பயனர் பேச்சு:Muthuppandy pandian: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 325: வரிசை 325:


:மீண்டும் அறிவுறுத்துகிறேன், தயவு செய்து தலைப்பிடுதலை சரியாக மேற் கொள்ளுங்கள். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF&type=revision&diff=2022711&oldid=2022710 இந்த] மாற்றத்தினையும் கவனியுங்கள். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 15:01, 17 பெப்ரவரி 2016 (UTC)
:மீண்டும் அறிவுறுத்துகிறேன், தயவு செய்து தலைப்பிடுதலை சரியாக மேற் கொள்ளுங்கள். [https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF&type=revision&diff=2022711&oldid=2022710 இந்த] மாற்றத்தினையும் கவனியுங்கள். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 15:01, 17 பெப்ரவரி 2016 (UTC)

::மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன், தலைப்பிடுதலை சரியாக மேற் கொள்ளுங்கள். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 08:47, 24 பெப்ரவரி 2016 (UTC)


== உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் ==
== உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம் ==

08:47, 24 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

வாருங்கள்!

வாருங்கள், Muthuppandy pandian, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 11:44, 22 சூலை 2013 (UTC)[பதிலளி]

முதல் தொகுப்பு

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி

வணக்கம், Muthuppandy pandian!

உங்கள் கட்டுரையை பயிர் போல் வளர்ப்போம், காப்போம்! வித்திட்டதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

-தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:59, 28 சூலை 2013 (UTC)[பதிலளி]

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர் கட்டுரையினை வளர்த்தெடுப்பது கண்டு மகிழ்ச்சி. முக்கியமான இடங்களில் மேற்கோளைச் சுட்டிவிடுங்கள். ஆங்கிலம் முக்கியமான இடங்களில் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்படலாம், ஆனால் அதுவே வசனத்தை கொண்டு செல்லும் சொல்லாக இருக்கக்கூடாது. பசிபிக்கில் போர் வெடித்தது (1941) என்ற உபதலைப்பில் அப்படியே யுத்த முடிவும் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி அச்சு நாடுகள் வீழ்ச்சி - நேச நாடுகள் வெற்றி (1944–45) என்ற பகுதியில் வரவேண்டும். ஆங்கிலக் கட்டுரை வடிவமைப்பை கருத்திற் கொண்டால் சிறப்பான கட்டுரையினை உருவாக்கிவிடலாம். --Anton (பேச்சு) 07:28, 16 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ஊர்கள் பற்றிய பல புதிய கட்டுரைகளை உருவாக்கியமைக்கும் மேலும் பல கட்டுரைகளையும் விரிவாக்கம் செய்வது கண்டும் மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து பங்களியுங்கள். ஏதும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 05:59, 17 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மேலும்..

நீங்கள் விரும்பினால் உங்கள் அறிமுகத்தை உங்கள் பயனர் பக்கத்தில் தரலாம். தொடர்ந்து பங்களியுங்கள் -- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 06:37, 17 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வடகரை, வடகரை கீழ்படுகை

வடகரை, வடகரை கீழ்படுகை - இவை இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 19 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

வடகரை கீழ்படுகை என்பதுவும் வடகரையும் வேறுவேறு ஊர்கள். muthuppandy pandian

ஓரியான் பல்நோக்க குழு வாகனம்

இக்கட்டுரை முழுமையடையாமல் உள்ளதுபோலத் தெரிகிறது. ஆங்காங்கே அடைப்புக்குறிகள் வெறுமையாகத் தரப்பட்டுள்ளது. சரிசெய்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பேச்சுப்பக்கத்தில் உங்கள் செய்தியை இட்டபின் உங்கள் பெயர் எழுதாமல் மேலே நீலப்பட்டையிலுள்ள பேனா போன்ற குறியை சொடுக்குங்கள். பின் தொகுத்தீர்கள் என்றால் உங்கள் கையெழுத்து இடப்பட்டு கிடைக்கும். --Booradleyp1 (பேச்சு) 14:13, 19 ஆகத்து 2013 (UTC) நீங்கள் சொன்னது சரி. நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 07:05, 20 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அகநானூறு

