சிறப்புருவகம்
தோற்றம்
ஒன்றைச் சிறந்த பொருள்களோடு சேர்த்து உருவகப்படுத்துவது சிறப்புருவகம் (சிறப்பு உருவகம்) ஆகும். [1]
பாடல் - எடுத்துக்காட்டு
விரி கடல் சூழ் மேதினி நான்முகன் மீகான் ஆகச்
சுர நதி பாய் உச்சி தொடுத்த - அரி திருத் தாள்
கூம்பாக எப் பொருளும் கொண்ட பெரு நாவாய்
ஆம் பொலிவிற்று ஆயினதால் இன்று [2]
பாடல் செய்தி
இப் பாடலில் உலகம் நாவாய் என்னும் கப்பலாக உருவகம் செய்யப்பட்டுள்ளது.
நான்முகன் நாவாய் செலுத்தும் மீகாமன்.
திருமால் தன் கால் தப்படியால் அளந்த வானுலகக் கங்கை (சுர நதி) நாவாயின் கூம்பு
இப்படி அந்த நாவாய்க்கப்பல் பொலிவுற்று விளங்குகிறது.
அணி விளக்கம்
உலகம் என்னும் கப்பல் பிரமன், திருமால், வானுலகக் கங்கை முதலான சிறந்த பொருள்களாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இது சிறப்பு உருவகம்.