பயனர் பேச்சு:TNSE BASHEER VLR: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 68: வரிசை 68:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#95|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#95|பதிகை]])</small>
|}
|}

{{விருப்பம்}} --[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 10:21, 16 சூன் 2017 (UTC)

10:21, 16 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், TNSE BASHEER VLR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 11:29, 15 மே 2017 (UTC)[பதிலளி]

குறிப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா நல்ல பங்களிப்புகளைத் தருவதற்கு நன்றி. மொழிபெயர்ப்புக் கருவி கொண்டு Contracture தலைப்பை நீங்கள் பதிவேற்றும் போது அது குறுக்கங்கள் என்ற தலைப்பில் ஏற்கனவே இலக்கணம் குறித்து இருந்த உள்ளடக்கத்துக்குப் பதிலாக நோய் குறித்து தாங்கள் எழுதியவற்றைப் பதிவேற்றி விட்டது. எனவே, ஏற்கனவே உள்ள தலைப்பில் புதிய கட்டுரைகளை உருவாக்குவதைத் தவிர்க்க வேண்டுகிறேன். தேவைப்படும் இடங்களில் புதிய தலைப்பில் பதிவேற்றவும் பழைய கட்டுரையின் பெயரை மாற்றவும் உரையாடல் பக்கத்தில் பேசலாம். தாங்கள் எழுதிய கட்டுரையை குறுக்கங்கள் (நோய்) என்னும் தலைப்புக்கு நகர்த்தி உள்ளேன்.--இரவி (பேச்சு) 08:20, 19 மே 2017 (UTC)[பதிலளி]

பங்களிப்பதற்கு நன்றி

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், TNSE BASHEER VLR!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--இரவி (பேச்சு) 08:42, 19 மே 2017 (UTC)[பதிலளி]

ஆங்கில உள்ளடக்கம்

வணக்கம், தாங்கள் எழுதிய பென்பெரிடால் கட்டுரை முழுவதும் ஆங்கில உள்ளடக்கத்தினையே கொண்டுள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் தமிழில்தான் எழுதப்பட வேண்டும். எனவே அக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்யுங்கள், இல்லையேல் நீக்கப்படலாம். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 02:57, 2 சூன் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

நீங்கள் எழுதும் கட்டுரைகள் அனைத்தும் தரமுள்ளவையாக உள்ளன. வாழ்த்துகள். ஒரு சில கருத்துகள்: வேதியியல் கட்டுரைகளில் Chembox தகவல்சட்டம் எதற்காக ஒரே வரியில் எழுதப்படுகின்றன. மொழிபெயர்க்கும் போது அவ்வாறு தான் தோற்றமளிக்கிறதா? 1,3-இருமெதில்-2-இமிடசோலிடினோன் கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 11:07, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

வேற்றுமொழிக் கட்டுரை ஒன்றை மொழிபெயர்க்கும் போது, அதன் பெயரை தமிழுக்கு அடுத்தபடியாக அதன் ஆங்கிலப் பெயரையும், மூலமொழிப் பெயரையும் ஆரம்ப வரிகளில் தருவது அவசியம். உதாரணமாக:
  • பென்பெரிடால் (Benperidol) என்பது பியூடிரோபீனோன் வழிப்பொருளைச் சார்ந்த ஆற்றல் மிகு மருந்தாகும்.
  • விளாதிமிர் விளாதிமீரவிச் பூட்டின் (Vladimir Vladimirovich Putin, உருசியம்: Влади́мир Влади́мирович Пу́тин)

என எழுதப்பட வேண்டும். நன்றி.--Kanags \உரையாடுக 11:23, 4 சூன் 2017 (UTC)[பதிலளி]

உள்ளிணைப்புகள்

வணக்கம் பஷீர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதற்கு பாராட்டுகள். உள்ளிணைப்புத் தலைப்புகளை அப்படியே கையாளாமல் கட்டுரைக்கு ஏற்றவாறு வாக்கியமாக அமைத்துக் கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டு:

உங்களது உரை:

\\இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா) ஆவார். இவர் எடப்பாடி (சட்டமன்றத் தொகுதி)யில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967 மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்\\

திருத்தப்பட்ட உரை:

\\இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார். இவர் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக 1967 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல் மற்றும் 1971 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்\\

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:41, 10 சூன் 2017 (UTC)[பதிலளி]

மீண்டும் உங்களின் கவனத்திற்கு

வணக்கம். தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். உங்கள் ஆர்வமும் உழைப்பும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் கீழுள்ள திருத்தங்களையும் கவனித்துக் கடைபிடிக்குமாறு அருள்கூர்ந்து வேண்டிக்கொள்கிறேன்.

  • உள்ளிணைப்புகள் குறித்து நான் உங்களுக்குச் சுட்டியிருந்த விடயங்களை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். அடுத்தடுத்து வரும் உங்களது கட்டுரைகளில் //சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)// போன்ற அடைப்புக்குறிகளுடன் கூடிய கட்டுரைத் தலைப்புகள் முறையான உள்ளிணைப்பு இன்மையால் இடம்பெறுகின்றன. நான் உங்களுக்கு விளக்கியது தெளிவாக இல்லையோ எனத் தோன்றுகிறது. தயவுசெய்து உங்கள் விக்கிப் பயிற்சியாளர் அல்லது உங்களால் தொடர்புகொள்ள இயலும் பயனர்களின் உதவியை நாடி இவற்றைச் சரிசெய்தீர்களானால் உங்கள் கட்டுரை மென்மேலும் விக்கித்தரமுடையதாகச் சிறக்கும்.
  • கட்டுரைத் தலைப்புகளின் ஆங்கிலப் பெயரையும் சாய்வெழுத்துக்களில் அடைப்புக்குறிக்குள் அவசியம் தருமாறும்,
  • உங்கள் கட்டுரைகளில் பிற பயனர்களால் இணைக்கப்படும் பகுப்புகளையும் அடையாளம் கண்டு நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் இணைத்துப் பழகவும்
  • 'References' என்ற துணைத்தலைப்பையும் மறவாது “மேற்கோள்கள்” என தமிழாக்கம் செய்யவும்

தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:13, 12 சூன் 2017 (UTC)[பதிலளி]

Booradleyp1, இவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நாம் இடும் கருத்துகளைக் கவனிப்பதாகவும் ஆனால் உரையாடல் பக்கத்தில் எப்படி பதில் அளிப்பது, ஐயங்களை யாரிடம் எப்படிக் கேட்பது என்று புரியவில்லை என்று குறிப்பிட்டார். இதே சிக்கலை உலகெங்கும் உள்ள புதிய பயனர்களும் எதிர்கொண்டு வருகிறார்கள் :( அவருக்கு இயன்ற அளவு தொலைப்பேசி வழியாக உதவி நல்க முனைகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 13:01, 14 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியாவில் உரையாடுவது எப்படி? - விளக்கப் படம் காண்க

வணக்கம். விக்கிப்பீடியாவில் மற்ற பயனர்களுடன் உரையாடுவது எப்படி என்பதற்கான விளக்கப்படத்தை இங்கு இட்டுள்ளேன். வலது புறம் உள்ள படத்தையும் சொடுக்கிப் பார்க்கலாம். மேலும் உதவி தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 07:13, 15 சூன் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்க

கட்டுரைகளில் References என்ற துணைப்பகுப்பின் தலைப்பு தமிழில் மேற்கோள்கள் என மொழிபெயர்க்கப்பட வேண்டும். உங்கள் கட்டுரைகளில் அதனை மொழிபெயர்க்காமல் ஆங்கிலத் தலைப்பே இட்டு வருகிறீர்கள். இவற்றைக் கவனித்துத் திருத்த வேண்டுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:29, 15 சூன் 2017 (UTC)[பதிலளி]

பசீர் அவர்களே... References என்ற துணைத்தலைப்பை மேற்கோள்கள் என அனைத்துக் கட்டுரைகளிலும் மாற்றியிருக்கிறேன். இனி எழுதும் கட்டுரைகளில் இதனைக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:51, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

பதக்கம்

விக்கிப்புயல் பதக்கம்
வணக்கம். குறுகிய காலத்தில் 100 கட்டுரைகளை எழுதி அசத்தி உள்ளீர்கள். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் செறிவான பங்களிப்புகளை அளிக்க வாழ்த்துகள். தங்களைப் போன்றோரின் பங்களிப்பு ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சிகளில் எங்களை இன்னும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளச் செய்யும். நன்றி. --இரவி (பேச்சு) 10:07, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம் --Arulghsr (பேச்சு) 10:21, 16 சூன் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_BASHEER_VLR&oldid=2305661" இலிருந்து மீள்விக்கப்பட்டது