அகநானூறு உள்ளது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:08, 21 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]


பதில்

நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் எனது பேச்சுப் பக்கத்தில் உள்ளது.-- நி ♣ ஆதவன் ♦ (என்னோடு உரையாட படத்தை சொடுக்கவும்) 07:43, 22 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை

பதிப்புரிமை உள்ள படிமங்களை பதிவேற்ற முடியாது. பார்க்க: விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும் வழிகாட்டல்களும். தேவையான படிமங்கள் விக்கி பொதுவில் உள்ளன. --Anton (பேச்சு) 11:19, 23 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

அறிவுரை உதவி

முக்கியமான கட்டுரைகளை உருவாக்குவதற்கும் தொகுப்பதற்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புக்கள் சில:

சரியாக வடிவமைத்ததல், மேற்கோள் சுட்டுதல், பகுப்பினுள் சேர்த்தல், விக்கியிடை இணைத்தல் அகிய விடயங்களை கருத்திற்கொண்டு நீங்கள் உருவவாக்கிய சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் என்ற கட்டுரையினை மேம்படுத்தியுள்ளேன். மாற்றங்களை கவனித்துப் பாருங்கள். --Anton (பேச்சு) 02:55, 24 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

தயவு செய்து மேற்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை நினைவிற்கொண்டு கட்டுரையினைத் தொகுங்கள். விளங்காவிட்டால் கேளுங்கள். இராமலிங்க விலாசம் கட்டுரையினை அப்படியே உருவாக்கிவிடடுச் செல்ல வேண்டாம். யாருமே கவனியாதுவிட்டால் என்ன செய்வது? --Anton (பேச்சு) 07:34, 27 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]


நீங்கள் தொடர்ந்தும் அறிவுரைகளைக் கவனியாது செயற்படுகிறீர்கள் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். விளங்காவிட்டால் சக பயனர்களையோ அல்லது இங்கு ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். --Anton (பேச்சு) 06:23, 28 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உங்கள் அறிவுரைகளைக் கவனித்தேன். ஆனாலும் ஒருசில நேரங்களில் நான் செய்யும் தவறுளைத்திறுத்துங்கள்.--Muthuppandy pandian (பேச்சு) 06:16, 30 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

படிமங்கள்

ஏற்கனவே பொதுவகத்தில் உள்ள படிமங்களை தயவுசெய்து மீண்டும் தமிழ் விக்கியில் பதிவேற்றாதீகள் (எடுத்துக்காட்டு: குமரிஅம்மன் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள இரு படங்கள்). பொதுவகத்தின் படிமங்களை நாம் தமிழ் விக்கியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.--Booradleyp1 (பேச்சு) 05:50, 31 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல், தொகுத்தலில் சிக்கல்

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. ஆயினும், தொடர்ச்சியாக அறிவுரை உதவி மற்றும் தொகுத்தல் உதவிகள் செய்தும் உங்கள் தொகுத்தல் மேம்பட்டதாகத் தெரியவில்லை. மேலும், பதிப்புரிமையுள்ள படிமங்களை பதிவேற்றல் போன்ற செயற்பாடுகள் நீங்கள் தொடர்ந்து தொகுக்க முடியாதவாறு தடைசெய்யப்பட வாய்ப்புள்ளது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மணல் தொட்டியில் நன்கு பயிற்சி பெற்ற பின் தொகுத்தலில் ஈடுபடுங்கள். --Anton (பேச்சு) 03:46, 1 செப்டம்பர் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

வணக்கம், Muthuppandy pandian!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 08:49, 2 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்

அசத்தும் புதிய பயனர் பதக்கம்
ரொம்ப நாட்களாகவே பார்க்கிறேன். நீங்கள் பயனுள்ள பல தகவல்களைச் சேர்த்து வருகிறீர்கள். உங்கள் எழுத்து நடையும் சிறப்பாக உள்ளது. பல கட்டுரைகளில் அழகாக திருத்தம் செய்திருக்கிறீர்கள். தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துகிறேன். உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:32, 2 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

ஐயம்...

