"கர்தினால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,827 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: es:Cardenal)
சி (இற்றைப்படுத்தல்)
 
இன்றைய திருச்சபைச் சட்டப்படி, திருத்தந்தைப் பணியிடம் வெறுமையாகின்ற வேளையில் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் (''papal conclave'') பங்கேற்க வேண்டுமானால், கர்தினால் 80 வயதினைத் தாண்டாதவராக இருக்கவேண்டும்.
 
==2012, பெப்ருவரி 18இல் நிகழ்ந்த கர்தினால் குழுக் கூட்டம்==
[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்]] 2012ஆம் ஆண்டு பெப்ருவரி 18ஆம் நாளன்று, வத்திக்கானில் அமைந்துள்ள [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] 22 புதிய கர்தினால்களை ஏற்படுத்தி, அவர்களுக்கு கர்தினால் பதவியின் அடையாளங்களாகிய சிவப்பு தொப்பியும், மோதிரமும் அளித்தார்<ref>[http://www.bbc.co.uk/news/world-europe-17081964 புதிய கர்தினால்கள்]</ref>.
 
புதிய கர்தினால்களுள் ஒருவர் இந்தியாவின் [[ஜார்ஜ் ஆலஞ்சேரி]] ஆவார். மேலும், ஹாங்காங் பேராயர் ஜான் டாங்க், நியூயார்க் பேராயர் திமத்தி டோலன் ஆகியோரும் உள்ளடங்குவர்.
 
==கர்தினால் குழுவின் இற்றைய உறுப்பினர் நிலை (2012, பெப்ருவரி 18)==
தற்போது மொத்தம் 213 கர்தினால்கள் உள்ளனர். இவர்களுள் 125 பேர் 80 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பதால் அவர்கள் மட்டுமே புதிய [[திருத்தந்தை|திருத்தந்தையை]] தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் வாக்களிக்கும் உரிமை கொண்டுள்ளனர். எஞ்சிய 88 கர்தினால்மார்களும் 80 வயது தாண்டியவர்களாக உள்ளதால் அவர்களுக்கு வாக்குரிமை இல்லை.
 
[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்]], தாம் பதவியேற்ற நாளிலிருந்து இன்றுவரை நான்கு தடவைகளாக மொத்தம் 84 கர்தினால்களை நியமித்துள்ளார்.
 
மேற்குறிப்பிட்ட கர்தினால்கள் மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்தவர்கள். கண்டங்கள் வாரியாக கீழ்வருமாறு கர்தினால்களின் எண்ணிக்கை உள்ளது<ref>[http://www.news.va/en/news/composition-of-the-college-of-cardinals கர்தினால்கள் - கண்டங்கள் வாரியாக]</ref>:
 
{| class="wikitable"
|-
! கண்டம்
! கர்தினால்களின் எண்ணிக்கை
|-
| ஐரோப்பா
| 119
|-
| தென் அமெரிக்கா
| 32
|-
| வட அமெரிக்கா (ஐ.அ.நா.; கானடா)
| 21
|-
| ஆசியா
| 20
|-
| ஆப்பிரிக்கா
| 17
|-
| ஓசியானியா
| 4
|}
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1027981" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி