சிரோமணி அகாலி தளம் (லோங்கோவால்)
சிரோமணி அகாலி தளம் (லோங்கோவால்) (Shiromani Akali Dal-Longowal) என்பது பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோமனி அகாலி தளத்தின் பிளவுபட்ட குழுவாகும். இந்தக் கட்சி 2004-ஆம் ஆண்டில் சுர்ஜித் கவுர் பர்னாலாவினால் (எஸ்ஏடி தலைவர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் மனைவி) தொடங்கப்பட்டது. பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளம் கட்சி தேர்தலில் போட்டியிட பிரேம் சிங் சந்துமாஜ்ராவுக்கு வாய்ப்பு அளிக்காததால் புதிய கட்சியில் சேர்ந்தார். ஆனால் பின்னர், 2007-இல் மீண்டும் பாதல் தலைமையிலான தாய்க் கட்சியில் சேர்ந்தார்.
இந்தக் கட்சி பாட்டியாலா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது. ஆனால் தோல்வியடைந்தது. 2007-ஆம் ஆண்டில், கட்சி மீண்டும் பாதல் தலைமையிலான சிரோமணி அகாலி தளத்துடன் இணைந்தது.[1]
இருப்பினும், பின்னர், கட்சி மீண்டும் பிரிந்தது, 2014-ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.[2]