வணக்கம். எனது பேச்சுப் பக்கத்தில் \\அகநானூரு பற்றிய கட்டுரை இருப்பதை தெரிவித்ததற்க்கு நன்றி. அதை அப்போதே நீங்கள் சரி செய்திருக்க வேண்டாமா?// என தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளதைக் கண்டேன். இதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:49, 4 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்

வணக்கம். கட்டுரைகளை உருவாக்குவதில் நீங்கள் காட்டும் ஆர்வத்திற்குப் பாராட்டுகள். எனினும் உங்கள் கட்டுரைகளில் பிற பயனர்கள் செய்யும் மாற்றங்களைக் கவனித்து அதன்படி அடுத்து நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளை விக்கி நடைக்கேற்றவாறு உருவாக்குங்கள். ஊர்கள் குறித்த உங்கள் கட்டுரைகள் பலவற்றை தமிழ் விக்கிக்கேற்றபடி நான் மாற்றியிருக்கிறேன். மேற்கோள்களாக அரசு தள விவரங்களைத் தாருங்கள். பிற இணைய தளங்கள் தரும் குறிப்புகளை வெளி இணைப்புகளாகத் தரலாம். அதுவும் நீங்கள் மேற்கோள்களைத் தரும் முறையையும் பிற கட்டுரைகளில் உள்ளது போல் இணைக்கவும். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போல அவை தமிழ் விக்கிக்கேற்ற அமைப்பில் அமைவதும் மிகவும் அவசியம். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் கேளுங்கள். உதவுகிறோம். உங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்களுடன்--Booradleyp1 (பேச்சு) 15:40, 4 செப்டம்பர் 2013 (UTC)

"அரண்சோதனை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். இதை சரிபார்க்கவும்--Muthuppandy pandian (பேச்சு) 07:06, 5 செப்டம்பர் 2013 (UTC)

இந்த அரண்சோதனை கருத்து பற்றி எனக்குத் தெரியாது. அதனால் என்னால் இக்கட்டுரை பற்றி அதிகம் கூற இயலாது. ஆனாலும் அரண் சோதனை என்றால் என்ன என்று கூறப்பட்டுள்ளதுக்கும் நிகழ்வு என்ற பக்கத்தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள விவரத்திற்குமுள்ள தொடர்பு என்ன என்று எனக்குப் புரியவில்லை. மேலும் நீங்கள் தந்துள்ள மேற்கோள் இணைய முகவரி செயற்பாட்டில் இல்லை. அரண் சோதனைக்கு ஆதாரமாக இணைய ஆதாரங்களைக் (செயல்படும் நிலையிலுள்ள) கட்டுரையில் இணைக்க முடியுமா என்று பாருங்கள்.--Booradleyp1 (பேச்சு) 14:25, 5 செப்டம்பர் 2013 (UTC)

பாலமேடு ஜல்லிக்கட்டு

இக்கட்டுரையில் ஆதாரங்களாகத் தரப்பட்டுள்ளவை இக்கட்டுரைக்கு எவ்வாறு ஆதாரங்களாகும் என்று எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் விளக்க முடியுமா? பொருந்தாத ஆதாரங்களையும் வெளி இணைப்புகளையும் நீக்க வேண்டியிருக்கும். புகைப்படம் நன்றாக உள்ளது. நீங்கள் எடுத்ததா?--Booradleyp1 (பேச்சு) 15:31, 6 செப்டம்பர் 2013 (UTC)

நீங்கள் பாலமேடு கட்டுரையில் தந்திருந்த சான்றுகளை மீண்டும் இங்கு தந்திருக்கிறேன். இவற்றை இப்போது கிளிக் செய்து பாருங்கள், பாலமேடு ஜல்லிக்கட்டிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

மேற்கோள்களாகத் தருவதற்குச் சரியான இணைய முகவரியைத் தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு சிக்கல் உள்ளதா? இப்பொழுது சரியான இணைப்புகள் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. பாருங்கள். இது பற்றிய உங்கள் சந்தேகங்களைத் தெளிவு படுத்துங்கள்.

