சிறக்கல், கண்ணூர்
சிறக்கல் | |
|---|---|
புறநகர் | |
| சிறக்கல் | |
| ஆள்கூறுகள்: 11°53′N 75°22′E / 11.89°N 75.37°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | கண்ணூர் |
| அரசு | |
| • வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
| • நிர்வாகம் | சிறக்கல் ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 13.56 km2 (5.24 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 45,601 |
| • அடர்த்தி | 3,400/km2 (8,700/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 670011 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
| வாகனப் பதிவு | KL-13 |
| சட்டமன்றத் தொகுதி | அழீக்கோடு |
| மக்களவைத் தொகுதி | கண்ணூர் |
சிறக்கல் (Chirakkal, Kannur) என்பது கேரள மாநிலத்தின், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராகும். இது கண்ணூர் நகரின் புறநகர்ப் பகுதியாக, சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது.
வரலாறு
[தொகு]
இப்பகுதியின் முந்தைய அரச மரபினரான கோலாத்திரியின் கோயிலகம் (மலையாள மொழியில் "அரண்மனை") சிறக்கல்லில் உள்ளது. சிறக்கலின் கோலத்திரி, சிறக்கல் ராஜா என்றும் அழைக்கப்பட்டார். அதே குடும்பத்தின் தெற்குக் கிளையினர் வேணாட்டை ஆண்டனர். இன்று அக்குடும்பம் திருவிதாங்கூர் அரச குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.
கோலத்திரிகள் கி.பி. முதல் நூற்றாண்டில் வட கேரத்தை ஆண்ட மூசிக மன்னர்களின் வாரிசுகள் ஆவர். இந்த வம்சத்தின் விரிவான வரலாறும், இந்தப் பகுதியின் மறைக்கப்பட்ட வரலாறும் கி. பி பத்தாம் நூற்றாண்டில் அதுலன் எழுதிய "மூசிக வம்சம்" என்ற சமசுகிருத கவிதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூசிக வம்சம் நூலானது வட கேரள வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆரம்பகால சமசுகிருத நூல்களில் ஒன்றாக நம்பப்படுகிறது.
கோலத்திரிகள் கோழிக்கோட்டின் சாமூத்திரிகளின் (சாமோரின்) அரசியல், வணிகப் போட்டியாளர்களாக இருந்தனர்.
தற்போது காசர்கோடில் உள்ள பேக்கால் கோட்டையும், சந்திரகிரி கோட்டையும் சிவப்ப நாயக்கரின் கொளத்துநாடு படையெடுப்பு காலம் வரை சிறக்கல் அரசரின் கீழ் இருந்தன. நாட்டுப்புற கலைஞர்கள் குறிப்பாக தெய்யம் கலைஞர்கள் சிறக்கல் அரசரின் அங்கீகாரம் பெற்றவர்களாக பரவலாக கருதப்படுகிறது. அவர்களில் மிகவும் திறமையானவர்கள் சிறக்கல் அரசரிடமிருந்து 'பட்டும் வளையும்' (பட்டுத் துணியும், தங்க காப்பும்) அங்கீகாரமாகப் பெற்றனர்.
மக்கள்வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.48 சதுர கிமீ (5.20 சதுர மைல்) பரப்பளவு கொண்ட சிறக்கல்லின் மக்கள் தொகை 45,601 ஆகும். இதில் ஆண்கள் 21,123 பேரும், பெண்கள் 24,478 பேரும் உள்ளனர். 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4902 ஆகவும், அதில் ஆறு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை 2412 ஆகவும், ஆறு வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2490 என்றும் உள்ளது.
சிறக்கல்லின் சராசரி கல்வியறிவு விகிதம் 96.05% ஆகும். அதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 97.57% என்றும், பெண் கல்வியறிவு விகிதம் 94.77% என்றும் உள்ளது. சிறக்கல்லில், பெண் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1159 என்று உள்ளது. குழந்தைகளின் பாலின விகிதம் ஆறு வயதுக்குட்பட்ட 1000 ஆண் குழந்தைகளுக்கு 1032 பெண் குழந்தைகள் என்று உள்ளது. சிறக்கல்லில் மொத்தம் 9599 வீடுகள் உள்ளன. [1]
பிரபலமானவர்கள்
[தொகு]கேரள முன்னாள் முதலமைச்சர் திரு கே. கருணாகரன் 1918 ஆம் ஆண்டு சிறக்கல்லில் பிறந்தார்.
படக்காட்சியகம்
[தொகு]- சிறக்கல் சிர
- சிறக்கல் தேவாலயம்
- கடலாயில் கொடியேற்றம்
- கன்ஹிரதாரா
- சிரக்கல் சிராவில் உள்ள நீர் அல்லிகளுக்கு மத்தியில் ஒரு சாம்பல் நாரை
- சிரக்கல் சிராவில் ஒரு உண்ணிக்கொக்கு
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Kannur (PDF). Thiruvananthapuram: Directorate of Census Operations, Kerala. p. 186,187. Retrieved 14 July 2020.