உள்ளடக்கத்துக்குச் செல்

சிரேயா கூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிரேயா கூடா
சுய தகவல்கள்
பிறந்த நாள்25 மே 1999 (1999-05-25) (அகவை 27)
பிறந்த இடம்சோனிபத், அரியானா, இந்தியா
உயரம்1.70 மீ[1]
ஆடும் நிலை(கள்)எல்லை காப்பாளர்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
கோகுலம் கேரளா
எண்1
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
ஹான்ஸ் கேபிடல் எஃப்சி
பிபா ஸ்போர்ட்ஸ் எஃப்சி
கோலாப்பூர் சிட்டி
2021–2022கோகுலம் கேரளா
2022–2025ஒடிசா
2025–கோகுலம் கேரளா9(0)
பன்னாட்டு வாழ்வழி‡
2014இந்தியா
2023–இந்தியா19(0)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 15 மே 2026 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 25 மே 2026 அன்று சேகரிக்கப்பட்டது.

சிரேயா கூடா (Shreya Hooda)(25 மே 1999) என்பவர் அரியானாவைச் சேர்ந்த இந்தியத் தொழில்முறைக் கால்பந்து வீராங்கனை ஆவார். இவர் இந்திய மகளிர் லீக் மன்றமான கோகுலம் கேரளா மற்றும் இந்திய மகளிர் தேசிய கால்பந்து அணிக்காக எல்லைக் காப்பாளராக விளையாடி வருகிறார்.[2] 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.[3]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

கூடா, அரியானாவின் சோனிபத்தில் பிறந்தார். தனது 13-வது வயதில் கால்பந்து விளையாடத் தொடங்கிய இவர், 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் எல்லைக் காப்பாளராக இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]

உள்நாட்டு விளையாட்டு வாழ்க்கை

[தொகு]

அரியானா மாநில அணியில் தனது தொழில் வாழ்க்கையினைத் தொடங்கிய சிரேயா, உள்நாட்டுப் போட்டிகளில் கோகுலம் கேரளா எப்சி, புட்பால் கிளப் கோலாப்பூர் சிட்டி, பிஃபா ஸ்போர்ட்ஸ் (கொலாபா) எஃப்சி, இமாச்சலப் பிரதேச எஃப்ஏ (மகளிர்) மன்றம், இமாச்சலப் பிரதேச சந்தோசு கோப்பை அணி (2017) மற்றும் ஹன்ஸ் கேபிடல் ஃபுட்பால் மன்றம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா அணியிலும் இவர் இடம்பெற்றிருந்தார்.[4] மேலும், கோகுலம் கேரளா எஃப்சி அணியுடன் இணைந்து இந்திய மகளிர் லீக் பட்டத்தையும் வென்றார்.[5] ஏஎஃப்சி மகளிர் மன்ற வாகையாளர் போட்டியில் விளையாடிய கோகுலம் கேரளா அணியிலும் இவர் அங்கம் வகித்தார்.

சர்வதேச விளையாட்டு வாழ்க்கை

[தொகு]

கூடா 2021-ல் இந்திய மூத்தோர் அணியில் அறிமுகமானார். மார்ச் 2023-ல், அம்மான் நகரில் உள்ள பெட்ரா மைதானத்தில் ஜோர்டான் அணிக்கு எதிராக இலக்கு ஏதுமின்றி சமநிலையில் (0-0) முடிந்த ஆட்டத்தில் விளையாடிய இந்திய மூத்தோர் அணியில் இவர் இடம்பெற்றிருந்தார்.[6] அக்டோபர் மாதம் நடைபெற்ற ஏஎஃப்சி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான (இரண்டாம் சுற்று) 34 பேர் கொண்ட இந்திய மூத்தோர் அணியின் உத்தேசப் பட்டியலில் சூலை 2023-ல் இவர் இடம் பெற்றார்.[7] ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் சீன தைபே அணிக்கு எதிராக சிரேயா முழு நேர எல்லைக் காப்பாளராக விளையாடினார். இந்த ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

தொழில்முறை புள்ளிவிவரங்கள்

[தொகு]

சர்வதேச அளவில்

[தொகு]
25 மே 2026. அன்று இருந்த தகவல்களின் படி
தேசிய அணி ஆண்டு ஆட்டங்கள் இலக்கு
இந்தியா 2021 1 0
2022 0 0
2023 8 0
2024 3 0
2025 3 0
2026 4 0
மொத்தம் 19 0

வெற்றிகள்

[தொகு]

இந்தியா

[தொகு]

SAFF மகளிர் சாம்பியன்ஷிப்: 2026

கோகுலம் கேரளா

[தொகு]

இந்திய மகளிர் லீக்: 2021–22

ஒடிசா

[தொகு]

இந்திய மகளிர் லீக்: 2023–24[1]

அரியானா

[தொகு]

ராஜமாதா ஜிஜாபாய் கோப்பை - இரண்டாம் இடம்: 2022–23[2]

தனிநபர்

[தொகு]

இந்திய மகளிர் லீக் சிறந்த கோல்கீப்பர்: 2023–24

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "2026 AFC Women's Asian Cup Squad Lists" (PDF). Asian Football Confederation. Retrieved 27 February 2026.
  2. ↑ "Player Profile: Shreya Hooda". www.the-aiff.com. Retrieved 20 September 2023.
  3. ↑ "Indian Football Team full Schedule with Asian Games: Dates, squad, men's and women's teams". Sportstar (in ஆங்கிலம்). 8 August 2023. Retrieved 8 September 2023.
  4. 1 2 "Odisha FC". Odisha FC. Retrieved 8 September 2023.
  5. ↑ "Odisha FC Women make statement signing in Shreya Hooda!". Arunava about Football (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 7 August 2022. Retrieved 8 September 2023.
  6. ↑ "India senior women's football team play goalless draw against Jordan". risingkashmir.com. Retrieved 8 September 2023.
  7. ↑ IANS (26 July 2023). "Indian Women's Football Team; 34 players selected for training camp in Bhubaneswar". www.thestatesman.com. Retrieved 9 September 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரேயா_கூடா&oldid=4666737" இலிருந்து மீள்விக்கப்பட்டது