புகைப்படம் பற்றிக் கேட்டிருந்தேன். ஹிந்து நாளிதழில் இருந்து டவுன்லோட் பண்ணினீர்களா? அவ்வாறு செய்யக்கூடாது என நினைக்கிறேன். எனினும் இப்பொழுது கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள படம் விக்கி பொதுவகத்தில் ஏற்கனவே இருந்தது. அதனை பயனர் கனக்ஸ் இணைத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்கள் பற்றிய அரசுதள குறிப்புகளுக்குக் காணவேண்டிய தளங்களின் விவரங்கள் வேண்டுமானால் கேளுங்கள்.--Booradleyp1 (பேச்சு) 12:49, 7 செப்டம்பர் 2013 (UTC)

சிறு வழிகாட்டல்

பாண்டியன் மேற்கோளை இணைக்க <ref></ref> என்ற தொடரைப் பயன்படுத்தலாம். உம் <ref>தினகரன், 21/2/2013</ref> என மேற்கோள் இடவேண்டிய இடத்தில் இட்டு விட்டு கீழே

==மேற்கோள்==

{{Reflist}}

என இட்டால் போதும்.

இது இவ்வாறு தோன்றும் [1]

மேற்கோள்

  1. தினகரன், 21/2/2013

மேலும் உதவி வேண்டும் எனில் கேட்கவும். நன்றி--♥ ஆதவன் ♥ ♀ பேச்சு ♀ 09:10, 10 செப்டம்பர் 2013 (UTC)

செய்தித் தாளில் வந்த செய்திகளை மேற்கோளாகத் தருவதற்கு ஆதவன் கூறியுள்ளவாறு இடலாம். நாளிதழின் பெயரும் தேதியும் மட்டும் தராமல், நமக்குத் தேவையான செய்தியுடைய இணைய பக்க முகவரி இருப்பின் அதனையும் தரலாம். செய்தி வந்துள்ள நாளிதழின் இணைய பக்கத்திற்குப் போய் நமக்குத் தேவையான செய்தியின் தலைப்பைத் தேடல் பெட்டியிலிட்டால் அதற்குரிய இணைய பக்கம் கிடைக்கும்.

படிமம்

ஆங்கில விக்கியிலுள்ள படிமத்தைத் நேராகத் தமிழ் விக்கிக்கு மாற்ற முடியாது. விக்கிப் பொதுவகத்திற்கு நகர்த்தினால் தமிழ் விக்கியிலும் பயன்படுத்தலாம். ஆ.வியில் இருந்து பொதுவகத்திற்கு நகர்த்துவதற்கு இங்கு பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 14:25, 10 செப்டம்பர் 2013 (UTC)

தி இந்து (தமிழ் நாளிதழ்)

தி இந்து (தமிழ் நாளிதழ்) எனும் கட்டுரையில் உங்களின் பங்களிப்பினைத் தொடருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:03, 16 செப்டம்பர் 2013 (UTC)

ஆங்கிலப் பதிப்பின் வரலாறு, இக்கட்டுரைக்கு தேவையற்றது. எனவே நீக்கியுள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:21, 16 செப்டம்பர் 2013 (UTC)

thomas j. sargent

இவரின் பெயரில் கட்டுரை எழுதப் போகிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 18 செப்டம்பர் 2013 (UTC)

எழுதிவிட்டுச் சொல்லுங்கள்; ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து அப்படியே எடுத்து இங்கு இட்டுவிடலாம். பதிவேற்றம் தேவையில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:17, 18 செப்டம்பர் 2013 (UTC)

Y ஆயிற்று --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:46, 18 செப்டம்பர் 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

பதக்கம்

நடப்பு நிகழ்வுகள் பதக்கம்
நடப்பு நிகழ்வுகளை உடனடியாக கட்டுரைகளாக மாற்றத் துடிக்கும் உங்களின் ஆர்வம், பாராட்டுதலுக்குரியது! மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:54, 20 செப்டம்பர் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Muthuppandy pandian!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--நந்தகுமார் (பேச்சு) 06:25, 28 செப்டம்பர் 2013 (UTC)

தலைப்பு

வணக்கம் முத்துப்பாண்டி, விக்கிப்பீடியா தலைப்புகளில் பதவிப் பெயர்களோ, பட்டப்பெயர்களோ சேர்ப்பதில்லை. முழுப் பெயர் அல்லது பொதுவான பெயர்களையே தலைப்பிடலாம். அந்த வகையிலேயே மணீஷ் ஷா என்ற தலைப்பிற்கு மாற்றினேன்.--Kanags \உரையாடுக 08:02, 21 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்....

