"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
170 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
19 ஆம் நூற்றாண்டில் [[கிறிஸ்துவம்|கிறித்தவ]] மத அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், பிரான்சில் உருவாக்கப்பட்ட, கையால் இயக்கிக் காற்றுச் செலுத்தக்கூடிய ஆர்மோனியங்களை [[இந்தியா|இந்தியாவுக்குக்]] கொண்டுவந்தனர். இலகுவாக இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத் தக்கதாகவும், நம்பத் தகுந்ததாகவும், கற்றுக்கொள்வதற்கு இலகுவாகவும் இருந்ததனால் விரைவிலேயே இது மக்களால் விரும்பப்படுகின்ற ஒரு இசைக்கருவி ஆனது. [[இந்தியா|இந்தியாவின்]] பல விதமான இசைகள் தொடர்பில், இன்றுவரை ஆர்மோனியம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது மேல்நாட்டிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமானாலும், இந்திய இசையின் தனித்துவமான தேவைகளுக்கேற்ப பலவிதமான மாற்றங்களை இந்திய ஆர்மோனியம் பெற்றுள்ளது.
==ஆர்மோனியத்திற்கான எதிர்ப்பு==
19 ஆம் நூற்றாண்டில் [[கர்நாடக இசை]], [[பார்சிமொழி|பார்சி]], [[மராட்டி|மராட்டிய]] இசைகள் போன்ற பல்வேறு [[இந்தியா|இந்திய]] இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, [[இந்துத்தானி இசை]]களுக்கு இன்றியமையாத [[கமகம்|கமகங்களை]] ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் [[சங்கராபரணம்]], [[பைரவி]], [[கல்யாணி]] போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.
 
இவ்வாறான பல காரணங்களால், [[அகில இந்திய [[வானொலி]] தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் [[சவகர்லால் நேரு]]வின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.<ref>http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt70-1204_harmonium.php</ref>. சிறந்த கவிஞராகவும், கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் விளங்கியஅறிந்தவரான [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்.<ref>http://www.tamilvu.org/slet/lA450/lA450ktu.jsp?id=101&sid=10100&pno=0</ref>.
 
==குறிப்புகள்==
51,779

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1034872" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி