உள்ளடக்கத்துக்குச் செல்

சிர்கெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்கெலைட்டு
Zirkelite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடு(Ti,Ca,Zr)O(2-x)
இனங்காணல்
நிறம்கருப்பு,செம்பழுப்பு
படிக இயல்புபடிகம், படிக உருவழிந்த, போலி கனசதுரம்
படிக அமைப்புசம அளவு
பிளப்புஏதுமில்லை
முறிவுநொறுங்கும்
மிளிர்வுசெயற்கைப் பிசின் பளபளப்பு
கீற்றுவண்ணம்சாம்பல் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைதாழ் ஒளிகசிவு முதல் ஒளிபுகா நிலை [1]
அடர்த்தி4.7

சிர்கெலைட்டு (Zirkelite) is an oxide mineral with formula: (Ca,Th,Ce)Zr(Ti,Nb)2O7 என்ற வாய்ப்பாடு கொண்ட ஒரு ஆக்சைடு கனிமம் ஆகும். நுண்ணிய அளவில் சம அளவு படிமங்களாக இக்கனிமம் தோன்றுகிறது மற்றும் உருவாகிறது. கருப்பு, பழுப்பு, அல்லது மஞ்சள் நிறத்தில் 5.5 என்ற கடினத்தன்மை மதிப்பும் 4.7 என்ற அடர்த்தி எண்ணும் கொண்ட கனிமமாக இது காணப்படுகிறது.

கண்டுபிடிப்பும் பெயரிடலும்

[தொகு]

1895 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் செருமனியைச் சேர்ந்த பாறையியலர் பெர்டிணாண்டு சிர்கெல் (1838-1912) இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார். இவரின் நினைவாக இக்கனிமத்திற்கு சிர்கெலைட்டு என்று பெயரிடப்பட்டது.

தோற்றம்

[தொகு]

தொடக்கத்தில் பிரேசில் நாட்டின் சாவோ பாவுலோ நகரில் உள்ள யாக்குபிராங்கா நகராட்சியில் கார்பனாடைட்டு வகை தீப்பாறையாக இக்கனிமம் கண்டறியப்பட்டது. கனடா, கசக்கசுதான், நார்வே, உருசியா,தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா முதலான நாடுகளிலும் சிர்கெலைட்டு கனிமம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிர்கெலைட்டு&oldid=3348554" இலிருந்து மீள்விக்கப்பட்டது