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் 'பாராட்டுச் சான்றிதழ்' வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:25, 27 செப்டம்பர் 2013 (UTC)

வணக்கம், Muthuppandy pandian!

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:38, 2 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பிழைகள் திருத்தப்பட்டன...

வணக்கம்! நீங்கள் சுட்டிக்காட்டிய குஜராத் தலைநகர் காந்திநகர், பள்ளிக்கூடம் - பள்ளிவாசல் போன்ற பிழைகள் தற்போது களையப்பட்டுவிட்டன. பள்ளிக்கூடம் குறித்த பிழையினை Kanags திருத்தியுள்ளார். பிழைகளை சுட்டிக்காட்டி, தமிழின் வளர்ச்சிக்கு உதவும் உங்களின் ஆர்வம்., பாராட்டுதலுக்குரியது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:09, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:55, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா... அறிவிப்பு!


வேண்டுகோள்

வணக்கம். நடப்புச் செய்திகளுக்கு உடனுக்குடன் கட்டுரைகள் உருவாக்குவது மகிழ்ச்சி. ஒரு சிறிய வேண்டுகோள்.

  • நாளிதழ்களில் உள்ள செய்திகளில் உள்ள வாக்கியங்களை அப்படியே கட்டுரையில் தருவதைத் தவிர்த்து அவ் விவரங்களை உங்கள் சொந்த நடையில் அமைந்த வாக்கியங்களாக மாற்றித் தரும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
  • கட்டுரையின் ஆரம்பத்தில் வரும் தலைப்புச் சொல், சாய்ந்த எழுத்துக்களுக்குப் பதில், தடித்த எழுத்துகளில் இருக்க வேண்டும்.
ஆருஷி கொலை வழக்கு-தவறு.
ஆருஷி கொலை வழக்கு-சரியானது.

நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:45, 25 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

நிதியறிக்கை குறித்த கட்டுரை... இன்று பார்க்கிறேன்...

மன்னிக்கவும். உங்களுக்கு எனது வேலைப்பளு காரணமாக உதவ இயலவில்லை; இன்று கண்டிப்பாக பார்க்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:58, 13 சனவரி 2014 (UTC)[பதிலளி]

  • முதலில், இந்திய ஒன்றியத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் கட்டுரையினை எழுதியதற்காக உங்களுக்கு எனது நன்றிகளும், பாராட்டுகளும்!
  • interim budget எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் கட்டுரை எதுவும் இதுவரை எழுதப்படவில்லை. அதே போல interim budget in India அல்லது interim budget of India எனும் தலைப்பிலும் ஆங்கிலத்தில் கட்டுரை எதுவும் இதுவரை எழுதப்படவில்லை. அங்கு எழுதப்படும் வரை மொழியிடை இணைப்பினை தர இயலாது!
  • இங்கு எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது... இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவில் மட்டும்தான் நடைமுறையில் இருக்கிறதா அல்லது உலகின் பிற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறதா? இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பது உலக நாடுகளுக்குப் பொதுவானது என்றால், இடைக்கால நிதிநிலை அறிக்கை எனும் கட்டுரையினையும் நீங்கள் எழுதுங்கள்! நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:25, 14 சனவரி 2014 (UTC)[பதிலளி]

தமிழ் தட்டச்சில் பிரச்சினை...

