ஆங்கிலேய-மராட்டியப் போர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
No edit summary
சி ஆங்கிலேய-மராத்தியப் போர்கள், ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள...
(வேறுபாடு ஏதுமில்லை)

05:58, 13 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் அல்லது ஆங்கில-மராட்டியப் போர்கள் (Anglo-Maratha Wars) என்பது 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கும் மராட்டியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற மூன்று போர்களைக் குறிக்கின்றது. இப்போர்களின் விளைவாக மராட்டியப் பேரரசு அழிந்து வடமேற்கு மற்றும் நடு இந்தியா ஆங்கிலேயக் கட்டுப்பாட்டில் வந்தது.

முதலாம் ஆங்கிலேய-மராட்டியப் போர் 1775-1882 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசு மோதலில் ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சால்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. இரு தரப்புகளும் மைசூர் அரசுக்கு எதிராக ஒரு அணியில் இணைந்தன. இரண்டாம் ஆங்கிலேய-மராட்டியப் போர் 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன. மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர் 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் பெருவெற்றி பெற்று மராட்டியப் பேரரசை கலைத்தது.