சிர்க்கோனியம் முப்புளோரைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டிரைபுளோரோசிர்க்கோனியம்
| |
வேறு பெயர்கள்
சிர்க்கோனியம்(III) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13814-22-7 | |
பண்புகள் | |
ZrF3 | |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
அடர்த்தி | 4,26 கி/செ.மீ3 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சிர்க்கோனியம் முப்புளோரைடு (Zirconium trifluoride) என்பது ZrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சிர்க்கோனியமும் ஐதரோபுளோரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சிர்க்கோனியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]தோராயமாக 350° செல்சியசு வெப்பநிலையில் சிர்க்கோனியம் டெட்ராபுளோரைடின் மெல்லிய அடுக்குகளில் அணு ஐதரசனின் செயல்பாட்டின் மூலம் சிர்க்கோனியம் இருபுளோரைடைத் தயாரிக்கலாம்.[2][3]
ஐதரசன் புளோரைடும் ஐதரசனும் சேர்ந்த கலவையுடன் ஐதரசனேற்றம் செய்யப்பட்ட சிர்க்கோனியத்துடன் சேர்த்து 750 °செல்சியசு வெப்பநிலையில் வினைபுரியச் செய்வதன் மூலம் சிர்க்கோனியம்(III) புளோரைடைப் பெறலாம்.[4]
- 2 Zr + 6 HF ⟶ 2 ZrF3 + 3 H2
650 பாகை செல்சியசு வெப்பநிலையில் அமோனியம் அறுபுளோரோசிர்க்கோனேட்டுடன் ஐதரசனைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் சிர்க்கோனியம்(III) புளோரைடைப் பெறலாம்.[5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]Pm3m என்ற இடக்குழுவில் சிர்க்கோனியம் முப்புளோரைடு கனசதுரப் படிக வடிவில் படிகமாகிறது.
சூடான நீரில் சிறிது கரையும். சூடான அமிலங்களிலும் சிறிது கரையும். சோடியம் ஐதராக்சைடு மற்றும் அம்மோனியா கரைசலில் கரையாது. இதன் படிக அமைப்பு இரேனியம்(VI) ஆக்சைடுக்கு ஒத்திருக்கிறது.[4]
வேதிப்பண்புகள்
[தொகு]சிர்க்கோனியம் முப்புளோரைடு 1300 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது சிர்க்கோனியம் டெட்ராபுளோரைடுக்கு விகிதாசாரமாகிறது.[3]
- 4 ZrF3 -> 3 ZrF4 + Zr
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zirconium trifluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.
- ↑ 3.0 3.1 McTaggart, F. K.; Turnbull, A. G. (1964). "Zirconium difluoride" (in en). Australian Journal of Chemistry 17 (7): 727–730. doi:10.1071/ch9640727. பன்னாட்டுத் தர தொடர் எண்:1445-0038. https://www.publish.csiro.au/CH/CH9640727. பார்த்த நாள்: 19 July 2024.
- ↑ 4.0 4.1 Georg Brauer (Hrsg.), unter Mitarbeit von Marianne Baudler u. a.: Handbuch der Präparativen Anorganischen Chemie. 3., umgearbeitete Auflage. Band I, Ferdinand Enke, Stuttgart 1975, ISBN 3-432-02328-6, S. 259.
- ↑ Paul Ehrlich, Fritz Plöger, Ernst Koch, Gustav Kaupa: Über Zirkonium(III)-fluorid. Versuche zur Darstellung von Thorium(III)-fluorid. In: Zeitschrift für anorganische und allgemeine Chemie. 333, 1964, S. 209–215, எஆசு:10.1002/zaac.19643330407.