வணக்கம். இந்தப் பிரச்சினை எனக்கும் ஏற்பட்டது. இது ஒரு தாற்காலிக பிரச்சினை, தொழினுட்பக் குழு பணிபுரிந்து வருவதாக உணர்கிறேன். உங்களின் பிரச்சினையினை இப்போதைக்கு தீர்த்துக் கொள்ள இங்கு பாருங்கள். இன்னமும் பிரச்சினை தீரவில்லை எனில் மீண்டும் கேளுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 23:12, 22 சனவரி 2014 (UTC)[பதிலளி]

விக்கிசெய்தி

செய்தி எழுதுவதில் ஆர்வமிருந்தால் விக்கிசெய்தியில் பங்களிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 08:56, 27 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்கள் பார்வைக்கு

பேச்சு:கல்சா மஹால் இங்கு பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 13:19, 7 பெப்ரவரி 2014 (UTC)

’கலச மஹால்’ என்று தலைப்பை மாற்றியிருக்கிறேன்.

படிமம்:Dryocalamus.jpg:

இது கோவையில் ஒரு வீட்டின் ஃபிரிட்ஜில் ’புதினாக்கீரைக் கட்டுக்குள் பாம்பு’ இருந்ததாக நாளிதழில் வந்த படம் போலவே உள்ளது. இப்படிமம் உங்களது சொந்த ஆக்கம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பதிப்புரிமைச் சிக்கல் இருந்துவிடக்கூடாது என்பதால், நீங்கள் எப்படி இப்படம் எடுத்தீர்கள் என்று தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 14:57, 15 பெப்ரவரி 2014 (UTC)

பாம்பு படிமப் பக்கத்தின் உரையாடல் பகுதியில் நான் நீக்கல் வேண்டுகோள் இட வேண்டுமாயின் தகுந்த காரணம் தரவேண்டும். காரணம் குறிப்பிடாமல் நீக்க முடியாது. நீங்கள் படத்தை தரவிறக்கிய தளப்பக்க முகவரி தந்தால் அதைக் குறிப்பிட்டு, நீக்கல் வேண்டுகோளை முன்வைக்கலாம்.--Booradleyp1 (பேச்சு) 14:16, 17 பெப்ரவரி 2014 (UTC)

மன்னிக்கவும்...

வணக்கம்! இன்று கவனித்து, சொல்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:21, 25 பெப்ரவரி 2014 (UTC)

கவனிக்கப்பட்டது.... பார்க்க... பயனர் பேச்சு:தகவலுழவன்#உதவி தேவை...--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 03:53, 8 மார்ச் 2014 (UTC)

பிறப்புகள்

பிறப்புகள், இறப்புகள் பற்றிய தகவல்களைத் தரும் போது இறந்தார், பிறந்தார் போன்ற சொற்களைத் தவிருங்கள். இந்த மாற்றத்தைக் கவனியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 05:57, 22 மார்ச் 2014 (UTC)

கேப் அர்கோனா...

வணக்கம்! இந்தக் கட்டுரைக்கு 'வேலை நடக்கிறது' வார்ப்புரு இட்டுள்ளேன். கட்டுரையினை முழுமை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:54, 12 மே 2014 (UTC)[பதிலளி]


உங்களுக்குத் தெரியுமா அறிவிப்பு


தகவல்

//அமெரிக்காவிற்கான முதல் பெண் தூதராக விஜயலட்சுமி பண்டிட் பதவியேற்றார்.// இவர் அமெரிக்காவுக்கான முதலாவது இந்தியப் பெண் தூதரா, அல்லது பொதுவாகவே அமெரிக்காவில் பதவியேற்ற முதலாவது வெளிநாட்டுப் பெண் தூதரா?--Kanags \உரையாடுக 05:54, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]

நான் கேட்டதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது. அமெரிக்காவில் வேறு எந்த நாடும் தனது பெண் தூதர்களை 1949 மே 12 இற்கு முன்னர் நியமிக்கவில்லையா? இந்தியா தான் முதலில் ஒரு பெண்ணை அனுப்பியதா?--Kanags \உரையாடுக 06:52, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]
இவர் அமெரிக்காவுக்கான இந்தியாவின் முதலாவது பெண் தூதர் ஆக இருக்க வேண்டும். சரி தானே.--Kanags \உரையாடுக 06:54, 5 சூன் 2014 (UTC)[பதிலளி]

இந்தத் திருத்தத்தைக் கவனியுங்கள்

[1]. இறப்புகள், பிறப்புகள் எழுதும் போது இந்நடைமுறையைப் பின்பற்றுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 12:06, 10 சூன் 2014 (UTC)[பதிலளி]

சில பரிந்துரைகள்...

