரலாறு: clean up, replaced: →
வரிசை 17: வரிசை 17:

== வரலாறு ==
== வரலாறு ==
[[பாரிஸ்]] இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி [[பெஞ்சமின் பிராங்க்லின்]] தெரிவித்துள்ளார். <ref>[http://webexhibits.org/daylightsaving/franklin3.html முழு கட்டுரையைக் காண்க]</ref> இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே [[பிரான்ஸ்|பிரெஞ்சு]] அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.<ref> பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.[http://www.historynet.com/magazines/american_history/3036996.html பெஞ்சமின் பிராங்க்லின்] </ref>

11:45, 3 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

  பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படும் பகுதிகள்
  பகலொளி சேமிப்பு நேரம் முன்னர் கடைப்பிடிக்கப் பட்ட நிலப்பகுதிகள்
  பகலொளி சேமிப்பு நேரம் கடைப்பிடிக்கப்படாத நிலப்பகுதிகள்

பகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. "சேமிக்கப்பட்ட" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.

பகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

பகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும்.

அரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு "கோடை" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலயங்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.

வரலாறு

பாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார். [1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.

பகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.

குறிப்புகள்

  1. முழு கட்டுரையைக் காண்க
  2. பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின்
  3. பகலொளியின் வீணடிப்பு

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகலொளி_சேமிப்பு_நேரம்&oldid=1041685" இலிருந்து மீள்விக்கப்பட்டது