வணக்கம்!

நோய் கட்டுரை தற்போது விரிவாக்கத்தில் உள்ளது, கவனியுங்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:04, 21 சூன் 2014 (UTC)[பதிலளி]

மீண்டும் நினைவு படுத்துகிறேன்

[2].--Kanags \உரையாடுக 09:28, 20 சூன் 2014 (UTC)[பதிலளி]

பதிப்புரிமை மீறல் - படிமங்கள்

வணக்கம், Muthuppandy pandian!

தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.


படிமம்:The World Before Her.jpg இப்படிமத்தில் முறையான வார்ப்புருவை இணைத்துள்ளேன். அவ்வாறே நீங்கள் பதிவேற்றிய படிமங்கள் ஆனைத்திற்கும் முறையான வார்ப்புருக்களை இணையுங்கள். கட்டற்ற முறையில் பயன்படுத்த முடியாத படிமங்கள் நீக்கப்படும். மேலதிக உதவி தேவையெனின் குறிப்பிடுங்கள். நன்றி. --AntonTalk 05:03, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]

உங்கள் கவனத்திற்கு

வணக்கம், முத்துப்பாண்டியன். புனிதா குமார் சின்ஹா கட்டுரையைச் சற்றுக் கவனிக்கவும். அதில் தரப்பட்டுள்ள மேற்கோள்களில் உள்ள விவரங்களும் கட்டுரையும் சற்று முரண்படுகிறது. (அவரது தற்போதைய பதவி, முனைவர் பட்டம்...) தேவையான மாற்றங்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:51, 26 சூன் 2014 (UTC)[பதிலளி]

உதவிக்கு நன்றி!

வணக்கம் முத்துப்பாண்டி! எடப்பாள் ஊராட்சி என்ற கட்டுரையில் திருத்தம் மேற்கொண்டமைக்கு நன்றி! இருந்தபோதும், அதில் மண்டலம் என்ற சொல்லே சரியானது. எனவே, உங்கள் திருத்தத்தை மீட்டமைத்திருக்கிறேன். நான் எழுதும் கட்டுரைகளில் உரை திருத்தி உதவுவதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:50, 24 சூலை 2014 (UTC)[பதிலளி]

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

அனைவரும் வருக
அனைவரும் வருக

வணக்கம் Muthuppandy pandian!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:19, 30 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

ஆண்டுகள்

ஆண்டுகள், நாள்கள் பக்கங்களை இற்றைப்படுத்துவதற்கு எனது நன்றிகள். ஒரு குறிப்பு: கடைசி தாசுமானியப் புலி இறந்தது என்பது ஒரு செய்தி. அதனை இறப்புகள் பகுதியில் சேர்ப்பதில்லை. நபர்களின் இறப்புகளை மட்டுமே இப்பகுதியில் சேருங்கள்.--Kanags \உரையாடுக 07:22, 2 ஏப்ரல் 2015 (UTC)

உங்கள் பார்வைக்கு

பேச்சு:ஐவி பீட்டர் பார்க்கவும்.--Booradleyp1 (பேச்சு) 15:44, 3 ஏப்ரல் 2015 (UTC)

தானியங்கி வரவேற்பு

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:06, 7 மே 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...

  1. பார்க்கவும்: பேச்சு:முள்ளலகி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:40, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]
  2. காட்டு திரட்சை என்பது சரியா அல்லது காட்டு திராட்சை என்பது சரியா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:05, 11 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:17, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

விரைவு நீக்கம்

இத்தொகுப்புக்கான இத்தொகுப்புக்கான காரணத்தை இங்கோ அல்லது அங்கோ உடன் குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 13:23, 29 அக்டோபர் 2015 (UTC) [பதிலளி]

கவனிக்க

கட்டுரைகளில் unreferenced வார்ப்புரு சேர்க்கும் போது date ஐ இணைக்காதீர்கள். அவை கவனிக்காமலே போய்விடக்கூடும்.--Kanags \உரையாடுக 22:37, 30 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்

இந்த மாற்றங்களைக் கவனியுங்கள். தலைப்பு மாற்றத்தையும் கவனியுங்கள்.--Kanags \உரையாடுக 08:07, 5 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நீக்கல் வார்ப்புரு

இவை போன்ற கட்டுரைகளுக்கு எதற்காக நீக்கல் வார்ப்புரு?--Kanags \உரையாடுக 10:05, 26 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

உங்கள் கடைசி இரண்டு தொகுப்புகள்

உங்கள் கடைசி இரண்டு தொகுப்புகளை நீக்கியிருக்கிறேன். அவை விக்கிப்பீடியாவில் இடம்பெறத் தகுந்த தொகுப்புகள் அல்ல. பிரேசிலில் 48 மணி நேரத்துக்கு வாட்சப் தடை செய்யப்பட்ட செய்தியை வாட்சப் குறுங்கட்டுரையில் எவ்வாறு சேர்க்கலாம். அத்துடன் அச்செய்தியை சேர்த்து விட்டு unreferenced வார்ப்புருவையும் நீக்கியுள்ளீர்கள். இது ஏற்புடையதல்ல.--Kanags \உரையாடுக 07:44, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஒரு பயனருக்கு அவரது பேச்சுப் பக்கத்தில் தகவலிடும் போது அதனை அப்பக்கத்தின் இறுதியில் தெரிவியுங்கள். இடையிலோ அல்லது மேற்பகுதியிலோ தருவது எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை.--Kanags \உரையாடுக 08:24, 18 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
செய்திகளாக இடம்பிடித்தவை எல்லாம் "கலைக்களஞ்சியம்" ஆகாது. இதைப் பாருங்கள்: {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}} --AntanO 04:23, 19 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

தற்காவல்

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். --நந்தகுமார் (பேச்சு) 13:21, 8 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நீக்கல்

கட்டுரை ஒன்றில் நீக்கல் வார்ப்புரு சேர்க்கும் போது, அதனை எதற்காக நீக்க வேண்டும் என்று சுருக்கமாகக் குறிப்பிடுங்கள். உ+ம்: {{நீக்குக|கலைக்களஞ்சியக் கட்டுரை அல்ல}} என்பது போல.--Kanags \உரையாடுக 11:52, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

தலைப்புக்கள்

தலைப்புக்களின் பெயர் ஒரு கருத்துக் கொண்ட பெயரில் அல்லது சிக்கலான பெயரில் இருந்தால் மாத்திரம் அடைப்புக்குறிக்குள் தொடர்புபட்ட பெயரினை வழங்குங்கள். எ.கா: நச்சுக்கொட்டை கீரை என்பதற்கு தாவரம் என்று குறிககத் தேவையில்லை. முன்னமும் பல தலைப்புக்களை நகர்த்தியுள்ளேன். வருங்காலங்களில் தலைப்பிடும்போது இதனைக் கருத்திற் கொள்ளுங்கள். நன்றி. --AntanO 07:18, 22 சனவரி 2016 (UTC)[பதிலளி]

மீண்டும் அறிவுறுத்துகிறேன், தயவு செய்து தலைப்பிடுதலை சரியாக மேற் கொள்ளுங்கள். இந்த மாற்றத்தினையும் கவனியுங்கள். --AntanO 15:01, 17 பெப்ரவரி 2016 (UTC)
மீண்டும் மீண்டும் அறிவுறுத்துகிறேன், தலைப்பிடுதலை சரியாக மேற் கொள்ளுங்கள். --AntanO 08:47, 24 பெப்ரவரி 2016 (UTC)

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்


பதக்கம்

தாவரவியல் பதக்கம்
தாவரங்கள், மிருகங்கள் குறித்த கட்டுரைகள் எழுதவதற்காக இப்பதக்கம். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- மாதவன்  ( பேச்சு ) 08:06, 24 பெப்ரவரி 2016 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Muthuppandy_pandian&oldid=2028159" இலிருந்து மீள்விக்கப்பட்டது